தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்திலிருந்து திருடுபோன 'சரபோஜி – சிவாஜி மன்னர்கள் ஓவியம்' அமெரிக்காவில் கண்டுபிடிப்பு: தமிழகம் கொண்டுவர நடவடிக்கை

சென்னை: தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்திலிருந்து திருடுபோன சரபோஜி, சிவாஜி மன்னர்கள் ஓவியம் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை மீட்டு தமிழகம்கொண்டு வர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி மஹாலில் வைக்கப்பட்டிருந்த மன்னர்கள் சரபோஜி, அவரது மகன் சிவாஜி ஆகியோர் இணைந்திருக்கும் ஓவியம் திருடுபோனது. இந்த ஓவியம் 1822-1827 காலகட்டத்தில் வரையப்பட்டது. அதை கண்டுபிடிக்குமாறு 2017-ல் ராஜேந்திரன் என்பவர், தமிழக காவல் துறையில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப் … Read more

தமிழகத்தில் 23 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று நீலகிரி, கோவை, தேனி, திருப்பத்தூர், தருமபுரி, செங்கல்பட்டு, அரியலூர் உள்பட 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 23 முதல் 25ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் … Read more

பேருந்து ஓட்டுனரின் இருக்கை அருகில் உள்ள கதவில் அமர்ந்து ஆபத்தான நிலையில் பயணிக்கும் பெண் பயணி.!

கோவையில் தனியார் பேருந்து ஓட்டுனரின் இருக்கை அருகில் உள்ள கதவில் அமர்ந்து ஆபத்தான நிலையில் பயணிக்கும் பெண் பயணி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காந்திபுரம்- ஆனைகட்டிக்கு செல்லும் தனியார் பேருந்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.  ஆனைகட்டிக்கு செல்லும் வழி மலைப்பாதை என்பதால் பல்வேறு வளைவுகள் இருக்கின்ற சூழலில் இது போன்று பயணிப்பது மிகவும் ஆபத்தானது என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். எனவே அப்பகுதிக்கு கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை … Read more

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்க பட்டியல் தயாரிப்பு: கவனமுடன் இறுதிசெய்ய கல்வித் துறை உத்தரவு

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் வகையில் பட்டியலை கவனமுடன் இறுதிசெய்து அனுப்ப கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் வெ.ஜெயக் குமார் (தொழிற்கல்வி), அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பாண்டில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்குவதற்கான உத்தேச தேவைபட்டியலை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு … Read more

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் உளவுத் துறை ஏடிஜிபியை பணி நீக்கம் செய்ய வேண்டும்: ஆளுநரிடம் பாஜக மாநிலத் தலைவர் முறையீடு

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்தார். மாநிலத் துணைத் தலைவர்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமிமற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்னர், மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், செய்தி யாளர்களிடம் கூறியதாவது. தமிழகத்தில் நடைபெறும் தேசவிரோத செயல்கள் குறித்து ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம். அவை தமிழகத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளன. தமிழகத்தில் தீவிரவாதம் தலை விரித்தாடுகிறது. தீவிரவாதிகளுக்கு போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காவல் துறை அதிகாரிகள்உடந்தையாக இருந்திருக்கிறார் கள். … Read more

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சின்ன சேலம் பள்ளி மாணவி உடலை மறு உடற்கூறாய்வு செய்வது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நாளை (ஜூலை 22) தாக்கல் செய்ய அவரது தந்தை தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் மாணவி மரணமடைந்ததை அடுத்து, அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் 3 அரசு மருத்துவர்கள் மற்றும் ஒரு ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூராய்வு நடத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி … Read more

திருச்சியில் அமைச்சர்களின் ஆதரவாளர்களால் சூடுபிடிக்கும் திமுக உட்கட்சி தேர்தல்: நடப்பது என்ன?

திருச்சி: திருச்சி மாநகரச் செயலாளர் பதவியை குறிவைத்து திருச்சி மாநகர திமுகவின் பகுதிகள் சீரமைப்பில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யா மொழி ஆதரவாளர்களின் அடுத்தடுத்த காய்நகர்த்தலால், உட்கட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ளது. இதற்கு கட்டியம் கூறும் வகையில் கட்சித் தலைமையும் பகுதி கழகம் குறித்து திருத்தத்துக்கு மேல் திருத்தம் அறிவித்துள்ளது. திருச்சி மாவட்ட திமுக ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது மாநகர திமுக ஒரே அமைப்பாக இருந்தது. அதன்பின் வடக்கு, தெற்கு, மத்திய என 3 ஆக மாவட்டங்களாக … Read more

மயிலாப்பூர், தாம்பரம், பல்லாவரம்… சென்னையில் இன்று இந்த ஏரியாக்களில் மின் தடை! 

சென்னையில் இன்று (ஜூலை:21) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், திருவேற்காடு, தாம்பரம், பெரம்பூர் ஆகிய துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது. மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். மயிலாப்பூர்;  மந்தவெளி வி.கே.ஐயர் ரோடு, ஜேத் நகர் மெயின் ரோடு,  ஜேத் நகர் 1வது மற்றும் … Read more