தேர்தலுக்காக சிந்திக்கும் கட்சிகளுக்கு நடுவில் அடுத்த தலைமுறைக்காக சிந்திக்கும் கட்சி பாமக: அன்புமணி

தேர்தலுக்காக சிந்திக்கும் கட்சிகளுக்கு நடுவில் பாமக மட்டுமே அடுத்த தலைமுறைக்காக சிந்திக்கிறது, என தருமபுரியில் நடந்த பிரச்சார நடைபயணத்தின்போது அன்புமணி ராமதாஸ் எம்.பி பேசினார். தருமபுரி மாவட்ட நீர்நிலைகளுக்கு காவிரி உபரிநீரை வழங்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒகேனக்கல்லில் இருந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி நேற்று முன்தினம் பிரச்சார நடைபயணம் தொடங்கினார். 2-வது நாளான நேற்று தருமபுரி அடுத்த குரும்பட்டி டீக்கடை பகுதியில் இருந்து நடைபயணம் தொடங்கினார். சோலைக்கொட்டாய், … Read more

தூத்துக்குடி துப்பாக்கிசூடு: அறிக்கையை மறைக்கிறதா அரசு? டிடிவி சரமாரி கேள்வி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் 13 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். இதுகுறித்து விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் அண்மையில் அவர் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் எவ்வித வழிமுறைகளையும் அலுவலர்கள் பின்பற்றவில்லை என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் பரிசீலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இதுதொடர்பாக ட்வீட் போட்டுள்ளார். … Read more

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. ராமாபுரம், போரூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் நந்தனம், ஐயப்பன்தாங்கல், மாங்காடு, ஆதம்பாக்கம், ஆலந்தூர், மாம்பலம், மாங்காடு, குன்றத்தூர், பூந்தமல்லி, காசிமேடு, ராயபுரம், சென்ட்ரல், புரசைவாக்கம் பட்டாளம், ஓட்டேரி மற்றும் சூளை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு இடங்களில் கடந்த அரை மணி நேரமாக பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்துவருகிறது. கோடம்பாக்கம், கே.கே.நகர், அசோக் பில்லர், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, துரைபாக்கம், வேளச்சேரி, அண்ணாநகர் … Read more

திமுக கொண்டுவந்த இடஒதுக்கீட்டில் படிக்கவில்லை என அண்ணாமலை நிரூபிக்க தயாரா? – கார்த்திகேய சிவசேனாபதி கேள்வி

திமுக கொண்டுவந்த இடஒதுக்கீட்டில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை படிக்கவில்லை என நிரூபிக்க தயாரா என்று, திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில், “1974-ம் ஆண்டுக்கு பிறகு கொங்குபகுதியில் என்னை போல ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பலரை, உங்களை போன்று உயர் அதிகாரிகளாக உயர் இடத்துக்குஅழைத்துச்சென்றது, மறைந்த தலைவர் கருணாநிதி கொண்டுவந்த சமூகநீதிதான். 1974-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்ற அந்தஸ்தையும், கொங்கு வேளாளர் என்ற வார்த்தையையும் … Read more

தெற்கு ரயில்வேயில்தான் இந்த கொடுமை… என்னான்னு நீங்களே படிங்க!

தங்களின் நெடுந்தூர பயணங்களுக்கு பொதுமக்கள் பேருந்தைவிட ரயிலில் பயணிக்க முக்கியத்துவம் தருவதற்கு அதன் பயணக் கட்டணத்துடன், அதில் கழிப்பறை வசதி இருப்பதும் முக்கிய காரணம். இதன் காரணமாகவே நடுத்தர மற்றும் வயோதிகர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் எப்போதும் ரயிலில் பயணிக்கவே விரும்புகின்றனர். பயணிகளுக்கு ஒவ்வொரு கம்பார்ட்மென்டிலும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கானோரை சுமந்து கொண்டு பயணிக்கும் ரயில்களை இயக்கும் ஓட்டுநர்கள் பெரும்பாலானோருக்கு எஞ்சினில் கழிப்பறை வசதி இல்லை என்ற அதிர்ச்சி … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் களையெடுக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்

வல்லம்: இந்தாண்டு மேட்டூர் அணை மே மாதத்திலேயே திறக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தாண்டு குறுவை சாகுபடி இலக்கை தாண்டி நடந்துள்ளது. தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை சாகுபடியில் களையெடுக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் பயிர்களுக்கு ஊட்டம் அளிக்க உரம் தெளிக்கும் பணிகளிலும் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். நெல் அதிகம் விளையும் தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தாண்டு குறுவைக்கான சாகுபடி இலக்கான 43 ஆயிரம் ஹெக்டேர் என்ற அளவை மிஞ்சி சுமார் 70 ஆயிரம் … Read more

புதிய விமான நிலையம்: அதிக இழப்பீடு கொடுக்கும் நிலை ஏற்பட்டதா? அமைச்சர் மூர்த்தி பதில்

சென்னையில் புதிய விமான நிலையம் அமையவுள்ள நிலங்களுக்கு மிக அதிக அளவில் இழப்பீடு கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மறுத்துள்ளார். பரந்தூரில் விமானநிலையம் அமைக்கப்படவுள்ள நிலையில் அங்குள்ள நிலங்களின் மதிப்பை அதிகரித்து காட்டுவதற்காக வழிகாட்டி மதிப்பை விட அதிக விலைக்கு கிரையம் செய்ததுபோல் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்மூலம் அரசிடமிருந்து அதிக இழப்பீடை பெற மோசடி நடைபெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள அமைச்சர் மூர்த்தி, … Read more

புதுச்சேரி காங்கிரஸ் கோஷ்டி பூசல் | மேலிட பார்வையாளரிடம் வாக்குவாதம்: காரை வழிமறித்து போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸில் கோஷ்டிபூசல் உச்சக்கட்டமாகி மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவிடம் தலைவர் நியமனம் தொடர்பாக தொடர் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஒரு தரப்பு ஈடுபட்டது. அத்துடன் அவரது காரை வழிமறித்து போராடினர். சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு புதுவை காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் பகிரங்கமாக வலுத்து வருகிறது மாநில தலைவர் ஏவி சுப்பிரமணியம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் ஒரு கோஷ்டியாகவும், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் அகியோர் ஒரு பிரிவாகவும் … Read more

ஜெயலலிதாவின் சந்தேக மரணம் தொடர்பான வழக்கு..! – ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை தாக்கல் எப்போது..?

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மர்மமான முறையில் மரணமடைந்தார் என்று கூறப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை செய்ய கடந்த 2017 ஆம் ஆண்டு ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 3ஆம் தேதி நிறைவடைய இருந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவக் குழு வினர் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்ய கொஞ்சம் அவகாசம் தேவை எனக் கடிதம் எழுதினர். இதனால், மேலும் மூன்று வார காலம் அவகாசம் கேட்டு … Read more

தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மண்டிக்கிடக்கும் செடி,கொடிகள் அகற்ற வேண்டும்: மக்கள் கோரிக்கை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் மண்டி கிடக்கும் செடி கொடிகளை அகற்றாததால் வீட்டிற்குள் பாம்புகள் புகுந்து வருகிறது. தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள செடி கொடிகளை அகற்றாததால் வீட்டிற்குள் விஷப் பாம்புகள் புகுந்து வருகிறது. இதனால் அங்கு குடியிருக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர். தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஏ, பி, சி, இ, ஆகிய வரிசைப்படி வீடுகள் அடுக்குமாடி … Read more