எண்ணெய் விலை உயர்ந்தும், திருப்பூர் சூரியகாந்தி விவசாயிகளுக்கு நஷ்ட்டம்.!  

திருப்பூர் மாவட்டம் : ஊத்துக்குளி, குண்டடம், தாராபுரம், மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சூரியகாந்தி பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் போர் காரணமாக அங்கிருந்து சூரியகாந்தி விதைகள் உலக நாடுகளுக்கு ஏற்றமதி செய்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சமையல் எண்ணெய் விலைகள் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனை தொடர்ந்து மற்ற எண்ணெய் வித்துகளில் இருந்து தயாராகும் எண்ணெய்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது‌.   இதனை அடுத்து, கடந்த … Read more

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு | 6 கி.மீ வரை உள்ள மாணவர்களை சேர்க்கலாம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை: மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்களில் 6 கிலோ மீட்டர் தூரம் வரை வசிக்கும் மாணவர்களைச் சேர்க்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர்கள் ஏ.கோபால், டி.சரவணன். இவர்கள் மதுரை சர்வேயர் காலனியில் உள்ள தனியார் பள்ளிகளில் தங்களது மகன்களுக்கு மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் சீட் வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் … Read more

மோடி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பதிவிடுவோர் கண்காணிக்கப்படுகின்றனர் – சென்னை கமிஷனர்

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமூகவலைதளங்களில் பதிவிடுவோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள சர்வதேச செஸ் போட்டி நடைபெற இருக்கும் நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, மெய்யநாதன், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கர் ஜிவால், ‘’பிரதமர் வருகையை ஒட்டி நேரு உள்விளையாட்டு … Read more

தனி சிங்கத்தை கண்டுபிடிக்க சவால்… மேதைகளால் மட்டுமே முடியும்… உங்களுக்கு ஒரு வாய்ப்பு!

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இணையத்தில் ஒரு சூறாவளி போல ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வைரலாகி வருகிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிங்கங்கள் கூட்டமாக இருக்கிறது. இதில் தனி சிங்கத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சவால். உண்மையில், இந்த விலங்கு அடிப்படையிலான ஆப்டிகல் இல்யூஷனில் தனி சிங்கத்தைக் கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமானது. தனி சிங்கத்தை புதிர்களை விடுவிக்கும் மேதைகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். … Read more

பாம்பு தீண்டி மரணித்து பாலியல் அரக்கனை அடையாளம் காட்டிய சிறுமி..! வீடியோ எடுத்தவர்களும் சிக்கினர்

திருவள்ளூர் மாவட்டம் எருமவெட்டி பாளையத்தில்  8 வயது சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்த நிலையில் , 4 மாதங்களுக்கு முன்பாக அந்த சிறுமியிடம், 75 வயது முதியவர் ஒருவர் அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோ வெளியானதால் முதியவர் உள்ளிட்ட 5 பேர் கும்பல் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த 2 வயது சிறுமியை தாய் விட்டுச்சென்ற நிலையில் தந்தையும் உயிரிழந்ததால். திருவள்ளூர் மாவட்டம் எரும வெட்டி பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் வளர்ந்து … Read more

“ஆட்சியாளர்கள் சேவைத் துறையில் லாபம் பார்க்க நினைப்பது நல்லதல்ல” – தங்கமணி

திருச்சி: “போக்குவரத்தும், மின்சாரமும் மக்களுக்கான சேவைத் துறை. எனவே சேவைத் துறையில் லாபம் பார்க்க நினைப்பது ஆட்சியாளர்களுக்கு நல்லது இல்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில், திருச்சி அண்ணாசிலை அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி, தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், முன்னாள் அமைச்சர் … Read more

உலகம் போற்றும் வரலாற்று நாயகன்! தோல்வியே காணாத மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள்!

ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு புதிய தலைமுறையின் ‘மெய்ப்பொருள்’ நிகழ்ச்சியில் மாமன்னர் ராஜேந்திர சோழன் எவ்வளவு முக்கியமான மன்னராக இருந்தார் என்பது குறித்து விரிவாகக் காணலாம். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

பைசா செலவு இல்லாமல் வருமான வரித் தாக்கல்: எப்படின்னு பாருங்க!

நடப்பு நிதியாண்டில் ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் பெற்ற அனைத்து தனிநபர்களும் வருமான வரி தாக்கல் செய்வது கட்டாயமாகும். மாதச் சம்பளம் பெறும் நபர்கள் கணக்கை தணிக்கை செய்ய தேவையில்லை. நீங்கள் 2021-22 ஆம் ஆண்டிற்கான வருமான வரியை வருகிற 31ஆம் தேதிக்குள் செலுத்திட வேண்டும். பொதுவாக வரி தாக்கல் சேவைகளை வழங்கும் பல தனியார் இணையதளங்கள் உள்ளன. இருப்பினும், அவர்கள் தங்கள் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். தற்போதைய பணவீக்க காலங்களில், சம்பளம் பெறும் நபர்கள் வருமான … Read more

முன்விரோதத்தால் மரவியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. மூவர் கைது..!

முன்விரோதத்தால் பெட்ரோல் குண்டு வீசிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துகுடி மாவட்டம், அண்ணாநகரை சேர்ந்தவர்  செல்வகணேஷ். அந்த பகுதியில் இவர் மரவியாபாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில், இருவருக்கும் மகாகிருஷ்ணன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், மகாகிருஷ்ணன் சிலரை வைத்து செல்வகணேஷ் வீட்டில் பெட்ரோல் வீசவைத்துள்ளார். இதுகுறித்து செல்வகணேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். அவர் வீட்டில் உள்ள சிசிடிவி … Read more

தினசரி ஓர் அதிகாரிக்கு தலா 150 வழக்குகள் இலக்கு: ரூ.100 செலுத்த அரை மணி நேர காத்திருப்பு; சென்னைவாசிகள் அவதி

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக போக்குவரத்துக் காவலில் ஈடுபட்டு வரும் போலீஸார் செய்து வரும் வாகன சோதனையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இலக்கு வைத்து வழக்குப் பதிவு செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தலைக்கவகம் அணியாமல் செல்பவர்கள், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள், அதிக வேகத்தில் செல்பவர்கள் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்குபவர்களை கண்டறிய போக்குவரத்துக் காவல் துறை சார்பில் தினசரி வாகன சோதனை நடத்தப்படும். பகலில் … Read more