ட்விட்டரில் தனது கட்சிப் பொறுப்பை மாற்றிய எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தனது கட்சிப் பொறுப்பை தனது ட்விட்டர் சமூக வலைதளத்தில் அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என்று மாற்றியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் எந்த முக்கிய தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் முடிந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது. எனவே ஓ.பன்னீர்செல்வம் இந்தக் கட்சியினுடைய பொருளாளர், எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் என்று கட்சியின் மூத்த தலைவர் சி.வி.சண்முகம் கடந்த வாரம் … Read more

Tamil news today live: ட்விட்டரில் அதிமுக பொறுப்பை மாற்றிய இபிஎஸ்

Go to Live Updates பெட்ரோல் – டீசல் விலை சென்னையில் 40 -வது நாளாக பெட்ரோல் – டீசல் விலையில் எந்த மாற்றம் இல்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பான் – ஆதார் இணைக்காவிடில் இன்று முதல் அபராதம் பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்காவிடில் இன்று முதல் ₨1,000 அபராதம் வசூலிக்கப்படும்.  பான், ஆதார் எண்களை இணைப்பதற்கான காலக்கெடு அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி … Read more

சென்னையில் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேர் கைது.!

சென்னையில் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக முழுவதும் போதை மாத்திரை கலாச்சாரத்தை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தாம்பரம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, பல்லாவரம் தனியார் கல்லூரி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மூன்று பேரை போலீசார் விசாரணை செய்தனர். … Read more

சசிகலாவின் ரூ.15 கோடி பினாமி சொத்து முடக்கம்..!

பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. சென்னை தியாகராயநகர் பத்மநாபா தெருவில், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை பினாமி பெயரில் சசிகலா வாங்கியிருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 15 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த சொத்தை முடக்கி வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.     Source link

பழனிசாமியை முதல்வராக்கியது பாஜக: நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கருத்து

தூத்துக்குடி: ‘‘பழனிசாமியை பாஜகதான் முதல்வராக்கியது’’ என்று, தமிழக பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கூறினார். திருச்செந்தூரில் அவர் கூறியதாவது: 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜக தேர்தலை சந்திக்கும். தலைவர்களின் மறைவுக்கு பின் ஏற்படும் இடைவெளியில் அதிமுகவில் சிறு, சிறு பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம்தான். பின்னர் அது சரியாகிவிடும். அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சினை. பழனிசாமியை முதல்வர் ஆக்கியதே பாஜகதான். தொடர்ந்து எல்லா வகையிலும் … Read more

அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம் – 9

*காட்சி வன்முறை*நாம் தன்பாட்டுக்கு போய்க் கொண்டிருந்தாலும் திடீரென ஒருவர் நம்மிடம் வந்து கேட்பார். ”கருப்பா, குட்டையா, கனமா, சுருட்ட முடி வச்சிருப்பாரே அவரத் தெரியுமா?” இன்னொருவர் நம்மை நைச்சியமாய்ப் பேசியோ, கையைப் பிடித்தோ கூட அழைத்துச் செல்வார். ”அஞ்சி நிமிசம் வாரீக, இருக்கீக, போறீக! காசொன்னும் குடுக்க வேண்டா!” வடிவேலு நகைச்சுவையைப் போலத்தான் இன்றைய விளம்பர உலகம் இருக்கிறது. அது விரிக்கும் வலையில் சிக்கிக் கொண்டால் பாதிப்புதான். விளம்பரங்கள் ஓயாமல் நம்மைத் துரத்துகின்றன. தொலைக்காட்சியில் விளம்பரங்கள். திரைப்படத்தில் … Read more

ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 210 கிலோ கஞ்சா பறிமுதல்.! இளைஞர் கைது.!

ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 210 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது இரவு 11 மணி அளவில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து சந்தேகப்படும்படியாக ஒரு நபர் சாக்கு பையுடன் வந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 21 கிலோ எடையுள்ள 10 … Read more

அதிர்ச்சி! ரயிலில் ஒரு டீயின் விலை ரூ.20… சர்வீஸ் சார்ஜ் ரூ.50!!

சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவர் ஒரு கப் டீ வாங்கியதற்கு IRCTC 70 ரூபாய்க்கு பில் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் சதாப்தி ரயிலில் கடந்த ஜூன் 28ஆம் தேதி பயணித்த பயணி ஒருவர் ரயிலில் டீ வாங்கினார். அந்த தேநீரின் விலை வெறும் 20 ரூபாய்தான். ஆனால் அதற்காக விதிக்கப்பட்ட சேவைவரி (service charge) 50 ரூபாய் என ரயில்வே ஊழியர் கொடுத்த ரசீதில் குறிப்பிட்டுள்ளதை கண்டு அந்த பயணி … Read more

காணாமல் போன மளிகை வியாபாரி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காணாமல் போன மளிகை கடை வியாபாரி எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செம்மணங்கூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் -வசந்தகுமாரி தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஒரு ஆண்டுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வசந்தகுமாரிக்கு அங்கிருந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த நபர் அடிக்கடி வசந்தகுமாரியின் வீட்டிற்கு வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று … Read more

உடுமலை அருகே நாட்டின் முதல் ‘ தென்னை மகத்துவ மையம் ' அமைப்பு

உடுமலை: உடுமலை அருகே நாட்டின் முதல்’தென்னை மகத்துவ மையம்’ அமைக்கப்பட்டு உள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை அணையை ஒட்டி 102 ஏக்கர் பரப்பில் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்துக்கு சொந்தமான, செயல்விளக்க மற்றும் விதை உற்பத்தி பண்ணை உள்ளது. இப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் தரமான தென்னங்கன்றுகள், விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்படுகின்றன. அங்கு குட்டை, நெட்டை ரக, வீரிய ஒட்டுரக கன்றுகள் உற்பத்தி செய்து, தர பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபின் விவசாயிகளுக்கு வழங்கப்படும். அந்த … Read more