புகழஞ்சலி – நெல்லை கண்ணன் | ''துணிவுடன் மேடையில் பேசும் ஆற்றல் மிக்கவர்'' – கி.வீரமணி

சென்னை: நெல்லை கண்ணன் மறைவினால் தமிழகம் ஒரு சிறந்த இலக்கியத் திறனாய்வாளரை இழந்தது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிறந்த தமிழ் அறிஞரும், சமூகப் பார்வையுடன் கூடிய முற்போக்கு சிந்தனையாளரும், சிறந்த இலக்கியப் பேச்சாளரும், துணிவுடன் எந்த மேடையிலும் பேசும் ஆற்றல் கொண்டவருமான நண்பர் நெல்லை கண்ணன் வயது முதிர்வு காரணமாக நெல்லையில் இன்று (18.8.2022) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். தமிழகம் … Read more

ஆரணியில் தொடர் முறைகேடு, பால் கூட்டுறவு சங்க தலைவி பதவி பறிப்பு; சென்னை கூடுதல் ஆணையர் அதிரடி

ஆரணி: ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், தொடர் முறைகேட்டில் ஈடுபட்ட அதிமுகவை சேர்ந்த தலைவி பதவியை ரத்து செய்து, சென்னை கூடுதல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன், ஆரணிப்பாளையம் பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிர்வாகக்குழு தலைவியாக அதிமுகவை சேர்ந்த குமுதவல்லி, துணைத்தலைவராக சைதை சுப்பிரமணி மற்றும் உறுப்பினர்கள் உட்பட 11 பேர் உள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக சென்னை ஆவின் நிறுவனத்திற்கு … Read more

'தேசப்பற்று பெயரில் மக்களை திசைதிருப்பிவிட்டு பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை' – சீமான்

திருச்சி: “தேசிய கொடி, தேசப்பற்று என்று அனைவரையும் திசை திருப்பிவிட்டு, பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். திருச்சி நீதிமன்ற வளாகத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” 16 ஆண்டுகள் சிறையில் இருந்த நேரு எங்கே? மோதிலால் நேருவின் மகன். மிகப்பெரிய பணக்காரரின் மகனான நேரு 16 ஆண்டுகள் சிறையில் இருந்தார். … Read more

அதிமுக பிரமுகரின் தம்பி வெட்டிக்கொலை

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்குபொய்கைநல்லூரை சேர்ந்தவர் மனோகர் (40). பைனான்ஸ் மற்றும் விடுதிகள் நடத்தி வந்தார். நேற்றுமுன்தினம் இரவு நண்பர் மணிவேலுடன் அலுவலகத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல், உள்ளே புகுந்து மனோகரை அரிவாளால் சரமாரி வெட்டியது. தடுக்க முயன்ற மணிவேலுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் அந்த கும்பல் பைக்கில் தப்பியது. அப்பகுதியினர் வந்து இருவரையும் மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி … Read more

குஜராத்தில் நடந்த சம்பவம்… இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ் பட நடிகை!

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விரக்தி காரணமாக தான் அப்போது நடந்துகொண்ட விதம் குறித்து படத்தின் வெற்றி விழாவில் இயக்குநரிடம் நடிகை அனுபாமா பரமேஸ்வரன் மன்னிப்பு கோரியுள்ளார். மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற பிரேமம் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் அனுபாமா பரமேஸ்வரன். தொடர்ந்து தெலுங்கில், அ.ஆ, மற்றும் பிரேமம் ஆகிய படங்களில் நடித்த இவர், தமிழில் கொடி படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என … Read more

புகழஞ்சலி – நெல்லை கண்ணன் | "இலக்கிய அறிவில் செறிந்த, பழகுதற்கினியவர்" – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,” பிரபல பேச்சாளரும் தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவருமான ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருத்தமுற்றேன். கடந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய காமராசர் கதிர் விருது பெற்ற பெரியவர் நெல்லை கண்ணன், விழா மேடையிலேயே, என்னிடம் வாஞ்சையொழுக அன்பு பாராட்டிப் பேசியதை இப்போதும் நினைந்து நெஞ்சம் நெகிழ்கிறேன். … Read more

பள்ளி மைதானத்தில் மின்னல் தாக்கி மாணவன் பலி

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே தாளையடிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேலு மகன் கஜினி (16). நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று மதியம் 3 மணி அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது விளையாடும் நேரம் என்பதால் பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த கஜினியை மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே கஜினி பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா உலகத்துக்கு தலைவலியாக மாறிய பைரஸி கும்பல்; யார் இந்த தமிழ் ராக்கர்ஸ்?

‘ஆக்ஷன் ஸ்டார்’ ஆதித்யா தீபாவளிக்கு தனது கருடா படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யவிருக்கிறார். இந்த படம் நடிகரின் ரசிகர்கள் காரணமாக பைசா வசூலாகிவிடும் என உறுதியாகிறது. மெகா ஹிட் ஆகி பெட்டிகள் நிரம்பி தயாரிப்பாளர்களுக்கு பணம் புரளும் என இந்த படம் உறுதியளிக்கிறது. ஆனால், அதில் ஒரு தடங்கல் உள்ளது. தமிழ் ராக்கர்ஸ் என்ற திரைப்பட பைரஸி கும்பல் படம் திரையரங்குக்கு வருவதற்குள் ஆன்லைனில் வெளியிடுவோம் என்று மிரட்டுகிறது. மேற்குறிப்பிட்ட வரிகள் வெள்ளிக்கிழமை வெளியாகும் தமிழ்ராக்கர்ஸ் என்ற … Read more

புகழஞ்சலி – நெல்லை கண்ணன் | "தமிழ்ப் பணியும் சமூகப் பணியும் என்றைக்கும் நிலைத்து நிற்கும்" – டிடிவி தினகரன்

சென்னை: தமிழறிஞர் நெல்லை கண்ணனின் தமிழ்ப் பணியும், சமூக பணியும் என்றைக்கும் நிலைத்து நிற்கும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “தமிழறிஞரும் தலைசிறந்த சொற்பொழிவாளருமான திரு.நெல்லை கண்ணன் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்த மடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நெல்லை கண்ணன் அவர்களின் தமிழ்ப் பணியும் சமூகப் பணியும் என்றைக்கும் நிலைத்து … Read more

தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை? நோட் பண்ணிக்கோங்க!

தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்ற விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (18.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், அரியலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் … Read more