இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 10ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு.!

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் உயிரிழந்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ஜெகன். இவரது மகன் பிரேம்குமார்(15) பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று வளர்புரத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அரக்கோணம்-சென்னை நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி பிரேம்குமார் … Read more

குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு..

குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு 137 பேர் அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதி 66 காலி பணியிடங்களுக்கான கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு மார்ச் 4,5,6 ம் தேதிகளில் நடைபெற்ற தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 137 பேர் அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர் – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஜூலை 13,14,15ம் தேதிகளில் நேர்முகத் தேர்வு – தேர்வர்கள் அசல் … Read more

திருப்பத்தூரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டங்கள் என்னென்ன? – முழு விவரம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் உள்ளிட்ட ரூ.129 கோடியே 56 லட்சம் செலவில் முடிவுற்ற 28 திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.13 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டிலான 6 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 16,820 பயனாளிகளுக்கு ரூ.103 கோடியே 42 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: … Read more

அனைத்து பள்ளி வாகனங்களிலும் கேமரா, சென்சார் பொருத்தப்பட வேண்டும் – தமிழக அரசு உத்தரவு.!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் சிசிடிவி கேமரா மற்றும் சென்சார் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் உள்துறை செயலாளர் வெளியிட்டு இருக்க கூடிய அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,  அனைத்து பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லக்கூடிய பேருந்துகளிலும் கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தின் முன் பகுதியில் ஒரு கேமராவும், பின் பகுதியில் ஒரு கேமராவும் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பேருந்து பின்னால் எடுக்கும்போது ஓட்டுநர் பார்ப்பதற்கு வசதியாக … Read more

வேலூரில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்..

வேலூரில் 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வேலூர் பாலாற்றங்கரையில் 9 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் 82 கடைகள், இரண்டு உணவகங்கள், பயணிகள் காத்திருப்பு அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. பேருந்து நிலையத்தின் மேற்கூரையில் சூரிய ஒளி மின்னுற்பத்திக்கான தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். Source link

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் … Read more

ஆஸ்கர் குழுவில் தென் இந்திய முதல் நடிகர்: ட்ரெண்டிங் ஆன சூர்யா

உலக சினிமாவில் உயரிய விருது ஆஸ்கார். இந்த விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெறுவதே சாதனையாக கருத்தப்படும் அளவுக்கு ஆஸ்கார் உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கார் விருது குழுவில் உறுப்பினர்களாக சேர பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் நடப்பு ஆண்டு கலை மற்றும் அறிவியல் பிரிவில் இந்தியாவின் சார்பில் நடிகர் சூர்யா அழைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஆஸ்கார் விருது குழுவில் உறுப்பினராக சேர இருக்கும் முதல் … Read more

ஓபிஎஸ் – இபிஎஸ் சண்டை.! நான் விலகிக்கொள்கிறேன்… டிவிட்டில் டிவிஸ்ட் வைத்த அதிமுகவின் முக்கிய புள்ளி.!

அதிமுகவின் நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரின் பதிவில் டுவிட்டர் பதிவில் “நதிக்கரைகள் இருகரைகள் என்ற நம்பிக்கை தகர்ந்ததால் விலகுகிறேன்” என்று மருது அழகுராஜ் விளக்கமளித்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயத்தில் எடப்பாடிபழனிசாமி தரப்பிலும் பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் … Read more

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்கொலை முயற்சி

ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில், பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு  முயன்றதால், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், உறவினர் வீட்டில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட சிறுமி, கிருமி நாசினியை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். கருமுட்டை விற்பனை தொடர்பாக ஆந்திரா மற்றும் தமிழக மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பிய ஈரோடு காவல்துறையினர், மருத்துவர்களிடம் இன்று விசாரணை நடத்தினர்.  Source link

“இளங்கோவடிகள் குறிப்பிட்ட சிறந்த மன்னன் போல் பிரதமர் இருப்பார்” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

வேலூர்: “2047-ல் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடியின் செயல்பாடுகளை அவர் வெகுவாக பாராட்டினார். அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், வேலூர் ஸ்ரீநாராயணி பீடம் இணைந்து 5 நாட்கள் நடத்தும் பாலாறு பெருவிழா இன்று தொடங்கியது. இவ்விழா ஸ்ரீபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஸ்ரீ நாராயணி பீடத்தின் சக்தி அம்மா மற்றும் தமிழக … Read more