அகவிலைப்படி உயர்வு… தமிழக அரசு அதிரடி – அரசு ஊழியர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகள்
Tamil Nadu Government: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 9 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Tamil Nadu Government: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 9 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு, மகப்பேறு விடுப்பு காலமும் பதவி உயர்வுக்கான தகுதிகாண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டபேரவை இன்று (ஏப்.28) காலை கூடியதும் முதல்வர் ஸ்டாவில் விதி எண் 110-ன் கீழ் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார். மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு வரும் செப்டம்பருக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் அவர் கூறினார். பேரவையில் … Read more
சென்னை: சென்னை காசிமேட்டில் வெளி மாநில மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என மீன்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த 15-ம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. இதனால், காசிமேட்டில் இருந்து விசைப் படகுகள் ஆழ்கடலுக்குச் செல்லவில்லை. சிறிய மற்றும் மீன்பிடி படகுகள் மூலம் மீனவர்கள் அண்மைக் கடல் பகுதியில் இருந்து மீன்பிடித்து வருகின்றனர். இதனால், குறைந்த அளவு மீன்களே வருகின்றன. இதனால், மீனவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து மீன்களை வாங்கி … Read more
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் பி.காளியம்மாள் கடந்த பிப்ரவரியில் அந்தக் கட்சியிலிருந்து விலகினார். அப்போது, “தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வகையில் எம் பயணம் தொடரும்” என அறிவித்திருந்தவர், இதுவரை எந்தக் கட்சியிலும் இணையாமல் இருக்கிறார். இந்த நிலையில், நாதக-வில் தனக்கு என்ன நடந்தது… விலகலுக்கான காரணம்… எதிர்கால திட்டம் உள்ளிட்டவை குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் மனம்திறந்து பேசினார் காளியம்மாள். மீனவக் குடும்பத்தில் பிறந்து ஒரு சமூக செயல்பாட்டாளராக வளர்ந்த உங்களுக்கு நாதக அறிமுகம் … Read more
தொலைக்காட்சியில் வர வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது என்று திருமாவளவனை சுட்டி காமித்து நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
குன்னூர்: இந்திய ராணுவ முன்னாள் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எஸ். பட்டாபிராமன்(78) குன்னூரில் காலமானார். இவருக்கு 42 குண்டுகள் முழங்க, ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் பட்டாபிராமன், ராணுவத்தில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். பாம்பே சாப்பர்ஸின் கர்னல் கமாண்டராகப் பணியாற்றியுள்ள இவர், இந்திய ராணுவத்தின் தகவல் அமைப்புகளின் முதல் இயக்குநராகவும், மேற்கு கட்டளையின் ராணுவ தளபதியாகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். 40 ஆண்டு … Read more
சென்னை: அரசியல் லாப, நஷ்டம் பார்க்காமல் திமுக கூட்டணியில் பயணிக்கிறோம். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் சார்பு அணிகள் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியுள்ளார். மதிமுக 32-வது ஆண்டு தொடக்கத்தையொட்டி தொண்டர்களுக்கு வைகோ எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மதிமுக தனது அரசியல் பயணத்தில் 31 ஆண்டுகளைக் கடந்து 32-வது ஆண்டில் மே 6-ம் தேதி அடியெடுத்து வைக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு திராவிட இயக்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய வரலாற்று … Read more
திண்டுக்கல்: தொகுதி ஒதுக்கீடு குறித்து இபிஎஸ், அமித்ஷா இருவரும் பேசிக்கொள்வார்கள் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மக்களுக்கு ஆதரவான திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசு செய்யும். ஹைட்ரோ கார்பன் அனுமதி கொடுத்தது யார் என்று உங்களுக்கு தெரியும். அவர்களுடைய கூட்டணி ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட ஒன்று. எல்லோருக்கும் எல்லாம் கொடுப்பது தவறில்லை. ஆனால் அனைவருக்கும் அது கிடைக்க வேண்டும். சொல்வது முக்கியமில்லை … Read more
சென்னை: அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் நேற்று ராஜினாமா செய்தனர். முதல்வரின் பரிந்துரையை ஏற்று இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அவர்களிடம் இருந்த துறைகள், அமைச்சர்கள் சிவசங்கர், முத்துசாமியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, … Read more
தமிழகத்தில் இன்றுமுதல் மே 2-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.27) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்.29 முதல் மே 2-ம் … Read more