தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் 100 கிடா வெட்டி 8 ஆயிரம் பேருக்கு மொய் விருந்து!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி எம்எல்ஏ நடத்திய மொய் விருந்தில் 100 கிடா வெட்டி 8 ஆயிரம் பேருக்கு விருந்து வைக்கப்பட்டது. சைவ பிரியர்களுக்கு சாம்பார், பாயாசம், வடையுடன் உணவு பரிமாறப்பட்டது. மொய் விருந்தில் பங்கேற்றவர்கள், அவரவர் வசதிக்கேற்ப, மொய் செய்தனர். பணத்தை எந்திரம் மூலம் எண்ணி அண்டாவில் அடுக்கி வைத்தனர். பணம் வசூலிக்கப்பட்ட 15 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர். Source link