மதுரை விமான நிலையத்திற்கு தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீரா? – கவுன்சிலர்கள் எதிர்ப்பால் அமளி
மதுரை: பெரியார் குடிநீர் திட்டத்தில் மதுரை விமான நிலையத்திற்கு தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்வதற்கு மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். மேயர் இந்திராணி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில், “எரியாத 55 ஆயிரம் தெரு விளக்குகள் பழுதுப்பார்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தெருவிளக்குகள் … Read more