#BigBreaking || அதிமுகவின் பொதுக்குழுவுக்கு தடை….? ஓபிஎஸ் தலையில் இடியை இறக்கிய உயர்நீதிமன்றம்.! 

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதிமுகவின் ஒற்றை தலைமையை தேர்ந்தெடுக்க உள்ள பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு மேற்கொண்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு, தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டு உள்ளது. மேலும், வருகின்ற ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை முடக்குவதற்கு உண்டான ஆலோசனைக் கூட்டத்தை ஓபிஎஸ் தரப்பு மேற்கொண்டது. … Read more

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விபரீதம்.. விஷவாயு தாக்கியதில் கூலி தொழிலாளிகள் உயிரிழப்பு..!

சென்னை பெருங்குடியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெருங்குடி காமராஜர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 20 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கூலி தொழிலாளிகள் பெரியசாமி மற்றும் தட்சணாமூர்த்தி ஆகியோர் தொட்டிக்குள் இறங்கிய போது விஷவாயு தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் கூச்சலிட்டதையடுத்து, சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், மயங்கி இருந்த இருவரையும் மீட்ட நிலையில் பெரியசாமி … Read more

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு விடுதலை போராட்ட வீரர் ஜமதக்கனி பெயர் சூட்டுக: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு விடுதலைப் போராட்ட வீரர் இரா.ஜமதக்கனி பெயரை சூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டி முடிக்கப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் இன்று திறந்து வைக்கப்படுவதில் மகிழ்ச்சி. அந்த வளாகத்திற்கு விடுதலைப் போராட்ட வீரரும், அறிஞருமான ஜமதக்கனியின் பெயர் சூட்டப்படுவது வளாகத்திற்கு கூடுதல் பெருமை சேர்க்கும். தமிழகத்தில் விடுதலைக்காக போராடி அதிக காலம் சிறை தண்டனை அனுபவித்தவர் … Read more

Tamil news today live : பான் மற்றும் ஆதார் இணைக்காவிடில் ரூ.1000 அபராதம்

Go to Live Updates பெட்ரோல்- டீசல் விலை சென்னையில் 39 வது நாளாக பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றம் இல்லை . பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. டிஎன்பில் : இன்று 2 போட்டிகள் டிஎன்பிஎல் ; பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கும் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன . இரவு 7.15 மணிக்கு தொடங்கும் … Read more

தமிழக ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய வேலைவாய்ப்பு.!!

கடலூர் தேசிய சுகாதார பணியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் சமையற்காரர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கடலூர் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : கடலூர் தேசிய சுகாதார பணி பணியின் பெயர் : சமையற்காரர் கல்வித்தகுதி : தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க … Read more

இன்று மாலை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி 53.!

மூன்று செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. – சி 53 ராக்கெட் இன்று மாலை 6.02 மணிக்கு விண்ணில் பாயத் தயார்நிலையில் உள்ளது. சிங்கப்பூர் நாட்டிற்கு சொந்தமான டி.எஸ். – இ.ஓ. உட்பட மூன்று செயற்கைக் கோள்கள் செலுத்தப்பட உள்ளன. மூன்று செயற்கைக் கோள்களில் முதன்மையானதான டி.எஸ். – இ.ஒ. செயற்கைக் கோள் 365 கிலோ எடை உடையது. இது தெளிவாக வண்ண புகைப்படங்களை எடுக்கும் திறன் உடையது. அடுத்து 155 கிலோ எடை உடைய ‘நியூசர்’ செயற்கைக்கோள் … Read more

சென்னை அருகே வேலூர் சர்வதேச பள்ளி திறப்பு விழா; பள்ளிக் கல்வியில் தாய்மொழி பயன்பாடு அவசியம்: வெங்கய்ய நாயுடு விருப்பம்

திருப்போரூர்: சென்னை அருகே காயார் பகுதியில், விஐடி கல்விக் குழுமம் சார்பில் 35 ஏக்கர் பரப்பில் வேலூர்சர்வதேசப் பள்ளி நிறுவப்பட்டுள்ளது. இங்கு நடப்பு கல்வியாண்டிலிருந்து, 5 முதல் 8-ம் வகுப்பு வரை ஐசிஎஸ்இ மற்றும் கேம்பிரிட்ஜ் பாடத் திட்டத்தில் வகுப்புகள் நடைபெற உள்ளன. இப்பள்ளியை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று தொடங்கிவைத்துப் பேசியதாவது: விஐடி குழுமக் கல்வி நிறுவனங்களின் கல்விப் பயணத்தில் இதுமுக்கிய மைல்கல். தனியார் துறையில் உயர் கல்வியை வலுப்படுத்த விஐடி குழுமம் … Read more

அவரின் பெயரை சூட்டுவது கூடுதல் பெருமை சேர்க்கும் – முதலமைச்சருக்கு மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்.!

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு விடுதலைப் போராட்ட வீரர் இரா.ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டி முடிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று திறந்து வைக்கப்படுவதில் மகிழ்ச்சி. அந்த வளாகத்திற்கு விடுதலைப் போராட்ட வீரரும், அறிஞருமான ஜமதக்கனியின் பெயர் சூட்டப்படுவது வளாகத்திற்கு கூடுதல் பெருமை சேர்க்கும்! தமிழ்நாட்டில் விடுதலைக்காக போராடி அதிக காலம் சிறை தண்டனை … Read more

சாலை விதிகளை பின்பற்றினால் உலகம் முழுவதும் 5 லட்சம் உயிர்களை பாதுகாக்கலாம்: ஆய்வு சொல்லும் செய்தி என்ன ?

சாலை விதிகள் முறையாக பின்பற்றப்பட்டால், வருடத்திற்கு  உலகம் முழுவதும் உள்ள 5 லட்சத்து 40 ஆயிரம் உயிர்களை காப்பற்ற முடியும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றைவிட சாலை விபத்தில் அதிகம் பேர் உயிரிழப்பதாக தகவல்கள் முன்பு வெளியிப்பட்டன. இந்நிலையில் தி லேன்செட் ( The Lancet) என்ற இதழில் சாலை விபத்து தொடர்பான ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளனர். சரியான ஹெல்மெட் அணிவது, சீட் பெல்ட் அணிவது, மது அருந்தாமல் வாகனம் ஓட்டுவது போன்ற சாலை … Read more

தனியார் கம்பெனிக்குள் இரும்பு திருடச் சென்ற மர்ம கும்பல் … குடோனில் இருந்த பொருட்களுக்கு தீ வைப்பு

சிதம்பரம் அருகே தனியார் கம்பெனிக்குள் இரும்பு திருடச் சென்ற மர்மகும்பல், குடோனில் இருந்த பொருட்களை தீ வைத்து கொளுத்திய சம்பவத்தில் 7 பெண்கள் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரியகுப்பம் கிராமத்தில் செயல்படாத தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சிலர் அடிக்கடி அங்கிருந்து இரும்பு பொருட்களை திருடி செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 26 மற்றும் 27-ஆம் தேதியில் ஆலைக்குள் நுழைந்த கும்பல் அங்கிருந்த முக்கிய கோப்புகள், எலக்ட்ரானிக், காப்பர் … Read more