#தூத்துகுடி || வடமாநில இளைஞர் சடலமாக மீட்பு, காவல்துறையினர் விசாரணை..!

இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் உள்ள தனியார் மரக்கடை அருகில், உப்பள பகுதியில் அடையாளம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் இறந்தவர் யார்? … Read more

4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக. 8-ம் தேதி (இன்று) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆக. 9, 10-ம் தேதிகளில் நீலகிரி,கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, வட தமிழக கடலோர … Read more

இந்தி படத்தை ரிலீஸ் செய்யும் உதயநிதி: ‘இந்தி திணிப்பை மட்டுமே எதிர்ப்போம்’ என விளக்கம்

ஹாலிவுட்டில் 1994 ஆம் ஆண்டு வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ திரைப்படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். உலக அளவில் ஏற்கெனவே பிரபலமான ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தை தழுவி பாலிவுட்டில், லால்சிங் சர்தா என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில், பாலிவுட் நடிகர் அமீர்கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அமீர்கான் நடித்துள்ள இந்த லால்சிங் சத்தா என்ற இந்திப் படம், தமிழ் … Read more

செஸ் ஒலிம்பியாட் தொடர் நிறைவு விழா, நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்..!

சென்னையை அடுத்த மாம்மல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி கடந்த 28ம் தேதி கோலாக்கலாமாக தொடங்கியது.  இந்த போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்நிலையில், நாளை இந்த போட்டியில் நிறைவு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது அதனால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, 44-வது செஸ் ஒலிம்பியாட் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் 9-ந்தேதி … Read more

அரசியலமைப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு வந்தால் ஜனநாயகம் மலரும் – உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி செலமேஸ்வர் கருத்து

சென்னை: அரசியலமைப்பு சட்டம் குறித்த புரிதல், விழிப்புணர்வு மக்களிடம் வரும்போதுதான் நாட்டில் உண்மையான ஜனநாயகம் மலரும் என்று, சென்னையில் நடந்த கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற முன்னாள்நீதிபதி செலமேஸ்வர் தெரிவித்தார். சென்னை தரமணியில் உள்ள ஆசிய ஊடகவியல் கல்லூரியில் (ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்) ‘அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று நடந்தது. இந்த நிகழ்வில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் காளீஸ்வரம் ராஜ் எழுதிய ‘சட்டம், வாழ்க்கையில் அரசியலமைப்பின் அக்கறைகள்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. நூலை … Read more

கிருஷ்ணகிரி | சந்தையில் விலை வீழ்ச்சி – மீன்களுக்கு உணவாக ஏரியில் தக்காளியை கொட்டிய விவசாயிகள்

மகசூல் அதிகரிப்பால், விலை குறைந்துள்ள நிலை யில் போச்சம்பள்ளி பகுதி விவசாயிகள் மீன்களுக்கு உணவாக தக்காளியை ஏரியில் கொட்டி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகாவில் மருதேரி, பண்ணந்தூர், பனங்காட்டூர், அரசம்பட்டி, சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி விலை ரூ.100-க்கும் அதிகமாக விற்பனையானது. இதையடுத்து, இப் பகுதியில் விவசாயிகள் பலர் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டனர். தற்போது, தக்காளி மகசூல் அதிகரித்துள்ளது. இதனால், … Read more

காவிரியின் துணை ஆறான தொட்டல்லா காட்டாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்: மலைக் கிராம விவசாயிகள் வலியுறுத்தல்

அஞ்செட்டி வனச்சரகத்தில் ஓடும் காவிரி ஆற்றின் துணை ஆறான தொட்டல்லா காட்டாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என மலைக் கிராம விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். ஓசூர் வனக்கோட்டத்தில் அஞ்செட்டி மற்றும் உரிகம் வனச்சரகங்கள் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த வனச்சரகங்களின் இடையே 46 கிமீ தூரம் காவிரி ஆற்றின் துணை ஆறான தொட்டல்லா காட்டாறு ஓடுகிறது. அஞ்செட்டியை அடுத்த குந்துக்கோட்டை மலையில் உற்பத்தியாகும் தொட்டல்லா காட்டாறு அஞ்செட்டி வழியாக ஓடி உரிகம் வனச்சரகத்தில் உள்ள … Read more

காமன்வெல்த் 10ஆம் நாள் ஆட்டத்தில் அசத்திய இந்திய வீரர்- வீராங்கனைகள்!

காமன்வெல்த் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 8) ஆட்டத்தில் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியை தழுவினார். மும்முறை தாண்டுதல் போட்டிஆண்கள் டிரிபிள் ஜம்ப் (மும்முறை தாண்டுதல்) போட்டியில் இந்தியாவின் எல்தோஸ் பால் தங்க பதக்கத்தையும், அப்துல்லா அபூபக்கர் வெள்ளியையும் வென்றனர். வரலாறு படைத்த மகளிர் ஹாக்கிஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி 16 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்றது. இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றது. நிகத் ஜரீன் தங்கம் நடப்பு … Read more

சென்னை மாநகர பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும் – ராமதாஸ்

சென்னை: சென்னை மாநகர பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”சென்னை மாநகரப் பேருந்துகளை படிப்படியாக தனியார்மயமாக்க தமிழக அரசு தீர்மானித்திருப்பதாகவும், அதற்காக உலக வங்கியுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கட்டமைப்பை அடித்தட்டு மக்களிடமிருந்து பறிப்பதற்கு வகை செய்யும் இந்த நடவடிக்கை எந்த வகையிலும் ஏற்க முடியாததாகும். … Read more