கள்ளக்குறிச்சி மாணவி மரணம் திமுக ஆட்சியின் மதிப்பீட்டிற்கு எடுத்துக்காட்டு: ஓ.எஸ்.மணியன்

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் திமுக ஆட்சியின் மதிப்பீட்டிற்கு எடுத்துக்காட்டாக உள்ளது என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மற்றும் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய ஓ.எஸ்.மணியன், “மக்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகையை எப்படி ரத்துசெய்வது, ஒடுக்குவது என்று யோசிக்கும் அரசாக திமுக உள்ளது. ஒரேநாடு ஓரேதேர்தல் நடைமுறைக்கு … Read more

ஓபிஎஸ் இல்லாத அதிமுக-வை பாஜக ஏற்றுக்கொள்ளுமா? அண்ணாமலை பதில்

ஓபிஎஸ் இல்லாத அதிமுகவை பாஜக ஏற்றுகொள்ளுமா என்ற கேள்விக்கு அண்ணாமலை, அதிமுக தொண்டர்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற ராம்நாத் கோவிந்த் பிரிவு உபச்சார விழாவில்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அவருடன் எடப்பாடி பழனிசாமியும் உடன் இருந்தார். இந்நிலையில் பிரதமரை எடப்பாடி பழசாமி சந்திப்பார் என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. திரெளபதி முர்மு இன்று குடியரசுத் தலைவராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்வில் … Read more

திருவள்ளூர்: பள்ளி விடுதியில் 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.!!

திருத்தணி அருகே தக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் பூசனம். இவரது ஒரே மகள் சரளா (வயது 17). இவர் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை மாணவி சரளா வழக்கம் போல் பள்ளிக்கு செல்ல சீருடை அணிந்து, விடுதியில் இருந்த சக மாணவிகளுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.  பின்னர் சக மாணவிகள் உணவு அருந்த சென்று விட்டனர். அப்போது … Read more

கருணை பயணம் விடுதியில் 50 பேருக்கு மொட்டை கடத்திச் சென்றது ஏன்?

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கருணை பயணம் விடுதியில் 50க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்து அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவத்தில் ஆசிரம நிர்வாகிகள் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த அட்டுக்கல் மலை அடிவாரத்தில் தனியாருக்கு சொந்தமான தடை செய்யப்பட்ட கருணை பயணம் கிருஸ்தவ விடுதி உள்ளது. இங்கு கடந்த 2 தினங்களாக அடையாளம் தெரியாதவர்களை வாகனங்களில் கொண்டு வந்து தங்க வைத்ததாக கூறப்படுகிறது. காப்பாற்றுங்கள் என்று உதவி கேட்டு இரவு முழுவதும் … Read more

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு இபிஎஸ் வாழ்த்து

சென்னை: இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், 15ஆவது இந்திய குடியரசுத் தலைவராக, இன்று பதவியேற்றுள்ள, முதல் பழங்குடியின பெண்மணி, மேதகு திருமதி.திரவுபதி முர்மு அவர்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும்,தமிழக மக்களின் சார்பிலும்,எனது மனமார்ந்த … Read more

விழுப்புரம்: மின்கசிவால் தீப்பற்றி எரிந்த பஞ்சு குடோன்

விழுப்புரம் அருகே மின்கசிவு காரணமாக பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே கலியமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான இந்தியன் பெட்மார்ட் என்ற கடை இயங்கி வருகிறது. மேலும் அதே பகுதியில் கடைக்கு தேவையான மெத்தை, தலையணை, ஷோபா உள்ளிட்டவை தயாரிக்கப்படும் குடோன் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை உயரழுத்த மின்சாரம் காணமாக மின்கசிவு ஏற்பட்டு பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. பஞ்சு … Read more

பிசிஓடி மற்றும் டயாபட்டீஸ்: யார் அதிக ஆபத்தில் உள்ளனர்?

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS), பெண்களிடையே இருக்கும் ஒரு ஹார்மோன் கோளாறு, இது வெளிப்புற விளிம்புகளில் சிறிய நீர்க்கட்டிகளுடன், விரிந்த கருப்பைகளை ஏற்படுத்துகிறது, இது ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் பல சந்தர்ப்பங்களில், கருவுறாமையுடன் தொடர்புடையது. ஆனால், PCOS உள்ள பெண்களும் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) படி, ” PCOS கொண்ட பெண்கள், பெரும்பாலும் இன்சுலின் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள்; அவர்களின் உடல்கள் … Read more

#Breaking || திருவள்ளூர் திருஇருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தற்கொலை – சாலை மறியல், போராட்டம்.!

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு காவல் நிலைய எல்லைக்கட்பட்ட கீழச்சேரி பகுதியில் அரசு உதவி பெறும் திரு இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் விடுதியில் தெக்களூர் பகுதியை சேர்ந்த சரளா என்ற பனிரெண்டாம் வகுப்பு மாணவி, இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி தற்கொலை செய்து கொண்டதை சக மாணவிகள் விடுதி காப்பாளருக்கு தகவல் அளித்துள்ளனர். பள்ளி நிர்வாகம் சார்பாக உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து, மப்பேடு காவல் … Read more

குரூப்-4 தேர்வை 18.5 லட்சம் பேர் எழுதினர்: பல்வேறு மையங்களில் தாமதமாக வந்த தேர்வர்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் தவிப்பு

சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் நேற்று காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வை எழுத மொத்தம் 22 லட்சத்து 2,942 பேர் பதிவு செய்திருந்தனர். அதில் 18 லட்சத்து 50,471(84%) பேர் மட்டுமே தேர்வில்கலந்துகொண்டனர். … Read more

நுகர்வு குறைவு; தேக்கம் அதிகம் – நாமக்கல்லில் மீண்டும் குறைந்த முட்டை விலை

நாமக்கல் மண்டலத்தில் மீண்டும் முட்டை விலை சரிந்தது. ஒரே நாளில் 25 காசுகள் சரிந்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசுகளில் இருந்து 25 காசுகள் குறைத்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 8ஆம் தேதி முட்டை பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 50 … Read more