கமுதி: 3000 ஆண்டு பழமையான மண் குவளைகள், முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

கமுதி அருகே 3000 ஆண்டு பழமையான சிறிய வகை மண் குவளைகள், முதுமக்கள் தாழியை அப்பகுதி இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள செய்யாமங்கலம் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்மாய் வரத்து கால்வாய் சீரமைப்பு பணியின்போது ஒரு குறிப்பிட்ட பகுதியில் 10 முதல் 20 வரையிலான முதுமக்கள் தாழிகள் பூமிக்கு அடியில் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் கிராம மக்கள் அதனை பழைய மண்பானைகள் என கருதி, பொருட்படுத்தாமல் கண்டு கொள்ளாமல் விட்டுச் … Read more

Chennai Tamil News: ரூ20 கோடி செலவில் புதுப்பொலிவு பெற இருக்கும் கிண்டி பூங்கா: என்னென்ன புதிய வசதிகள்?

Chennai Tamil News: தமிழக அரசு 20 கோடி ரூபாய் செலவில் கிண்டி தேசிய பூங்காவை புதுப்பிக்கவுள்ளது. கிண்டி தேசிய பூங்காவின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு கூறியதன்படி, கிண்டி சிறுவர் பூங்கா மட்டும் தான் ஆண்டிற்கு எட்டு முதல் ஒன்பது லட்சம் பார்வையாளர்களைக் கொண்ட நகரத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. “கிண்டி குழந்தைகள் பூங்காவில் விலங்குகளை அடைக்கும் வசதி, திறந்தவெளி விளையாட்டுப் பகுதிகள், சிற்றுண்டிச்சாலை, குழந்தைகள் வனவிலங்கு நூலகம், இயற்கையை ரசித்தல் … Read more

ஒலிம்பியாட் விழா: சங்க காலம் முதல் சமகாலம் வரை – கமல் குரலில் வியக்கவைத்த நிகழ்த்துக் கலை

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் குரலில் தமிழர்களின் பல நூறு ஆண்டுகால வரலாற்றை பின்னணியாக கொண்ட நிகழ்த்துக் கலை நடனம் அனைவரையும் வியக்க வைத்தது. 4-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியின் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. விழாவை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் … Read more

செஸ் ஒலிம்பியாட்: பிரதமர் மோடி படம் இடம்பெறுவதை உறுதி செய்க – ஐகோர்ட் கிளை

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் இடம் பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தில் சென்னை மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்க உள்ளது. பிரதமர் மோடி இந்தப் போட்டிகளை தொடங்கி வைக்க உள்ளார். ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ள இந்த போட்டியின் … Read more

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் மோடி படம் சேர்க்க கோரி வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு

Madurai HC reserves case to add PM Modi photo in Chess Olympiad advertisements: செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் மோடியின் பெயர் மற்றும் புகைப்படம் சேர்க்க கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் இன்று முதல் தொடங்குகிறது. இதில் 180க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துக் கொள்கின்றனர். இதற்காக … Read more

திருவண்ணாமலை சுயம்பு சுப்பிரமணியசாமி கோவிலில் ஜப்பானியர்கள் நடத்திய சிறப்பு யாகம்.!

திருவண்ணாமலை : தேவனாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு சுப்பிரமணியசாமி கோவிலில் ஜப்பான் பக்தர்கள், உலக நன்மைக்காகவும், நாடு முழுவதும் மழை பொழிய வேண்டியும் சிறப்பு யாகத்தில் ஈடுபட்டனர்.  இதில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சாக்கிகோ ஓஷி, மாஸ்கோஓஷி, சாயாஓஷி என பத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். மேலும், தேவனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த யாகத்தினை சுயம்பு சுப்பிரமணியசாமி கோவில் குருக்கள் சந்தோஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினார்கள். இந்த யாகத்தின் … Read more

மோடி வருகை: கிண்டி பகுதிகளில் நாளை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதன் காரணமாக நாளை சென்னை – கிண்டி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அண்ணா பல்கழைகழகத்தில் நாளை நடைப்பெறும் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதன் காரணமாக சர்தார் பட்டேல் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் காலை நேரங்களில், குறிப்பாக காந்தி மண்டபம் சாலை, காண்கார்டு சந்திப்பு, ஹால்டா சந்திப்பு, கிண்டி மேம்பாலம் முதல் சென்னை விமான நிலையம் … Read more

இட்லி முதல் இத்தாலி உணவு வரை! செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு வழங்கப்படும் விருந்து பட்டியல்

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரில் பங்கேற்க வந்துள்ள வீரர், வீராங்கனைகளுக்கு நம்மூர் இட்லி முதல் இத்தாலி நாட்டு உணவு வரை 47 வகையான உணவு வகைகளுடன் விருந்தளிக்கப்படுகிறது. இவர்களுக்கான உணவின் தரம் குறித்து உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். தமிழரின் தனித்த பண்பாடுகளில் விருந்தோம்பலும் ஒன்று. செஸ் ஒலிம்பியாட்டுக்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளநிலையில், போட்டியில் பங்கேற்போர், விருந்தினர்களுக்கான விருந்தோம்பலிலும் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. 187 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் தமிழகம் வந்துள்ள நிலையில், அவர்களுக்கு சுவையான … Read more

செஸ் ஒலிம்பியாட்: 87 பேருந்துகளில் நேரு விளையாட்டு அரங்கம் வந்த சதுரங்கப் படை

சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள 87 பேருந்துகளில் வீரர், வீராங்கனைகள் நேரு உள் விளையாட்டு அரங்கம் வந்தனர். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று மாலை 5 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், … Read more

தமிழகம் வரும் பிரதமர் மோடி.. வழிநெடுக பேனர்கள்; போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் சென்னை

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகிறார். தனி விமானம் மூலம் அகமதாபாத்தில் இருந்து இன்று மாலை சென்னை வரும் பிரதமர், விமான நிலைய வி.ஐ.பி அறையில் சிறிது நேரம் ஒய்வெடுக்க இருக்கிறார். அதற்குப் பின் அடையாறு ஐ.என்.எஸ் தளத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மாலை 6 மணியளவில் நேரு விளையாட்டு அரங்கம் செல்கிறார். பிரதமரின் வருகைக்காக சென்னையில் மட்டும் 22 ஆயிரம் போலீசார் உதவியுடன் பாதுகாப்பு … Read more