அதிமுக அலுவலகத்தில் ஆவணங்கள் கொள்ளை – சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் சி.வி.சண்முகம் புகார்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து கட்சி அலுவலக அசல் பத்திரங்கள், முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்ததாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 9 நிர்வாகிகள் மீது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தநிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அருகே கடந்த 11-ம் தேதி ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, … Read more

வீட்டிற்குள் நுழைந்த விஷப் பாம்பு: ஒருமணி நேரம் போராடிப் பிடித்த தீயணைப்புத் துறையினர்

பொன்னமராவதி அருகே வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பை ஒருமணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் லாவகமாக பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பாண்டி அம்மன் கோயில் வீதியில் வசிப்பவர் ராஜேஸ்வரி. இவரது வீட்டிற்குள் விஷப் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதை பார்த்த ராஜேஸ்வரி, அதிர்ச்சி அடைந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொன்னமராவதி தீயணைப்புத் துறை வீரர்கள் சுமார் ஒருமணி நேரம் போராடி பாம்பு பிடிக்கும் கருவியைக் கொண்டு லாவகமாக … Read more

சென்னை வடபழனி, திருப்போரூர், சிறுவாபுரி உட்பட முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை விழா

சென்னை வடபழனி முருகன் கோயில், கந்தக்கோட்டம், திருப்போரூர் கந்தசாமி கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் நேற்று ஆடிக் கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். முருகன் கோயில்களில் சித்திரை, மாசி, கார்த்திகை, ஆடிக் கிருத்திகை நாட்கள் விசேஷமாக கொண்டாடப்படும். இதன்படி ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் இந்த வைபவத்தின்போது பக்தர்கள் காவடி எடுத்தும், … Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழை  – வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  இந்த நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி … Read more

Today Tamil News LIVE: கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் ஓபிஎஸ்

Go to Live Updates இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வுதமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்4 நிலை (கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், ஸ்டெனோகிராபர், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையர்) பணிகளுக்கான தேர்வு இன்று காலை 9 மணிக்கு தொடங்கிநடைபெறுகிறது. தேர்வர்கள் கருப்பு பால்பாயிண்ட் பேனா பயன்படுத்தி ஓஎம்ஆர் சீட்டை நிரப்ப வேண்டும். மேலும் ஹால் டிக்கெட், முகக்கவசம் (மாஸ்க்) உள்ளிட்டவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். காலியாகவுள்ள 7301 பணியிடங்களுக்கு 21.85 லட்சம் … Read more

தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் வரை இபிஎஸ் பரிந்துரைகளை ஏற்க வேண்டாம் – மக்களவை தலைவருக்கு ஓபிஎஸ் கடிதம்

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் வரை, பழனிசாமியின் பரிந்துரைகளை ஏற்க வேண்டாம் என்று மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பழனிசாமி, கட்சியில் இருந்து ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி.யை நீக்கினார். தொடர்ந்து, அவரது அதிமுக எம்.பி. என்ற அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு மக்களவை தலைவருக்கு கடிதம் அனுப்பினார். இந்நிலையில், மக்களவை தலைவருக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அனுப்பியுள்ள கடிதத்தில் … Read more

எதிர்பார்த்து ஏமாந்த அஜித் ரசிகர்கள் – மகிழ்ச்சியில் திளைக்க வைத்த யாஷிகா ஆனந்த்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடிகர் அஜித்குமாரை காண வந்து ஏமாற்றமடைந்த ரசிகர்கள். ஆனால் நடிகை யாஷிகா ஆனந்தை பார்த்த மகிழ்ச்சியில் கலைந்து சென்றனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவில் ஏழு நிலை புதிய ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா கடந்த ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (24.07.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 24/07/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 20/16/14 நவீன் தக்காளி 15 நாட்டு தக்காளி 10/7 உருளை 40/34/27 சின்ன வெங்காயம் 40/30/26 ஊட்டி கேரட் 45/40/30 பீன்ஸ் 60/55/50 பீட்ரூட். ஊட்டி 50/45 கர்நாடக பீட்ரூட் 20/15 சவ் சவ் 20/18 முள்ளங்கி 12/10 முட்டை கோஸ் 15/13 வெண்டைக்காய் 28/25 உஜாலா கத்திரிக்காய் 40/30 வரி கத்திரி 25/20 காராமணி … Read more