வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம் – உள்ளே சென்று பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி

மனைவி இறந்த சோகத்தில் தான் வளர்த்த நாயோடு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் சின்ன சாயகார தெருவில் பட்டு சேலை வியாபாரம் செய்யும் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டின் முதல் மாடியில் கடந்த இரண்டு வருங்களாக ராஜ் (50) என்பவர் வாடகைக்கு குடியிருந்து துணி தைக்கும் டைலராக பணிபுரிந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ராஜ், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக … Read more

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1.46 லட்சம் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1.46 லட்சம் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நடப்பாண்டுக்கான நீட் தேர்வு, கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. இதில், தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 45,988 மாணவர்கள் பங்கேற்றனர். தேசிய தேர்வு முகமையிடம் (என்டிஏ) இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் பெறப்பட்டு, தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் … Read more

பழனியப்பனுக்கு 'நோ' பவர்.. கறார் காட்டும் மு.க.ஸ்டாலின்- பின்னணி என்ன?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தனது பணியை தீவிரப்படுத்தி வருகின்றன. 2024 ஏப்ரல் அல்லது மே மாதம் தான் தேர்தல் வர வாய்ப்புள்ளது என்றாலும் கூட்டணி, தேர்தல் அறிக்கை, பிரச்சார வியூகம் என அரசியல் கட்சிகள் தங்களது பணியை தொடங்கிவிட்டன. குறிப்பாக ஆளுங்கட்சியான எப்படியாவது 39 தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில் வேலை செய்து வருவதாக உடன் பிறப்புகள் கூறுகின்றன. அதன் வெளிபாடே முதலமைச்சர் பம்பரமாக சுழன்று வருகிறார் என்றும் உடல் நலக்குறைவு … Read more

டூவீலர் மோதியதில் பஸ் தீப்பிடித்து எரிந்து மாணவன் பலி

ஒட்டன்சத்திரம்: மதுரையிலிருந்து 40 பயணிகளுடன் கோயம்புத்தூர் நோக்கி அரசு பஸ் நேற்று சென்றுகொண்டிருந்தது. பஸ்சை கோயம்புத்தூரைச் சேர்ந்த சிவக்குமார் ஓட்டினார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் பஸ் சென்றபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த 12ம் வகுப்பு மாணவன் பிரவீன் (17) ஓட்டி வந்த டூவீலர், பஸ் முன்பகுதியில் மோதியது. இதில், டூவீலரின் பெட்ரோல் டேங்க் திறந்ததால் பஸ் தீப்பிடித்து எரிய துவங்கியது. இதில் பிரவீன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். அவருடன் வந்த மாணவர்கள் ஆகாஷ், … Read more

சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி: அதிகாரிகளின் அலட்சியம் – மீண்டும் மீண்டும் மயக்கமடைந்த மாணவி

திருவாரூர் அருகே பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளின் அலட்சியத்தாலர் மயக்கம் அடைந்த மாணவியை அழைத்து செல்ல ஆசிரியை இல்லாத சக மாணவிகள் தூக்கிச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சரியாக 10 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்ட பள்ளிக்கல்வித் துறை நிர்வாகிகள் மாணவிகளை … Read more

கொஞ்சம் மசாலா போதும்! 5 நிமிடத்தில் ஸ்பைசி முட்டை ரோஸ்ட் இப்படி பண்ணுங்க

உலகம் முழுவதும் முட்டை மிகவும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு. இது பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. முட்டையால் செய்யப்பட்ட உணவைத் தயாரிக்க 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். மேலும், இது துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்களில் நிறைந்துள்ளது, அனைத்து புரதங்களிலும் மிக முக்கியமானது. இந்த புரோட்டீன் நிறைந்த உணவு உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கும். இங்கு சுவையான முட்டை மசாலா அல்லது முட்டை ரோஸ்ட் ரெசிபி எப்படி செய்வது என்பதை … Read more

தமிழகத்தில் இன்று (செப்-8) இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்..8) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை வேட்டவலம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. மதுரை மதுரை மாவட்டம் சமயநல்லூா் மின்கோட்டம் கொண்டையம்பட்டி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட … Read more

ஏற்காடு மலைப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை.. 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் மழையால் சேலம் மாநகர் நான்குரோடு பகுதியில் உள்ள ஓடையின் வழியாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடி சாமிநாதபுரம், தோப்புக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனிடையே, கனமழையால் ஏற்காடு மலைப்பாதையில் 50-க்கும் … Read more

இன்று ஓணம் பண்டிகை கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: கேரளத்தின் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி, ஆளுநர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: அழகிய ஓணம் திருநாள் மக்களின் மகிழ்ச்சி மற்றும் வளமைக்கான அறுவடைத் திருநாளாகும். இந்நாளில் ஒளிவிடும் பல்வேறு வண்ணங்கள் நம் அனைவருக்குமான அன்பையும், சகோதரத்துவத்தையும், வலிமையுறச் செய்யட்டும். மாமன்னன் மகாபலியின் வாழ்த்துகள் இந்த அம்ருத காலத்தில் நம் இந்தியத் திருநாட்டின் … Read more