காதல் கண் மறைக்க, பெற்றோரின் பாசத்திற்கு மறுப்பு தெரிவித்த பட்டதாரி பெண்.! 

நாகர்கோவிலில் உள்ள கோட்டார் வணிகர் வடக்கு தெருவை சேர்ந்த செல்வகுமாரி வயது 20, இவர் ஒரு பட்டதாரி. இவருக்கு வருகிற 29-ந்தேதி திருமணம் செய்ய பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமண பத்திரிகைகள் தயார் செய்யப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.  இந்நிலையில்  திடீரென வீட்டிலிருந்த செல்வகுமாரி மாயமானார். மகள் மாயமானது குறித்து அதிர்ச்சியில் இருந்த அவரது தாயார் கோட்டார் போலீசில் புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான செல்வக்குமாரியை தேடி வந்தனர்.  … Read more

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் பரவலான மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும். 27-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், … Read more

டோக்கன் கொடுத்துவிட்டு வேட்டி, சேலையை வழங்காமல் ‘எஸ்கேப்’ ஆன பாஜ நிர்வாகிகள்

ஆத்தூர்: ஆத்தூரில், டோக்கன் கொடுத்து விட்டு இலவச வேட்டி-சேலை வழங்காமல் ஓட்டம் பிடித்த பாஜ நிர்வாகிகளை, பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூரில், பாஜ சார்பில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பழைய பேருந்து நிலையம் மணிக்கூண்டு அருகே நேற்று நடைபெற்றது. இதில் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன், மாநில பட்டியலின பிரிவு துணைத்தலைவர் அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏழைகளுக்கு இலவச வேட்டி- சேலை வழங்குவதாக கூறி, … Read more

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி திண்டிவனத்தில் அதிமுக நாளை உண்ணாவிரதம்

சென்னை:” அதிமுக அரசால் அடிக்கல் நாட்டப்பட்ட, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நாளை சனிக்கிழமையன்று திண்டிவனத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டி, பல ஆண்டுகால கோரிக்கையை எனது தலைமையிலான அதிமுக அரசு கனிவுடன் ஆய்வு செய்து, கடல் நீரை குடிநீராக்கும் … Read more

ரூ.930 கோடி மோசடி வழக்கு பாசி நிறுவன நிர்வாகிகள் 2 பேருக்கு 27 ஆண்டு சிறை

கோவை: கோவையில் 930 கோடி ரூபாய் பாசி நிறுவன மோசடி வழக்கில் அதன் நிர்வாகிகள் 2 பேருக்கு 27 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி தர உத்தரவிடப்பட்டது.  திருப்பூரை தலைமையிடமாக கொண்டு கடந்த 2009ம் ஆண்டில் பாசி போரஸ் டிரேடிங் என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதியில் வசித்து வந்த மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வசூலித்தனர். ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு … Read more

மதுரை அரசு மருத்துவமனையில் ‘பார்க்கிங்’ பிரச்சனையால் அதிகரிக்கும் ஊழியர்கள் – பொதுமக்கள் மோதல்

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போதுமான ‘பார்க்கிங்’ வசதியில்லாததால் தினமும் நோயாளிகளுடன் வரும் பொதுமக்களுக்கும், ‘நோ பார்க்கிங்’-ஐ கண்காணிக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது. அதனால், மல்டிலெவல் பார்க்கிங் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தினமும் 10 ஆயிரம் வெளி நோயாளிகள், 3,500 உள் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்பட ஒரு நாளைக்கு 30 ஆயிரத்திற்கும் … Read more

வேளாண் திட்ட ஆலோசனை கூட்டம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் உள்ளாவூர் ஊராட்சியில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த கூட்டம்  இ சேவை மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் உஷா தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். துணை தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்‌. கூட்டத்தில், வேளாண் அலுவலர் ஜெயராமன் கலந்து கொண்டு கலைஞரின் ஒருங்கிணைந்த தினத்தின் கீழ் என்னென்ன பணிகள் ஊராட்சியில் செயல்பட உள்ளன என்பது குறித்து விவசாயிகளிடமும் கிராம மக்களிடமும் எடுத்துரைத்தார். அப்போது அவர் கூறுகையில், வாலாஜாபாத் … Read more

“டப்பிங், மிமிக்ரி, எடிட்டிங்…” – ஆடியோ விவகாரத்தில் சரவணன் மீது போலீஸில் மதுரை பாஜகவினர் புகார்

மதுரை: “போன் உரையாடலை மிமிக்ரி செய்து பரப்பிய முன்னாள் பாஜக நிர்வாகி சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மதுரை காவல் ஆணையரிடம் பாஜக நிர்வாகிகள் புகார் அளித்தனர். காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மதுரை ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வையொட்டி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா.சுசீந்திரனும் பேசியதாக சர்ச்சைக்குரிய ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிறது. இது குறித்து மதுரை மாவட்ட, மாநகர (பொறுப்பு) … Read more

திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் ரூ.20 லட்சத்தில் புதிய நூலக கட்டிடம்; செல்வம் எம்பி அடிக்கல் நாட்டினார்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய நூலகம் கட்டிடத்திற்கு எம்.பி.செல்வம் அடிக்கல் நாட்டினார். திருக்கழுக்குன்றம் மலையடிவாரம் பகுதியில் கடந்த 1962ம் ஆண்டு நூலகம் துவங்கப்பட்டது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகர்களை கொண்டு நூலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில், பழமையான அடிப்படை வசதிகளற்ற கட்டிடம் என்பதால் கட்டிடத்தின் மேற்கூரைகள் இடிந்தும், பக்கவாட்டு சுவர்கள் இடிந்தும், ஜன்னல், கதவுகள் சேதமாகி விட்டதால், மழைக்காலங்களில் கட்டிடத்தின் உள்ளே மழை நீர் ஒழுகி நூலகத்தின் புத்தகங்கள் நனைந்து சேதமாகி விடுகிறது. … Read more