மேம்பாலத்தில் இருந்து கீழே எட்டிபார்த்த முதியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

காஞ்சிபுரத்தில் மேம்பாலத்தில் இருந்து கீழே எட்டிபார்த்த முதியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் சாலபோகம் தெருவை சேர்ந்தவர் துறை (71). இவர் பொன்னேரிக்கரை புதிய மேம்பாலத்தில் இருந்து கீழே எட்டிப் பார்த்தபோது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் உடனே துரையை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துரை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து … Read more

கொளத்தூரில் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் குப்பை கிடங்கு அமைப்பதற்கான நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி இறங்கியது. ஆனால் அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்பதால் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, வெற்றி என்பவர் உள்ளிட்ட இருவர், உரிமையியல் நீதிமன்ற உத்தரவுகளையும், தீர்வு அதிகாரி பிறப்பித்த உத்தரவையும் … Read more

சேலம்: லாரி டியூப்களில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த மூவர் கைது

ஆத்தூர் அருகே வனப்பகுதியில் இருந்து தலைச்சுமையாக லாரி டியூப்களில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த மூன்று பேரை கைதுசெய்து, 300 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் கல்வராயன் மலை வனப்பகுதியில் மர்ம கும்பல் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி அங்கிருந்து லாரி டியூப்கள் மூலம் சாரயத்தை கடத்தி வந்து ஆத்தூர், தலைவாசல், வீரகனூர், ஏத்தாப்பூர், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்துவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்ந்து புகார்கள் … Read more

இஸ்ரேல் தாக்குதலில் 5 வயது காசா சிறுமி பலி… உலகச் செய்திகள் சில

Israel and Gaza attacks, China army practice near Taiwan today world news: இன்று உலக நாடுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம். அணுசக்தி துறையில் கவனம் செலுத்தும் இலங்கை இலங்கையின் பொருளாதார நெருக்கடி இன்னும் ஒரு வருடத்திற்கு நீடிக்கும் என்றும், திவால் நிலையில் உள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு தளவாடங்கள் மற்றும் அணுசக்தி போன்ற புதிய துறைகளை சிந்திக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “இலங்கையை மீட்டெடுப்போம்” என்ற தலைப்பில் … Read more

சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு ஏன் நடத்த வேண்டும்? – வேல்முருகன் வலியுறுத்தி விளக்கம்

சென்னை: “சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு மறுத்தாலும், மாநில அரசுகள் நடத்த இப்போது தடையேதும் இல்லை. எனவே, தமிழ்நாடு அரசும், அனைத்து கட்சிகளின் ஆதரவோடு மாநில அளவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தினால் தான், அனைத்து சமூகங்களின் கோரிக்கைகளை ஏற்று, சமூக நீதியை நிலை நிறுத்த முடியும்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், விகிதாச்சார உரிமை, இடஒதுக்கீடு என்று பல்வேறு பெயர்களால் … Read more

எடப்பாடி பழனிசாமியை முற்றுகையிட்ட பெண்கள் – காரணம் என்ன?

குமாரபாளையத்தில் காவிரியாற்று வெள்ளப்பெருக்கால் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்க வந்த, அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முற்றுகையிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து பெண்கள் கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீரால், ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு காவிரி கரையோரம் வசிக்கும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த கலைமகள் வீதி, மணிமேகலை வீதி, இந்திரா நகர் மற்றும் குறுங்காடு கலைவாணி நகர் உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளில் … Read more

மெரினாவில் பிளாஸ்டிக் தடை; ஒரே வாரத்தில் ரூ.9 லட்சம் அபராதம்!

Chennai Tamil News: சென்னையின் முக்கியமான அடையாளமாக திகழ்வது மெரினா கடற்கரை. சென்னை மக்கள், தமிழகத்தின் இதர பகுதி மக்கள் மட்டும் இங்கு வருவதில்லை. வெளிமாநிலங்கள், வெளிநாட்டு பயணிகளும் கூட இங்கு ஆர்வமாக வந்து போகிறார்கள். இப்படி முக்கியத்துவம் பெற்ற மெரினா கடற்கரையில் குப்பைகள் பெருகி காட்சி தருவது வேதனை. அதிலும் குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகள் நிரம்பி கிடப்பது பெரும் அபாயம். பொதுஇடங்களை மற்றும் சுற்றுலாத் தளங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள அரசு மற்றும் பல்வேறு நிறுவனங்கள் தங்களால் … Read more

சென்னையில் பிங்க் பேருந்துகள் அறிமுகம்: முழுமையாக வண்ணம் தீட்டாததால் நெட்டிசன்கள் விமர்சனம்

சென்னை: பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய சென்னையில் பிங்க் பேருந்துகள் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் விரைவில் பிங்க் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. தமிழகத்தில் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து கொள்ளலாம். இதன்படி மகளிர் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளுக்கு பிங்க் வண்ணம் தீட்டப்பட்ட 50 பிங்க் பேருந்துகளை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். மகளிர் இலவசமாக … Read more

போலி ஆவணங்கள் மூலம் நிலம் ஆக்கிரமிப்பு – மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னையை குப்பைத்தொட்டி இல்லாத நகரமாக மாற்ற சென்னை மாநகராட்சி நிர்வாகம் பொறுப்புடன் பல தரப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. குப்பைகளை வகைப்படுத்தி பிரித்து குப்பைத்தொட்டிகளில் போடுதல் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் பல விசயங்களில் கவணம் செலுத்தி மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அவ்வகையில் கொளத்தூர் தொகுதியில் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் குப்பை கிடங்கு ஒன்று அமைப்பதற்கான நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி இறங்கியது. அப்போது அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று வெற்றி என்பவரும் உடன் … Read more

தமிழகத்தில் கனமழையால் 41 வீடுகள் சேதம், முகாம்களில் 6,109 பேர் தங்கவைப்பு: அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் கனமழை – வெள்ளப்பெருக்கு காரணமாக 12 மாவட்டங்களில் 41 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும், 9 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 53 நிவாரண முகாம்களில் 6,109 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வெளியிட்ட தகவல்: “தென் மேற்கு பருவமழைக் காலத்தில் 1-6-2022 முதல் 5-8-2022 முடிய 266.4 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவைக் காட்டிலும் 104 விழுக்காடு கூடுதல் … Read more