மாணவிகளின் சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுத்த உதயநிதி… குவிந்த பாராட்டு!

Udhayanidhi Stalin praised by neitizens for his twitter share: ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்ததை சமூக வலைதளங்களில் பகிரும்போது, அந்தக் குழந்தைகளின் முகத்தை மறைத்து, அந்த மாணவிகளின் சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுத்து புகைப்படத்தைப் பகிர்ந்ததற்காக உதயநிதி ஸ்டாலினை பலரும் பாராட்டி வருகின்றனர். தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவரது பயணங்கள், பிரச்சாரம், மேடைப் பேச்சு, நலத்திட்ட உதவிகள் எனப் … Read more

#BigBreaking || அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடையா? தமிழக அரசு தரப்பில் அதிகாரபூர்வ பேட்டி.!

சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதிக்கவில்லை என்று, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு வழி முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் இடம், அதிமுகவின் பொதுக்குழுவிற்கு தடை ஏதும் தமிழக அரசு தரப்பில் விதிக்கப்பட்டுள்ளதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தடை செய்வது … Read more

மதுபோதையில் நண்பனை அடித்துக் கொலை செய்த டிரைவர் உட்பட 3 பேர் கைது.!

தூத்துக்குடி அருகே, திருமணம் செய்த இரண்டு மனைவிகளும் பிரிந்து சென்றதைக் கூறி கேலி செய்த நண்பனை, மதுபோதையில் அடித்துக் கொலை செய்த டிரைவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் மானகசேரியைச் சேர்ந்த மகேஸ்வரனும், செல்வகுமாரும் மீன் லாரி டிரைவர்களாக பணியாற்றி வந்தனர். கடந்த 19ம் தேதி விசாகப்பட்டினத்திற்கு இருவரும் லாரியில் மீன் லோடு ஏற்றிச் சென்ற போது மதுபோதையில் இருந்த மகேஸ்வரன், மனைவிகளை பிரிந்து வாழும் செல்வகுமாரைப் பற்றி அவதூறாக பேசியதாக … Read more

'அன்புடன் தமிழ்நாட்டு மக்கள் அனுப்பியது எங்கே சென்றது?!' – இலங்கையில் இருந்து ஒரு வேதனைக் குரல்

‘தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்’ என்று அச்சிடப்பட்ட சாக்குப் பையில் அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால், அது தமிழர்களின் கைகளில் கிடைத்ததா? 40 ஆயிரம் டன் அரிசி: பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி வழங்கக் கோரி கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொருட்கள் அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, … Read more

40 வயது கடந்து விட்டதா? நீங்கள் செய்ய வேண்டிய லைஃப்ஸ்டைல் மாற்றங்கள் இதுதான்!

வாழ்க்கையின் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும், பெண்கள் தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். வயதாகும்போது, ​​​​எலும்பு மற்றும் தசை வலிகள், எடை ஏற்ற இறக்கங்கள் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் வருகின்றன. ஒரு பெண் 40 வயதை அடையும் போது, ​​மாதவிடாய் நிற்கும் கட்டம் தொடங்குகிறது, இந்த சமயத்தில் சிலர் உடல் எடை அதிகரிக்கும் போது, ​​​​சிலர் விரைவாக எடை இழக்கிறார்கள். பல பெண்கள் தசை மற்றும் எலும்பு வலி, தோல் பிக்மென்டேஷன், நரை முடி போன்ற பிரச்னைகளை … Read more

செங்கல்பட்டு.! மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு.!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே முடிச்சூர் லட்சுமி நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் பாபு(27). இவர் தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பாபு வீட்டில் உள்ள மின்விசிறியில் பழுதடைந்து விட்டதால், காரில் இருந்த சிறிய மின்விசிறி பயன்படுத்துவதற்காக, மின் இணைப்பு கொடுத்துள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து … Read more

மகாவீரர் சிலை பத்திரமாக மீட்கப்பட்டு அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைப்பு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கண்டெடுக்கப்பட்ட மகாவீரர் சிலை பத்திரமாக மீட்கப்பட்டு விருதுநகர் அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதுப்பட்டி காட்டுப் பகுதியில் தொல்லியல் பட்டப்படிப்பு மாணவர்கள் நேற்று மேற்புற கள ஆய்வு மேற்கொண்ட போது  3 அடி உயரம் இரண்டே கால் அடி அகலம் கொண்ட சிலை கிடைத்தது. இந்த சிலை பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும் சமணர் சமயத்தின் 24 ஆவது தீர்த்தங்கரான மகாவீரர் சிலை என்பதும் தொல்லியல் ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்டது. Source link

வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பதுதான் திராவிட மாடலா?: டிடிவி தினகரன் கேள்வி

சென்னை: அரசு மருத்துவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பதுதான் திராவிட மாடலா? என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ”ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அடுத்தக் கட்ட போராட்டத்தை மேற்கொள்ள இருக்கும் சூழலில், அவர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றித்தர தமிழக அரசு முன் வர வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அரசு மருத்துவர்களின் போராட்டங்களில் பங்கெடுத்து, ‘ஆட்சிக்கு … Read more

ஆன்லைன் ரம்மி தடைக்கு விரைவில் அவசரச் சட்டம்: அமைச்சரவையில் முடிவு

Tamil nadu cabinet  decides to ban online rummy  Tamil News: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள அடிப்படையிலான விளையாட்டுகளால் பலரும் ஈர்க்கப்பட்டு விளையாடி வருகின்றனர். ஆனால் சிலர் இதுபோன்ற விளையாட்டுகளுக்கு அடிமையாகி, அதிக பணத்தை வைத்து விளையாடுகின்றனர். இதில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் பல்வேறு சமூகப் பொருளாதாரக் குற்றங்களும், தற்கொலைச் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இதைப் பல்வேறு சமூக அமைப்புகள் … Read more

வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த அவலம்…!

திருவள்ளூர் மாவட்டம், கொசவன்சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கு திருமணமாகி கயல்விழி என்ற மனைவியும் பவன் என்ற குழந்தையும் உள்ளனர். பவன் சம்பவத்தன்று, வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த டிராக்டர் பவன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.  தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள … Read more