செஸ் ஒலிம்பியாட்: 87 பேருந்துகளில் நேரு விளையாட்டு அரங்கம் வந்த சதுரங்கப் படை

சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள 87 பேருந்துகளில் வீரர், வீராங்கனைகள் நேரு உள் விளையாட்டு அரங்கம் வந்தனர். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று மாலை 5 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், … Read more

தமிழகம் வரும் பிரதமர் மோடி.. வழிநெடுக பேனர்கள்; போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் சென்னை

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகிறார். தனி விமானம் மூலம் அகமதாபாத்தில் இருந்து இன்று மாலை சென்னை வரும் பிரதமர், விமான நிலைய வி.ஐ.பி அறையில் சிறிது நேரம் ஒய்வெடுக்க இருக்கிறார். அதற்குப் பின் அடையாறு ஐ.என்.எஸ் தளத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மாலை 6 மணியளவில் நேரு விளையாட்டு அரங்கம் செல்கிறார். பிரதமரின் வருகைக்காக சென்னையில் மட்டும் 22 ஆயிரம் போலீசார் உதவியுடன் பாதுகாப்பு … Read more

“புதுச்சேரியில் தகுதியுடைய சிறைக் கைதிகளை விடுதலை செய்வதிலும் அரசியல்” – திமுக குற்றச்சாட்டு

புதுச்சேரி: “மத்திய அரசின் உத்தரவின்படி 75-ம் ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் தகுதியான கைதிகளை விடுதலை செய்ய புதுச்சேரி மாநில அரசு கண்காணிப்பு குழுவைக் கூட நியமிக்கவில்லை” என்று திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறியது: “நம் நாட்டில் ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டு காலமாக உள்ளது. ஆனால் புதுச்சேரியில் ஆயுள் தண்டனைக் கைதிகள் 14 ஆண்டுகளை தாண்டியும் தொடர்ந்து சிறையில் இருந்து வருகின்றனர். … Read more

பொதுக்குழு விவகாரம்: அதிமுக தலைமை நிலைய செயலகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு

கடந்த 11ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு விவகாரம் தொடர்பாக அதிமுக தலைமை நிலைய செயலகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் அக்கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதால் பொதுக்குழுவை நடத்தலாம். உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம். … Read more

செஸ் ஒலிம்பியாட்: நேரு உள் விளையாட்டு அரங்கில் மின்னும் சதுரங்கம்!

சென்னை: நேரு விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மேடையானது மின்னும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று மாலை 6 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். இதில் கலந்து கொள்ள 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் இருந்து … Read more

வரவேற்க ஈபிஎஸ், வழியனுப்ப ஓபிஎஸ்! – மோடியைச் சந்திக்கும் திட்டம் இதுதான்

அதிமுகவில் தலைமைப் பதவிக்கான போட்டி நிறைவடைந்து விட்டதாக ஒரு தோற்றம் உருவாகியுள்ள போதிலும், பிரதமர் நரேந்திர மோடியுடன் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர் செல்வமும் தனித்தனியாக சந்தித்த பிறகு கட்சியில்  மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியை இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து தொடங்கி வைக்கவுள்ளார். அவர் வருவது என்னவோ செஸ் போட்டியை தொடங்கி வைப்பதற்காகதான் என்றாலும், அதிமுகவினருக்கு மோடியின் … Read more

'தமிழக மக்களுடன் இணைந்து பிரதமர் மோடியை வரவேற்கிறேன்' – ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழக மக்களுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்பதாக ஆளுநர் மாளிகை ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் தமிழக மக்களுடன் இணைந்து பிரதமர் மோடியை வரவேற்கிறேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இது … Read more

சென்னைவாசி ஒருவரின் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைப்பு – உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னையை சேர்ந்த ஒருவருக்கு மாநகராட்சி சொத்து வரி உயர்வை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் சொந்தமாக வீடு வைத்திருப்பவர்களுக்கு சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் அரசாணை பிறப்பித்தது. முன்பு விதிக்கப்பட்ட சொத்து வரியை விட இதில் பல மடங்கு வரி உயர்த்தப்பட்டது. இதற்கு சென்னைவாசிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், சொத்து வரி உயர்வு திரும்பப் பெறப்படவில்லை. இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை எதிர்த்து … Read more

பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து – தொழிலாளி உயிரிழப்பு

பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி நாகராஜ்(54). இவர் நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு, கரிசல்பட்டியை சேர்ந்த மலைசாமி(48) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மேலக்கோட்டை பெரியார் காலனி சர்வீஸ் சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பின்னால் அமர்ந்திருந்த நாகராஜ் சம்பவ … Read more

சாத்தூர் | பாலியல் வழக்கில் கைதான -ஆசிரியரை விடுவிக்கக் கோரி வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்

சாத்தூர் அருகே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுதலை செய்யக் கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். சாத்தூர் அருகே புதுச்சூரங்குடி அரசு உயர்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் தாமோதரன் (50) பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாகவும், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் கூறப்பட்ட புகாரையடுத்து, அவரை போக்ஸோ வழக்கில் திங்கள்கிழமை சாத்தூர் தாலுகா போலீஸார் கைது செய்தனர். இதனால், ஆசிரியர் தாமோதரனை தற்காலிக பணி நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்தது. … Read more