விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டியில் இன்று மாலை கஜமுக சூரசம்ஹாரம்
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் சதுர்த்தி பெருவிழாவையொட்டி இன்று மாலை கஜமுக சூரசம்ஹாரம் நடக்கிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் உலக பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு ஆக. 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் கோயிலில் கடந்த ஆக.22ம் தேதி கொடியேற்றத்துடன் முதல்நாள் விழா துவங்கியது. 2ம் … Read more