சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!
தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற விருது கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டிற்கான ‘தகைசால் தமிழர்’ விருது இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான … Read more