தமிழக செய்திகள்
பால், தயிர் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி: தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தாக அமைச்சர் விளக்கம்
சென்னை: அரிசி, தயிர், மோர் உள்ளிட்ட உணவு பொருட்களின் மீதான வரிவிதிப்பு குறித்த முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள இயலாது என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தாக தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: அரிசி உள்ளிட்ட, பேக்கிங், லேபில் செய்யப்பட்ட பல உணவுப் பொருட்கள் மீது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்பட்டது குறித்து பல்வேறு தவறான செய்திகள் உலவி வருகின்றன. ஆதலால் இந்தநிகழ்வு … Read more
மதுரை: கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நிறைவு – ரூ.165 கோடி பணம் பறிமுதல்
மதுரையில் பிரபல கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 20 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. மதுரையின் பிரபல கட்டுமான நிறுவனங்களான அன்னை பாரத், ஜெயபாரத், கிளாட்வே, கிளாட்வே கிரீன் சிட்டி ஆகிய கட்டுமான நிறுவன அழுவலகங்கள் மற்றும் கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் அழகர், ஜெயகுமார், முருகன், சரவணகுமார், செந்தில்குமார் ஆகியோரது வீடுகள் என 20 இடங்களில் 60க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக நடத்திய சோதனை இன்று மாலையுடன் நிறைவு … Read more
சோமஸ்கந்தர் சிலை முறைகேடு: வழக்கு விசாரணையை சிவகாஞ்சி போலீஸுக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு, சோம ஸ்கந்தர் சிலை செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணையை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவிலிருந்து சிவகாஞ்சி போலீசாருக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் சிலையில் சில சேதங்கள இருந்ததால், புதிதாக தங்க சிலை செய்யப்பட்டது. இதற்காக 100 கிலோ தங்கம் வசூலிக்கப்பட்டும், சிலையில் ஒரு சதவீதம் கூட தங்கம் இல்லை என்று அண்ணாமலை என்பவர் தாக்கல் … Read more
குட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிய அனுமதி
குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, ஓய்வு பெற்ற அரசு உயரதிகாரிகள் உள்ளிட்ட 11 பேர் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில், சிபிஐ வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
போலி பாஸ்போர்ட் வழக்கில் 41 பேர் மீது விரைவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல்: தமிழக அரசு
சென்னை: “போலி பாஸ்போர்ட் வழக்கில் மதுரை க்யூ பிரிவு குற்ற வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு 41 எதிரிகள் மீது நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘செப்டம்பர் 2019-ம் ஆண்டு மதுரையில் இலங்கை நாட்டைச் சேர்ந்த சில நபர்கள் இந்திய கடவுச்சீட்டுகள் பெற்று வெளிநாடு செல்ல முயற்சிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் 27.09.2019 அன்று மதுரை நகர க்யூ … Read more
பாஸ்போர்ட் மோசடி வழக்கில் 41 பேர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை – தமிழக அரசு தகவல்
மதுரையில் பாஸ்போர்ட் மோசடி வழக்கில் 41 பேர் மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரையில் 2019-ம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த சிலர் இந்திய பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்றதாக புகார் எழுந்தது. போலி ஆவணங்கள் மூலம் 28 பாஸ்போர்ட்டுகள் பெற்றது தெரியவந்த நிலையில், மதுரை நகர க்யூ பிரிவில் 7 பேர் மீது வழக்குகள் பதிந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அலுவலர்கள், பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் உள்பட 41 பேர் குற்றம் புரிந்துள்ளதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் கண்டறியப்பட்டு விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் … Read more
கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவைக் கைவிடுக: பூவுலகின் நண்பர்கள் அடுக்கும் காரணங்கள்
சென்னை: “முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவுச் சின்னங்களில் மட்டும் வாழ்ந்துவிடுவதில்லை. அதனால் அவருக்கு கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்” என்று பூவுலகில் நண்பர்கள் அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தமிழ் இலக்கியப் பணிகளை போற்றும் வகையில் அவரது நினைவிடத்திற்கு அருகில் கடலுக்குள் 134 அடி உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை … Read more
திருச்சி: பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து பெண் பலி
திருச்சி மாநகராட்சியின் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து சாகர் பானு என்ற பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சாகர் பானுவின் குடும்பத்தினருக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆறுதல் தெரிவித்துள்ள நிலையில், இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழப்புக்கு காரணமான மாநகராட்சி அதிகாரிகளை கைது செய்து, கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்த டிப்பர் லாரி.. ஓட்டுநர் உடல் கருகி பரிதாப பலி..!
டிப்பர் லாரியில் மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்த விபத்தில் டிரைவர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் குமரபுரம் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தேவையான பொருட்கள் காரமடையில் தயார் செய்யப்பட்டு இங்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பணிகளில் கரூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் லாரி ஒட்டுநராக வேலை செய்து வருகிறார். சம்பவதன்று, அதிகாலை 4 மணிக்கு ஆறுமுகம் லாரியில் தார் கலவை ஏற்றிக் கொண்டு சாலை … Read more