சரோஜ் நாராயண்சுவாமி நேயர்கள் நினைவில் என்றென்றும் வாழ்ந்திருப்பார்: முத்தரசன் இரங்கல் 

சென்னை: சரோஜ் நாராயண்சுவாமி நேயர்கள் நினைவில் என்றென்றும் வாழ்ந்திருப்பார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அகில இந்திய வானொலியின் மூத்த செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண்சுவாமி (87) நேற்றிரவு மும்பையில் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு வேதனையுற்றோம். காலை கண் விழித்ததும், வானொலியை இயக்கி, செய்தி கேட்க காதுகளை திறந்து வைக்கும் லட்சோப, லட்சம் நேயர்களின் நெஞ்சங்களில் குடியிருப்பவர் சரோஜ் … Read more

வடபழனி முருகன் கோவில் வாகனம் நிறுத்தமிட வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

வடபழனி முருகன் கோயில் வடக்கு மாட வீதியை வாகனம் நிறுத்திமிடமாக பயன்படுத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. சென்னை வடபழனியில் உள்ள அருள்மிகு வடபழனி ஆண்டவர் கோயிலை ஒட்டிய 40 அடி அகலமுள்ள வடக்கு மாட வீதியில், வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக 18 அடி அளவிற்கு வாகன நிறுத்தமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமென கோயிலின் இணை ஆணையர் சார்பில் சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. … Read more

உயிருக்கு போராடிய சிறுவனுக்கு முதலுதவி செய்த டிஜிபி சைலேந்திரபாபு! வீடியோ வைரல்!

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு இன்று மாலை 6 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் நடைபயிற்சிக்கு சென்றிருந்தார். அப்போது கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை அங்கிருந்த மீனவர்கள், பொதுமக்கள் காப்பாற்றினர். ஆனால் சிறுவன் மயக்கநிலையிலே இருந்துள்ளான். அதைக் கண்ட சைலேந்திர பாபு உடனடியாக அந்த இடத்திற்கு சென்று சிறுவனின் நெஞ்சை அழுத்தி முதலுதவி செய்தார். கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவன் – தக்க சமயத்தில் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய தமிழ்நாடு … Read more

பாஜகவில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கம்: அண்ணாமலை 

சென்னை: “மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லெட்சுமணனின் உடல் நேற்று மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. ராணுவ வீரரின் உடலுக்கு தமிழக அரசு சார்பில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். அந்தப் பகுதியில் ராணுவ வீரரின் உடலுக்கு … Read more

பிடிஆர் கார் மீது தாக்குதல்: அநாகரிகத்தின் உச்சம்.. பாஜகவுக்கு சீமான் கண்டனம்!

தமிழக நிதி அமைச்சரை குறிவைத்து பாஜகவினர் நிகழ்த்தியுள்ள காலணி வீச்சு அரசியல் அநாகரிகத்தின் உச்சம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். காஷ்மீரில் வீர மரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு, நேற்று அஞ்சலி செலுத்தி விட்டு சென்ற தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசினர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே, இந்த சம்பவம் … Read more

”உன் அப்பா, அம்மா உயிருக்கு ஆபத்து”.. பள்ளி மாணவியிடம் நூதனமாக நகைகளை பறித்த ஆசாமி!

விழுப்புரத்தில் பிளஸ் டூ படிக்கும் மாணவியரிடம் நூதன முறையில் தங்க நகை பறித்த ஆசாமி குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. விழுப்புரம் கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் சென்னையில் மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணாவி கடந்த 12ஆம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது திண்டிவனம் பேருந்து நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் அவருடன் … Read more

வழக்கறிஞர் நடராஜன் மறைவு நீதித்துறைக்கு மிகப் பெரிய இழப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சட்ட அனுபவத்தின் இமயம் நடராஜன் மறைவு நீதித்துறைக்கு மட்டுமல்ல, கழகத்திற்கும் மிகப் பெரிய இழப்பு என்று அவரது படத்திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (14.08.2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மூத்த வழக்கறிஞர் என்.நடராஜனின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை: ”நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிற மரியாதைக்குரிய சட்ட அறிஞர், மூத்த வழக்கறிஞர் என். நடராஜனுடைய நினைவுகளைப் போற்றக் கூடிய நிகழ்ச்சியாக இந்த படத் … Read more

சுயமரியாதைக்கு களங்கம்? வாயை திறக்காத முதல்வர்… அப்செட்டில் அமைச்சர்கள்..!

மதுரையில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி புறப்பட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் பூதாகரமாகியுள்ளது. கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து ட்வீட் போட்டுள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ”என் கார் மீது வீசப்பட்ட ‘பழைய ஏர்போர்ட் டெர்மினலின் சின்ட்ரெல்லாவின் செருப்பு’ திரும்ப பெற விரும்பினால் உங்களுக்காக எனது ஊழியர்கள் அதனை பத்திரமாக எடுத்து வைத்துள்ளனர்” என கூறியுள்ளார். நாட்டில் 75வது … Read more

அரும்பாக்கம் பெடரல் வங்கி தங்கநகை கொள்ளை: வெளியானது சிசிடிவி காட்சி! 15கிலோ தங்கம் மீட்பு?

சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கியில் 11 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கி கொள்ளை பற்றி துப்பு கொடுக்கும் மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதனிடையே கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் சிசிடிவி பதிவுகள் வெளியாகி உள்ளன. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியில் தங்க நகைக் கடன் பிரிவில் லாக்கரில் இருந்த பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. … Read more

Tamil news today live: சென்னை ஃபெடரல் வங்கி கொள்ளை வழக்கில் 3 பேர் கைது; 18 கிலோ தங்கம் மீட்பு

Go to Live Updates பெட்ரோ- டீசல் விலை பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63-க்கும் டீசல் ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பாஜகவிலிருந்து விலகிய மதுரை மாவட்ட தலைவர் பாஜகவில் இருந்து விலகுகிறார் மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன். மதுரையில் நடந்த சம்பவத்திற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து மன்னிப்பு கோரினார்.பாஜகவின் மதவெறுப்பு அரசியல் பிடிக்காததால் அங்கு தொடர விரும்பவில்லை எனவும் அறிவிப்பு. “ நடந்த … Read more