முதல்வர் ஸ்டாலின் 50-வது திருமண நாள்: மனைவி துர்காவுடன் சென்று தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 50-வது திருமண நாளை முன் விட்டு, கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளிடம், மனைவி துர்காவுடன் சென்று வாழ்த்து பெற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் – துர்கா தம்பதியினர் தங்களின் 50-வது ஆண்டு திருமண நாளை நேற்று கொண்டாடினர். இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் மற்றும் துர்கா ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். முதல்வரும். இரவு விருந்து அளித்தார். தொடர்ந்து, நேற்று காலை முதல்வர் … Read more

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரணம்: ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் தனிப்படை வாகன ஓட்டுநரை 6-வது குற்றவாளியாக சேர்த்து, ஒரே மாதத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார், நகை திருட்டு புகார் தொடர்பாக தனிப்படை காவலர்கள் விசாரணை நடத்தியபோது தாக்கியதில் உயிரிழந்தார். இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்குபதிவு செய்து, தனிப்படை காவலர்கள் 5 பேரை கைது செய்தனர். இந்நிலையில், அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி … Read more

ஆக.30-ல் நாதகவின் ‘மரங்களின் மாநாடு’ நடக்கும் இடத்தை பார்வையிட்ட சீமான்!

திருத்தணி: நாம் தமிழர் கட்சி சார்பில் திருத்தணி அருகே அருங்குளத்தில் ஆகஸ்ட் 30-ம் தேதி மரங்களின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான இடத்தை இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் பார்வையிட்டார். நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில், ஆகஸ்ட் 30-ம் தேதி ‘மரங்களோடு பேசுவோம்; மரங்களுக்காகப் பேசுவோம்!’ என்ற தலைப் பில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் மரங்களின் மாநாடு நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சியின் … Read more

விருதுநகர் அருகே ரயிலில் அடிபட்டு 3 பெண்கள் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் அருகே நேற்று மாலை தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி அடையாளம் தெரியாத 3 பெண்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். விருதுநகர் பட்டம்புதூர் ரயில்வே கிராசிங் அருகே மதுரை – குமரி ரயில்வே இருப்புப் பாதையில் புதன்கிழமை மாலை திருவனந்தபுரத்திலிருந்து திருச்சி நோக்கி செல்லும் இன்டர்சிட்டி ரயில் மோதியதில் 3 பெண்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஒருவரது கையில் தர்மர் – ராஜேஸ்வரி என்று பச்சை குத்தப்பட்டுள்ளது. … Read more

ஆசிரியர் வாரிய தேர்வு, கூட்டுறவு வங்கி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? முக்கிய அப்டேட்

Free Coaching, Tamilnadu : ஆசிரியர் வாரிய தேர்வு, கூட்டுறவு வங்கி தயாராகும் இளைஞர்களுக்கு சேலம், கரூர் மாவட்ட நிர்வாகங்களின் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

“இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சி!” – ‘பதவிப் பறிப்பு’ மசோதா மீது மு.க.ஸ்டாலின் காட்டம்

சென்னை: பிரதமருக்குக் கீழான சர்வாதிகார நாடாக இந்தியாவை மாற்றுவதன் மூலம் மத்திய பாஜக அரசு அரசியலமைப்புச் சட்டத்தையும் அதன் மக்களாட்சி அடித்தளத்தையும் களங்கப்படுத்த முடிவெடுத்துவிட்டது என்று பிரதமர், முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் சட்ட மசோதா குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “இந்த 130-வது அரசியல் சட்டத் திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல, இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கொடுஞ்சட்டம். … Read more

பதவி பறிப்பு மசோதா.. "சர்வாதிகாரங்கள் இப்படித்தான் தொடங்குகின்றன",, முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கருப்பு மசோதா என்றும் சர்வாதிகாரங்கள் இப்படித்தான் தொடங்குகின்றன என்றும் பதவி பறிப்பு மசோதாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.   

ஒடிசா பெண்ணுக்கு முதல் உதவி அளித்து பிரசவிக்க உதவிய பெண் காவலருக்கு டிஜிபி நேரில் பாராட்டு!

சென்னை: மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஒடிசா பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு முதல் உதவி அளித்து, பிரசவிக்க உதவினார். இதையறிந்த டிஜிபி சங்கர் ஜிவால் சம்பந்தப்பட்ட பெண் காவலரை நேரில் அழைத்து பாராட்டினார். திருப்பூர் மாவட்டத்தில், வேலம்பாளையம் காவல் நிலைய போலீஸார் அப்பகுதியில் கடந்த 16ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த பணியில் ஆயுதப்படை பெண் காவலர் கோகிலா என்பவரும் ஈடுபட்டிருந்தார். அப்போது, … Read more

விவசாயிகளுக்கு ரூ.2 கோடி கடன்! தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு அரிய வாய்ப்பு

Agriculture Loan Tamil Nadu : வேளாண் சார்ந்த தொழிலில் ஈடுபடும் விவசாயிகள் 2 கோடி ரூபாய் வரை கடன்பெற்றுக் கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

ஆகாஷ் பாஸ்கரன் விவகாரம்: அமலாக்கத் துறை உதவி இயக்குநர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறை உதவி இயக்குநர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடம் … Read more