ஓபிஎஸ் அரசியலில் இருக்க எந்தவிதமான தார்மீக அடிப்படையும் இல்லை: கே.பி.முனுசாமி 

கிருஷ்ணகிரி: ஓபிஎஸ் அரசியலில் இருப்பதற்கே எந்தவிதமான தார்மீக அடிப்படையும் இல்லை என்று கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட புளியஞ்சேரி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், இன்று (21ம் தேதி) பங்கேற்ற கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வம், உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலே அனைவரும் வாருங்கள். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற தோரணையில் அழைத்திருக்கிறார். அப்படி அழைப்பதற்கு அவருக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. காரணம் … Read more

இயேசுவின் சீடருக்கே சமாதி; சென்னையின் கருப்பு பக்கம்!

தமிழ்நாட்டின் தலைநகராக விளங்கும் சென்னையை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும், ‘சென்னை தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் உலக கிறிஸ்தவர்களின் வரலாற்றில் சென்னைக்கென ஒரு கருப்பு பக்கமும் இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? உலகில் பெரும்பாலான மக்கள் கொண்டாடும் பண்டிகை கிறிஸ்துமஸ். இரு நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை மிகப்பெரிய விடுமுறை காலமாக கருதுகிறார்கள். இதற்கெல்லாம் அடித்தளம் ஒற்றை மனிதர் இயேசு. மனிதனால் பூமியில் அவதிரித்து மரணத்துக்கு பிறகு மீண்டும் விண்ணகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர் என்று … Read more

முல்லைப்பெரியாறு குடிநீர் திட்டப்பணி வேகமாக நடப்பது மகிழ்ச்சியாக உள்ளது: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை: மதுரை சிம்மக்கல் கல்பாலம் வைகை ஆற்று பகுதியில் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் நேற்றிரவு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் செல்லூர் ராஜூ கூறியதாவது: மதுரை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யும் வகையில், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு நேரடியாக பைப் லைன் மூலம் 125 கனஅடி நீரை கொண்டு வர, ‘அம்ருத் திட்டத்தின்’ கீழ் ரூ.1,296 … Read more

10 நாட்களுக்கு புதுச்சேரி அமைச்சர்கள் வாகன செலவு ரூ.4 கோடி: ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை கடந்த நிதியாண்டில் பத்து நாட்கள்தான் கூடியுள்ளது. அதே நேரத்தில் புதுச்சேரி அமைச்சர்கள் ரூ.3.3 கோடிக்கு வாங்கிய புதிய வாகனங்களின் எரிபொருள் செலவு ரூ. 70 லட்சம் என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் தந்துள்ளனர். சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள ஆளுநருக்கு மனு தரப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி ஆர்டிஐயில் கடந்தாண்டு புதுச்சேரி சட்டப்பேரவை கூடிய நாட்கள் எவ்வளவு, அமைச்சர்கள் வாங்கிய புதிய கார்களுக்கான எரிபொருள் செலவு எவ்வளவு … Read more

எடப்பாடி ஹேப்பி; வேற லெவலில் இறங்கிய வக்கீல்கள் டீம்!

அதிமுகவில் பதவி சண்டை பல்லை இளித்து கொண்டு சிரிக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தை ஒதுக்கி தள்ளிவிட்டு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி திடீரென கைப்பற்றினார். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. தர்மம் மீண்டும் வெல்லும் என்கிற கோஷத்துடன் நீதிமன்றத்தின் கதவை தட்டிய ஓபிஎஸ்சுக்கு நிம்மதி தரும் தீர்ப்பு வந்ததால் அதிமுகவில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என, கருதிய ஓ.பி.எஸ் யாருமே எதிர்பாராத … Read more

தமிழகத்தில்தான் பாதாள சாக்கடை கழிவுநீர் வசதிகள் அதிகம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி: திருச்சி தில்லைநகர் கிஆ.பெ விசுவநாதன் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடந்தது. முகாமை துவக்கி வைத்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி: ஒரே நேரத்தில் பாதாள சாக்காடை திட்டம், குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடப்பதால் இந்த 2 திட்டங்களின்கீழ் 242 சாலைகள் போடப்பட்டுள்ளது. திருச்சியில் 2 மாதத்தில் சாலை பணிகள் முழுவதுமாக நிறைவடையும். குறிப்பிட்ட நாட்களுக்குள் பணிகளை முடிக்காவிட்டால் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளோம். … Read more

திருமணத்திற்கு முன் குழந்தை – உயிருடன் புதைக்கப்பட்டதா? இறந்து புதைக்கப்பட்டதா? என விசாரணை

கூடலூர் அருகே பிறந்து சிலமணி நேரமே ஆன குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூராய்விற்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நிமினிவயல் பகுதியைச் சேர்ந்தவர் தேவன். இவரது 21 வயது மகள் பிரியா அப்பகுதியில் உள்ள ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் பிரியா கர்ப்பமடைந்து ஏழு மாதம் ஆகியிருக்கிறது. அவருக்கு கடந்த 18 ஆம் தேதி வயிற்று வலி … Read more

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த ஆர்வம் காட்டாத தமிழக அரசு: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

கோவை: மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு ஆர்வம் காட்டுவதில்லை என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார். கோவை பெரியகடை வீதி, தியாகி குமரன் மார்க்கெட் பகுதியில் அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோருக்கு மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, இ-ஷ்ரம் எனும் அமைப்புசாரா தொழிலாளர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது: ”தமிழகத்தில் … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை குறித்து ஜெயகுமார் சந்தேகம்..! – அறிக்கை கசிந்தது எப்படி என கேள்வி..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 2018ம் ஆண்டு 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தின் 100வது நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பிரம்மாண்ட பேரணியை பொதுமக்கள் நடத்தினர். ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி போராட்டக்கார்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. … Read more

காஞ்சிபுரம் உள்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை; 4,038 பணியிடங்கள் அக்டோபரில் நிரப்பப்படும்.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

வேலூர்: காஞ்சிபுரம் உள்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்க ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை வைத்து நிறைவேற்றப்படும் என்று வேலூரில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.வேலூர் மாவட்டத்தில் 952 இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் இன்று நடந்தது. சத்துவாச்சாரியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட … Read more