போதிய வசதிகள் இல்லாத 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்

தகுதியான பேராசிரியர்கள், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கல்லூரிகளில் தகுதியான பேராசிரியர்கள் இல்லாததுடன், ஆய்வகங்கள், உபகரணங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் குறைவாக இருப்பது தெரியவந்ததை அடுத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.   Source link

“ஆ.ராசாவின் பேச்சை முதல்வர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை” – தமிழக பாஜக அதிருப்தி

நாமக்கல்: “திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, தனித் தமிழ்நாடு கேட்போம் என பேசியது கண்டிக்கத்தக்கது” என பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி. துரைசாமி தெரிவித்தார். நாமக்கல்லில் பாஜக அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநில துணைத் தலைவரும், முன்னாள் துணை சபாநாயகருமான வி.பி.துரைசாமி செய்தியாளர்களிடம் கூறியது: ”கடந்த 3ம் தேதி நாமக்கல்லில் திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் கலந்துகொண்டு பேசும்போது, … Read more

இதுல ‘ரிமோட்’ படத்தை 1% பேர்தான் கண்டுபிடிச்சிருக்காங்க.. நீங்க ட்ரை பண்ணி பாருங்க…

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் குழப்பமானவை. முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். முதலில் குழப்பத்தை அளிக்கும் விடை தெரியும்போது ஆச்சரியத்தை அளிக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பொழுதுபோக்கு புதிராக மட்டுமல்லாமல் ஆளுமையை வெளிப்படுத்தக்கூடியவையாகவும் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், நுண்ணறிவை பரிசோதனை செய்கிற ஐக்யூ டெஸ்ட் படங்களாகவும் இருக்கின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நெட்டிசன்களின் அடிக்‌ஷன், டிஜிட்டல் ஜோசியம், ஆளுமை சோதனை, பொழுது போக்கு புதிர் இப்படி என்ன வேண்டுமானாலும் … Read more

அரசு பேருந்து மரத்தில் மோதி விபத்து.! 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!

அரசு பேருந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது சூடப்பட்டி பகுதி அருகே முன்னாள் சென்ற லாரியை பேருந்து முந்த முயன்ற போது எதிர்பாராத விதமாக சாலை ஓரம் இருந்த மரத்தின் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் மாணவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் … Read more

மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை..!

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக டோலா 650 மாத்திரைகளை தயாரிக்கும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் மைக்ரோ லேப்ஸ் தலைமை அலுவலகம் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் திலீப் சுரானா மற்றும் இயக்குனர் ஆனந்த் சுரானா ஆகியோரின் அலுவலகம் மற்றும் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. 2020ம் ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது 350 கோடி டோலா மாத்திரைகள் விற்பனை மூலம் மைக்ரோ லேப்ஸ் நிறுவன … Read more

தவறான சிகிச்சைக்கு இழப்பீடு கோரிய வழக்கில் மருத்துவ கவுன்சிலை சேர்க்க முடியாது: உயர் நீதிமன்றம்

மதுரை: தனியார் மருத்துவமனையில் தவறான அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதற்கு இழப்பீடு கோரி நுகர்வோர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கிலிருந்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை நீக்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவாளர் சண்முகம் மனு ஒன்றினை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்து இருந்தார். அதில் “சங்கரன்கோவில் இலந்தைகுளத்தைச் சேர்ந்த முருகன் என்ற முகமது அப்துல்லா வயிற்று வலிக்காக கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு குடல்வால் அறுவை சிகிச்சை … Read more

20 ஆண்டுகளாக படுத்த படுக்கை… ‘என் உயிர் தோழன்’ பாபு எப்படி இருக்கிறார்?

நாளுக்கு நாள் வளர்ச்சிப்பாதையில் புதிய புதிய தொழில்நுட்பங்களுடன் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் சினிமா ஒருபுறம் இருந்தாலும்,  மறுபுறம் பல கலைஞர்களின் வலி மற்றும் வேதனை நிறைந்த வாழ்க்கையும் இருக்கதான் செய்கிறது. இந்த வாக்கியத்திற்கு முக்கிய உதாரணமாக திரையுலகினர் மட்டுமல்லாமல் பலரையும் கண்ணீர் கடலில் சிக்க வைத்தவர்தான் பாபு. இவரை என் உயிர் தோழன் பாபு என்றால் அனைவருக்கும் தெரியும். கடந்த 1990-ம் ஆண்டு பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான படம் தான் என் உயிர் தோழன். தன்னிடம் … Read more

#விழுப்புரம் || குடிபோதையில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை.!

குடி போதையில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி செந்தில்(45). இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  இந்நிலையில் இந்த தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான செந்திலின் மனைவி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவரது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து நேற்று இரவு மீண்டும்  குடிபோதையில் வீட்டிற்கு வந்த செந்தில், தனது செல்போன் மூலமாக மனைவியிடம் தான் … Read more

இன்ஸ்டாகிராமில் நாடக காதல் வழிப்பறி.! கூட்டாளிகளுடன் காதலன் கைது.!

மதுரையில் இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை ஏமாற்றி 4லட்ச ரூபாய் மதிப்பிலான நகையை பறித்த காதலன் உள்ளிட்ட 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். மதுரை லெட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரிடம் மதுரை கோ.புதூர் பகுதியை சேர்ந்த பயாஸ்கான் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி நட்பாக பழகி வந்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியை காதலிப்பதாக கூறி அவ்வப்போது நேரில் சந்தித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பயாஸ்கான், ஆசை வார்த்தைகளை கூறி சிறுமியிடம் இருந்து அவ்வப்போது … Read more

கோடநாடு குற்றவாளிகளை வெளியுலகிற்கு கொண்டுவருவதே அதிமுக தொண்டர்களின் எண்ணம்: ஓபிஎஸ் தரப்பு

சென்னை: “எங்களை அரசியலில் வளர்த்து ஆளாக்கிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு வீட்டில் நடந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து, வெளியுலகிற்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் அதிமுக தொண்டர்களின் எண்ணம்” என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், … Read more