பெங்களூரு சிறையில் நிர்வாணமாக நிறுத்தி வீடியோ… ‘நடமாடும் நகைக்கடை’ ஹரி நாடார் கதறல்

Hari Nadar wrote letter wife and describes Bengaluru police torture: மோசடி வழக்கில் கைதாகி கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹரி நாடாரை போலீசார் நிர்வாணமாக வீடியோ எடுத்து விசாரிப்பதாகவும், ஜாமீன் வழங்காமல் சித்ரவதை செய்வதாகவும் அவர் தனது மனைவிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ஹரி நாடார், பனங்காட்டுப்படை என்ற கட்சியை நடத்தி வருகிறார். இவர் கிலோ கணக்கில் நகை அணிந்து வலம் வந்ததன் மூலம் … Read more

மழையால் சேதம் அடைந்த குறுவை பயிர்களுக்கு இழப்பீடு: உழவர் நலத் துறை அறிவிப்பு

சென்னை: மழையால் சேதம் அடைந்த குறுவை பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: “தமிழ்நாட்டில் தற்போது தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து அதிக அளவில் பெய்து வருவதாலும், காவிரி, வைகை, தாமிரபரணி மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் அதிக அளவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாலும் அருகாமையிலுள்ள வயல்களில் வெள்ள நீர் புகுந்து வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளதாக … Read more

தாய்-மகன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டிய 3 சிறார்கள் கைது!

பொள்ளாச்சி அருகே தாய் – மகன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக மிரட்டி, 9 வயது சிறுவனிடம் பணம் பறித்த அதிர்ச்சி சம்பவத்தில் 3 சிறார்கள் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நான்காம் வகுப்பு படித்து வரும் 9 வயது மாணவனிடம் அவன் டியூசன் செல்லும் இடத்தில் 17 வயதுடைய 3 சிறுவர்கள் நண்பர்களாக பழகி உள்ளனர். இந்நிலையில் 4 வயது சிறுவனின் புகைப்படத்தையும் அவனது தாயார் … Read more

மொத்த மதிப்பு ரூ.229 கோடி… – சினிமா ஃபைனான்சியர்,  தயாரிப்பாளர்களிடம் வருமான வரி சோதனையில் சிக்கியவை

சென்னை: தமிழகத்தில் சினிமா ஃபைனான்சியர், திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தருக்கு சொந்தமான இடங்களில் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் வெளிப்படுத்தப்படாத வருமானம் ரூ.200 கோடி, வெளியிடப்படாத ரூ.26 கோடி ரொக்கம் மற்றும் கணக்கில் வராத ரூ.3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் அன்புச்செழியன். சினிமா பைனான்சியர், திரைப்படத் தயாரிப்பாளரான இவர் மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் ஓட்டல், திரையரங்கம், நிதி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் … Read more

சினிமா தயாரிப்பாளர்கள் வீடுகளில் நடந்த சோதனையில் ரூ.200 கோடி பறிமுதல்.. முழுவிவரம்!

கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் திரைப்பட தயாரிப்பாளர் அன்பு செழியின், அவரது தம்பி அழகர்சாமி, பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, ஞானவேல்ராஜா ஆகியவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.  தொடர்ந்து இவர்களின் விநியோகஸ்தர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையானது தொடர்ந்து நான்கு நாட்கள் நடத்தப்பட்டு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், சோதனை செய்தது தொடர்பான அறிக்கை ஒன்றை வருமானவரித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. … Read more

சென்னையில் பெண்களுக்காக பிரத்யேகமான இளஞ்சிவப்பு நிற பேருந்துகள்

Chennai Tamil News: சென்னையில் பெண்களின் வசதிக்காக, கட்டணம் இல்லாமல் பயணிக்கும்படி இளஞ்சிவப்பு நிறத்தில் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பெண்கள் இப்பேருந்துகளை எளிதில் கண்டறியும் வகையில், பேருந்துகளின் முன் பக்கமும் பின் பக்கமும் இளஞ்சிவப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளது.  சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் இவ்வசதியை இன்று சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் சேகர் பாபு முன்னிலையில் தொடங்கியுள்ளனர். இந்நிகழ்வை சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து தொடங்கி ஓமந்தூரார் … Read more

மேம்பாலத்தில் இருந்து கீழே எட்டிபார்த்த முதியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

காஞ்சிபுரத்தில் மேம்பாலத்தில் இருந்து கீழே எட்டிபார்த்த முதியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் சாலபோகம் தெருவை சேர்ந்தவர் துறை (71). இவர் பொன்னேரிக்கரை புதிய மேம்பாலத்தில் இருந்து கீழே எட்டிப் பார்த்தபோது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் உடனே துரையை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துரை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து … Read more

கொளத்தூரில் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் குப்பை கிடங்கு அமைப்பதற்கான நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி இறங்கியது. ஆனால் அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்பதால் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, வெற்றி என்பவர் உள்ளிட்ட இருவர், உரிமையியல் நீதிமன்ற உத்தரவுகளையும், தீர்வு அதிகாரி பிறப்பித்த உத்தரவையும் … Read more

சேலம்: லாரி டியூப்களில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த மூவர் கைது

ஆத்தூர் அருகே வனப்பகுதியில் இருந்து தலைச்சுமையாக லாரி டியூப்களில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த மூன்று பேரை கைதுசெய்து, 300 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் கல்வராயன் மலை வனப்பகுதியில் மர்ம கும்பல் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி அங்கிருந்து லாரி டியூப்கள் மூலம் சாரயத்தை கடத்தி வந்து ஆத்தூர், தலைவாசல், வீரகனூர், ஏத்தாப்பூர், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்துவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்ந்து புகார்கள் … Read more

இஸ்ரேல் தாக்குதலில் 5 வயது காசா சிறுமி பலி… உலகச் செய்திகள் சில

Israel and Gaza attacks, China army practice near Taiwan today world news: இன்று உலக நாடுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம். அணுசக்தி துறையில் கவனம் செலுத்தும் இலங்கை இலங்கையின் பொருளாதார நெருக்கடி இன்னும் ஒரு வருடத்திற்கு நீடிக்கும் என்றும், திவால் நிலையில் உள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு தளவாடங்கள் மற்றும் அணுசக்தி போன்ற புதிய துறைகளை சிந்திக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “இலங்கையை மீட்டெடுப்போம்” என்ற தலைப்பில் … Read more