போதை ஊசிக்காக வலி மாத்திரை விற்பனை; மருந்து கடைக்காரரின் செயலால் ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கும்: முன்ஜாமீன் வழங்க மறுத்து ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: போதை ஊசிக்காக வலி மாத்திரையை விற்ற மருந்து கடைக்காரரின் செயலால் ஒட்டு ெமாத்த சமுதாயமும் பாதிக்கும் என்று கூறி, முன்ஜாமீன் மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அண்ணாத்துரை. மருந்துக்கடை நடத்தி வருகிறார். போதை ஊசிக்கு பயன்படுத்துவதற்காக வலி மாத்திரையை விற்றதாக புதுக்கோட்டை டவுன் போலீசார் இவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் அவர் மனு செய்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார்.  … Read more

ஆவினின் 10 புதிய தயாரிப்புகள் அறிமுகம்

Tamil Nadu News: ஆவின் நிறுவனத்தால்  விற்பனை செய்யப்படும் பால், தயிர், இனிப்புகள் உள்ளிட்ட பொருட்களின் எண்ணிக்கை தற்போது 225 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் அல்லது பிரபலமாக அறியப்படும் ஆவின், சந்தையில் நியாயமான பங்கைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு வெள்ளிக்கிழமை 10 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நந்தனத்தில் டி.சி.எம்.பி.எப். லிமிடெட் நிர்வாக இயக்குநர் என்.சுப்பையன் மற்றும் பிற அதிகாரிகள் முன்னிலையில் தயாரிப்புகளை மாநில பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை … Read more

விருதுநகர் || சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சேத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் கணபதி சுந்தரநாச்சியார்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அப்பகுதி பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவரிடம் … Read more

தமிழகத்தின் தென்பகுதி வீரம் செறிந்த மண் – ஒண்டிவீரன் தபால்தலை வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

திருநெல்வேலி: தமிழகத்தின் தென்பகுதி வீரம்செறிந்த மண் என்று ஆளுநர் ஆர்.என். ரவி, பாளையங்கோட்டையில் நேற்று தெரிவித்தார். இந்தியாவின் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவின் ஒருபகுதியாக தபால்துறை சார்பில், சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் தபால்தலை வெளியீட்டு விழா பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்றது. தபால் தலையை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டு பேசியதாவது: தமிழகத்தின் தென்பகுதி வீரம்செறிந்த மண். ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்கள் இங்கு இருந்துள்ளனர். ஆயுதங்களால் மட்டுமல்ல, எழுத்துகளாலும் ஆங்கிலேயர்களை எதிர்த்தவர்கள் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள். … Read more

நாகர்கோவிலில் அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் தொடக்கம்

நாகர்கோவில் : நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் நள்ளிரவில் தொடங்கியது. நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கான ஆட்கள் தேர்வு நேற்று நள்ளிரவு 12.01க்கு தொடங்கியது. செப்டம்பர் 1ம் தேதி அதிகாலை வரை முகாம் நடைபெற இருக்கிறது. திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, … Read more

கும்பகோணம் அருகே 51 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சோழர்கால நடன சம்பந்தர் சிலை – அமெரிக்க ஏல மையத்தில் கண்டுபிடிப்பு

சென்னை: கும்பகோணம் அருகே 51 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சோழர் காலத்து நடன சம்பந்தர் வெண்கல சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அதை மீட்டு தமிழகம் கொண்டு வரும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த தண்டந்தோட்டம் கிராமத்தில் உள்ள நடனபுரீஸ்வரர் சிவன் கோயிலில் இருந்த சோழர் காலத்தை சேர்ந்த நடன சம்பந்தர், கிருஷ்ண காளிங்க நர்த்தனம், ஐயனார், அகஸ்தியர், பார்வதி தேவி சிலைகளை கடந்த 1971 … Read more

அதிமுக அலுவலகத்தில் இருந்து பத்திரங்களை திருடியதாக நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்ள தயார்: ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேட்டி

பெரியகுளம்: அதிமுக அலுவலகத்தில் பத்திரங்களை திருடி சென்றதாக நிரூபித்தால் தற்கொலை செய்துகொள்ளத் தயார் என்று ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் கூறி உள்ளார். அதிமுக பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, நேற்று முன்தினம் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தினார். நேற்றும் பெரியகுளம் பண்ணை வீட்டில் ஓபிஎஸ்சை, கோவை மாவட்ட அதிமுக செயலாளர் செல்வராஜ் தலைமையில் பலர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பின்னர் … Read more

தனுஷ்கோடியில் மீண்டும் உருவான மணல் பரப்பு

ராமேசுவரம்: ராமேசுவரத்திலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ளது தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை. இப்பகுதிக்கு எளிதாகச் சென்று வர வசதியாக, முகுந்தராயர் சத்திரத்திலிருந்து அரிச்சல்முனை வரை சாலை அமைக்கப்பட்டு, 2017 ஜுலையில் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தனுஷ்கோடி அரிச்சல் முனை எல்லையில் உள்ள சாலை வளைவை சுற்றி 3 கி.மீ. சுற்றளவில் வடக்கு மற்றும் தெற்கு கடற்கரை பகுதி மணல் பரப்புடன் விசாலமாக இருந்தது. ஆனால் நாளடைவில் கடல் அரிப்பினால் அரிச்சல்முனை சாலை வளைவை … Read more

தமிழகத்தில் ஓராண்டில் 5 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.420 கோடியில் நலத்திட்டம்; அமைச்சர் சி.வி.கணேசன் பேச்சு

திண்டுக்கல்: தமிழகத்தில் ஓராண்டில் 5 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.420 கோடியில் நலத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசினார். திண்டுக்கல்லில் நேற்று தொழிலாளர் நலன்- திறன் மேம்பாட்டு துறை சார்பில்,  தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் –  அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட  உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: தமிழகத்தில் ஓராண்டில் 5 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.420 கோடி மதிப்பில்  நலத்திட்ட … Read more

‘நலத்திட்ட உதவிகள் நலிவுற்ற மக்களை கைதூக்கி விடுகின்றன.. அவை இலவசம் ஆகாது’: உச்ச நீதிமன்றத்தில் திமுக!

நலத்திட்ட உதவிகள் நலிவுற்ற மக்களை கைதூக்கி விடுகின்றன, அவை இலவசம் ஆகாது என உச்ச நீதிமன்றத்தில் திமுக தெரிவித்துள்ளது. தேர்தல் நேரத்தில் இலவசங்கள் வழங்கும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குரைஞர் அஷ்வினி உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணையின்போது தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் திமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 20) விசாரணை வந்தது. அப்போது, “மனுதாரர் … Read more