காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு; மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்!

காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் மூன்று அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரில் தலா 210 மெகாவாட் வீதம் மின் உற்பத்தி செய்யக்கூடிய நான்கு அலகுகளை கொண்ட 840 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு அனல் மின் நிலையமும், 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய மற்றொரு அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது. இதன் மூலமாக நாள் ஒன்றுக்கு 1,440 மெகாவாட் மின் உற்பத்தி … Read more

#Breaking: மீண்டும் ஒரு கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை.! அதிர்ச்சி காரணம்.!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருகம் அருகே அமைந்துள்ள கோவிந்தசாமிபுரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகிலிருந்த அலமேலு என்ற பெண்மணியின் வீட்டிற்கு உறவுக்கார இளைஞரான விஜய் என்பவர் அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.  அப்போது 12-ஆம் வகுப்பு மாணவியுடன் விஜய்க்கு காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் அத்தை அலமேலு தெரியவந்த நிலையில் விஜய் ஊருக்கு சென்ற நேரம் பார்த்து மாணவியின் வீட்டிற்கு சென்று அவரிடம் தனது கணவர் மற்றும் மகனுடன் சேர்ந்து தகராறு … Read more

முல்லைப் பெரியாறு அணை குறித்து அச்சம்தரும் வீடியோ: வெளியிட்டவர்கள் மீது கேரள அரசின் நடவடிக்கை கோரும் ஆர்.பி.உதயகுமார்

மதுரை: ”முல்லைப்பெரியாறு அணை குறித்து அச்சத்தை ஏற்படுத்த அனிமேஷன் வீடியா வெளியிட்டவர்கள் மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார். மதுரை மாநகராட்சி வரி செலுத்துவோர் சார்பில், தமிழக அரசு விடுத்துள்ள வரியை திரும்ப பெற வலியுறுத்தி ஆலோசனைக் கூட்டம் காமராஜ் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்பி.உதயகுமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்எஸ்.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த … Read more

செங்கல்பட்டு: டிராக்டர் சக்கரத்தில் சிக்கி தாயின் கண் முன்னே இரு குழந்தைகள் உயிரிழப்பு

மறைமலைநகர் அருகே டிராக்டரில் சிக்கி இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கருநீலம் கிராமத்தைச் சேர்ந்த தேன்மொழி மற்றும் அவரது குழந்தைகளான சித்தார்த் (4) லோகேஷ் (3) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் சிங்கபெருமாள் கோயில் பகுதியில் இருந்து கருநீலத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற டிராக்டரை முந்திச் செல்ல முயன்றபோது எதிர் திசையில் வந்த ஸ்கூட்டர் மீது தேன்மொழி சென்ற வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. … Read more

புதுச்சேரியில் கருணாநிதிக்கு சிலை: திமுகவினரிடம் முதல்வர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என்று திமுக நிர்வாகிகளிடம் மாநில முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார். புதுச்சேரி மாநில திமுக சார்பில் கருணாநிதி 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி புதுச்சேரி ஏஎப்டி திடலில் இருந்து திமுகவினர் மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் ஒதியஞ்சாலை அண்ணா சிலைக்கு பேரணியாக வந்தனர். பின்னர் அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் … Read more

குமரி: பாதி எரிந்த நிலையில் சாலையோரம் கிடந்த ஆண் சடலம் – போலீசார் விசாரணை

சுசீந்திரம் யானைபாலம் அருகே சாலையோரத்தில் எரிந்த நிலையில் இருந்த ஆண் சடலம் மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சுசீந்திரம் அருகே யானை பாலம் பகுதியில் சாலையோரம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று பாதி எரிந்த நிலையில் கிடப்பதாக சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா தலைமையிலான போலீசார் சடலத்தை கைப்பற்றி, அடையாளம் தெரியாத நபரை … Read more

மதுரை விமான நிலைய விரிவாக்கம் | தமிழக அரசு போதுமான நிலம் ஒப்படைக்கவில்லையா? – தாமதத்தின் பின்னணி

மதுரை: மதுரை விமானநிலையம் விரிவாக்க திட்டப் பணிகளுக்காக இன்னும் 89.76 ஏக்கர் நிலம் தமிழக அரசால் ஒப்படைக்கப்படவில்லை என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் கூறியதைத் தொடர்ந்து இந்த திட்டத்தின் பின்னணியில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தொழில்துறையினர், பொதுமக்கள் குழம்பி போய் உள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி விமான நிலையங்கள் சர்வதேச விமான நிலையமாக செயல்படுகிறது. மதுரை விமான நிலையம், துபாய், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே விமானவை சேவை கொண்டுள்ளதால் … Read more

பொறியியல் கவுன்சலிங்; ஒவ்வொரு ரவுண்ட்க்கான கட் ஆஃப் எப்படி இருக்கும்?

Engineering counselling cut off range for all rounds: பொறியியல் கலந்தாய்வில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ரவுண்ட்டுக்கும் எந்த அளவிலான கட் ஆஃப் மதிப்பெண்கள் அழைக்கப்பட்டன என்பதையும், இந்த ஆண்டு கட் ஆஃப் அளவு எப்படி இருக்கும் என்பதையும் இப்போது பார்ப்போம். தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு செயல்முறை நடைபெற்று வருகிறது. இதற்கு பின்னர் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு நடைபெறும். இதையும் … Read more

புதுச்சேரி நிதிச்செயலர் அதிகார துஷ்பிரயோகம்: முதல்வரிடம் புகார் அளிக்க முடிவு

புதுச்சேரி: புதுச்சேரி நிதிச்செயலர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதால் இதுகுறித்து முதல்வரிடம் புகார் அளிக்க அமைச்சக ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். அலுவலக பணியாளர்களை வீட்டுப்பணிக்கு பயன்படுத்துவதுடன், அலுவலக காரை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்துவது உட்பட நிதிச்செயலர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமைச்சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வரை சந்திக்க உள்ளதாககவும் அவர்கள் தெரிவித்தனர். புதுச்சேரி ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: ”புதுச்சேரி நிதித்துறைச் செயலர் … Read more

போலீஸ் எனக்கூறி பணம் பறித்த பெங்களூர் கும்பல்..சினிமா பாணியில் விரட்டி பிடித்த நிஜ போலீஸ்!

கோவில்பட்டியில் பாத்திரக்கடை உரிமையாளரை கடத்தி ரூ 5 லட்சம் பறித்த பெங்களூர் கும்பலை சினிமாவை மிஞ்சும் வகையில் துரத்திச் சென்று கைது செய்துள்ளனர் காவல்துறையினர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவைச் சேர்ந்தவர் தங்கம். இவர், இளையரசனேந்தல் சாலை ரயில்வே சுரங்க பாலம் அருகே பாத்திரம் மற்றும் இரும்பு கடை நடத்தி வந்திருக்கிறார். இந்நிலையில், நேற்று மதியம் இவர் கடையில் இருந்தபோது, 6 பேர் கொண்ட கும்பலொன்று தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் பேச்சு … Read more