டாஸ்மாக் போல் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

டாஸ்மாக் நிறுவனம் போல் வருமானம் கிடைத்தால் தான் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக வனப் பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அந்நிய மரங்களை அகற்ற வேண்டிய அவசியம் குறித்து கூறப்பட்டுள்ளது. சத்தியமங்கலம், முதுமலை சரணாலயங்களில் 1,500 ஹெக்டேர் … Read more

பணியின்போது விபத்தில் உயிரிழப்பு: குடிநீர் வாரிய ஊழியர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம்

சென்னை: விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 28-ம் தேதி காலை முதல் ஜெட் ராடிங் மற்றும் சூப்பர் சக்கர் இயந்திரத்தைப் பயன்படுத்தி மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் கழிவுநீர் அடைப்பை அகற்றும் … Read more

'பதவி கொடுத்த பிறகுதான் எடப்பாடியின் குணம் தெரிந்தது' – டிடிவி தினகரன் ஆதங்க பேட்டி

பதவி கொடுத்த பிறகு தான் எடப்பாடியின் குணம் தெரிந்ததாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த குழப்பம் நீடித்து வரும் நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தலைமைக் கழக செயலாளர் கழக அமைப்புச் செயலாளர்கள், அணிச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் என 138 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் இருந்து 320 கழக நிர்வாகிகளை அம்மா … Read more

ஈரோடு | கருமுட்டை விற்பனை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி

ஈரோடு: ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம், கருமுட்டைகளை எடுத்து விற்பனை செய்தது தொடர்பாக சிறுமியின் தாய் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சுகாதாரத்துறை சார்பில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். சிறுமியிடம் உயர்மட்ட மருத்துவ குழுவினர் மற்றும் போலீஸார், ஏற்கெனவே விசாரணை மேற்கொண்டுள்ளனர். … Read more

“அன்புள்ள அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு..”.. ஈபிஎஸ் எழுதிய கடிதமும், பின்னணியும்!

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளரே கிடையாது. பொருளாளர் மட்டும்தான் என்று தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடந்த 29ஆம் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் வேட்பு மனுதாக்கல் தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்புவதற்கான தற்செயல் தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஏதுவாக படிவம் ஏ மற்றும் படிவம் பி ஆகியவற்றை தனக்கு அனுப்பி வைக்குமாறு ஓ.பி.எஸ் இபிஎஸ்-இடம் கோரியிருந்தார். இதற்கு … Read more

சென்னை, கோவை டாப் பொறியியல் கல்லூரிகளில் புதிதாக கம்ப்யூட்டர் கோர்ஸ்கள்: யூஸ் பண்ணுங்க மாணவர்களே!

Chennai and Kovai top Engineering colleges list for new courses: எதிர்கால தொழில்நுட்பம், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் சார்ந்த பொறியியல் படிப்புகளை தேர்ந்தெடுக்க மாணவர்களிடையே அதிக ஆர்வம் இருந்து வருகிறது. அப்படியான கோர்ஸ்கள் என்ன? எந்தெந்த கல்லூரிகளில் அந்த கோர்ஸ்கள் கிடைக்கின்றன? உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம். அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE), பல்வேறு புதிய பொறியியல் படிப்புகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த படிப்புகள் எதிர்காலத் தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்பு … Read more

கள்ளக்குறிச்சி.! விவசாய கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு.!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மனைவி சுசீலா (49). கொளஞ்சி நேற்று அலங்கிரி செல்லும் சாலையில் உள்ள விவசாய நிலத்தில் நெல் பயிருக்கு தண்ணீர் பாய்சுவதற்காக சென்றார். இதையடுத்து அவரது மனைவியும், மகனும் இருசக்கர வாகனத்தில் விவசாய நிலத்திற்கு சென்று உள்ளனர்.  அப்பொழுது கிணற்றில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்று பார்ப்பதற்காக சுசீலா கிணற்றை எட்டி பார்த்தபோது எதிர்பாராத விதமாக தவறி … Read more

ஜிஎஸ்டி உயர்வு தொழிலை கடுமையாக பாதிக்கும்: கோவை வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்கள் கவலை

கோவை: ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் வெட்கிரைண்டர் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என, உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கோவையில் நடைபெற்றுவரும் பல்வேறு தொழில்களில் முக்கியமானது வெட்கிரைண்டர் உற்பத்தி. கோவையின் அடையாளமாக உள்ள இந்த வெட்கிரைண்டர்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய தரம் வாய்ந்த கற்களால் இவை உருவாக்கப்பட்டு வருகின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கோவையில் இத்தொழில் … Read more

`முறையான வழிகாட்டுதல்கள் இன்றி, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது'- நீதிமன்றம்

தமிழகத்தில் முறையான வழிகாட்டுதல்கள் இன்றி, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என்றும், அது மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்களுக்கு தேவையான, தகுதியற்றவர்களை பணியில் அமர்த்த வாய்ப்பாக அமையும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. … Read more

PAN-Aadhaar link: ஜூலை 1 முதல் ₹1,000 அபராதம்; சிம்பிள் ஸ்டெப்ஸ் பாருங்க!

Aadhaar – PAN card linking Tamil News: நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டை (PAN) ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30ம் தேதியாக இன்று ஆகும். அவ்வாறு செய்யத் தவறினால் ஜூலை 1 முதல் ரூ.1,000 இரட்டை அபராதம் விதிக்கப்படும். மத்திய அரசு ஏற்கனவே மார்ச் 31 வரை காலக்கெடுவை நீட்டித்த நிலையில், அதன் பிறகு, மார்ச் 31 மற்றும் ஜூன் 30, 2022 க்குள் பான் மற்றும் ஆதாரை இணைப்பவர்கள் ரூ.500 … Read more