விழுப்புரம் || பிறந்து 15 நாட்களான ஆண் குழந்தையை திண்ணையில் போட்டுவிட்டுச் சென்ற பெற்றோர்.. காவல்துறை விசாரணை..!

பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை விட்டு சென்ற பெற்றோர்கள் குறித்து காவல்துறையினர் தேடி வந்தனர். விழுப்புரம் மாவட்டம் பீமாபுரம் கிராமத்தில் ஏகாம்பரம் என்பவர் வீட்டுத் திண்ணையில் பிறந்து 15 நாட்களே ஆன ஆண் குழந்தையை இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வீட்டில் உள்ளவர்கள் மற்றும் கிராம மக்களள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு குழந்தைகள் நல அலுவலரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் குழந்தையின் பெற்றொர் குறித்து விசாரணை … Read more

மேட்ரிமோனியில் அறிமுகமான பெண் ஐ.டி ஊழியரிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.19 லட்சம் மோசடி..!

கோயம்புத்தூரில், மேட்ரிமோனி மூலம் அறிமுகமான விவகாரத்தான பெண் ஐ.டி.ஊழியரை திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி 19 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். ஒத்தக்கல் மண்டபத்தைச் சேர்ந்த 36 வயது பெண், 2வதாக திருமணம் செய்துக் கொள்ள மேட்ரிமோனியில் விண்ணப்பித்துள்ளார். அதில் அறிமுகமான மார்சியஸ் சிங் ஜித்தா என்ற நபர், திருமணம் செய்துக் கொள்வதாக உறுதி அளித்த நிலையில் இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில், தனது தாயின் மருத்துவ சிகிச்சைக்கு அதிக … Read more

அரசுப் பேருந்துகளில் 44-வது செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் செஸ் ஒலிம்பியாட் குறித்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட 15 பேருந்துகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 1) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: சென்னை, காமராஜர் சாலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி (44th Chess Olympiad – 2022) குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், செஸ் … Read more

செகண்ட் இன்னிங்சை தொடங்கிய மன்சூர் அலிகான்… கவனம் ஈர்க்கும் டான்ஸ் வீடியோ

90 காலகட்டங்களில கொடூர வில்லன் என்றால் சட்டென்று நினைவுக்கு வருபவர் மன்சூர் அலிகான். 1990-ம் ஆண்டு வெளியான சுப யாத்ரா என்ற மலையாள படத்தின் பத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான வேலை கிடைச்சிடுச்சி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால் 1991-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் என்ற படத்தில் கொடூர வில்லனாக நடித்தன் மூலம் மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் மத்தியில் பெரிய புகழ் பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமா … Read more

மோடி அரசின் கொடுங்கோன்மைப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது – சீமான்.!

அத்தியாவசியப் பொருட்களின் மீது அதிகரிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) வரியை கடுமையாக உயர்த்தியுள்ள ஒன்றிய அரசின் செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஏழை மக்கள் வாழவே முடியாத அளவிற்குச் சிறிதும் ஈவு இரக்கமின்றிக் கண்மூடித்தனமாக வரியை … Read more

கடைக்குள் புகுந்து உரிமையாளரின் மகனை கடத்திய வழக்கு : பெங்களூருவில் பதுங்கி இருந்த 3 பேர் கைது..!

சேலத்தில், மளிகை கடை வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தவரின் மகனை கடத்திச் சென்ற அதே மாநிலத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் பெங்களூருவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் 2-ந் தேதி, மூலாராமின் மகனான ஜெயராமை 6 பேர் கும்பல் கடைக்குள் புகுந்து கடத்தி சென்றது. Source link

அனைத்து மக்களுக்கும் காப்பீடு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் அறிவுறுத்தல்: முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி: ஏழை மக்களுக்கான காப்பீடு திட்டத்தை அனைத்து மக்களுக்கும் கிடைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். மேலும் ரூ.500 கோடி நிதியை புதுச்சேரிக்கு தர அவரிடம் கோரியுள்ளோம் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். ஆண்டுதோறும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி அரசு நலவழித்துறை சார்பில் தேசிய மருத்துவர்கள் தினவிழா இன்று சட்டப்பேரவை வளாகத்தில் நடந்தது. இந்திய சுகாதார ஆணையத்தின் பரிந்துரையின்படி 75வது ஆண்டு சுதந்திரத் திருநாள் … Read more

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ‘சைகை மொழி’ போராட்டம்

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கத்தினர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், மாதாந்திர உதவித் தொகையா ரூ.3000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது. காது கேளாத மாற்றுத் திறனாளிகள், செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் … Read more

#BigBreaking || நாளை சிறப்பு கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்… பாஜக தரப்பில் வெளியான பரபரப்பு தகவல்.!

புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.  இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக சார்பில் திரவுபதி முர்மு குடியரசு தலைவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.  குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் (பாஜக) வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரவுபதி முர்மு, தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். அதன்படி, நாளை … Read more

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பிறந்தநாள் | முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு சால்வை அணிவித்து, புத்தகம் பரிசு வழங்கி முதல்வர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக … Read more