ஆன்லைன் ரம்மி தடைக்கு அவசரச் சட்டம் – தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசரச் சட்டம் பிறப்பிப்பது குறித்தும், புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள விளையாட்டுகளில் பொதுமக்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு, அதில் பெருமளவில் பணத்தை இழப்பதுடன், கடன் தொல்லை மற்றும் மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனர். இதனால் பல்வேறு சமூக, பொருளாதாரக் குற்றங்களும், தற்கொலைச் சம்பவங்களும் … Read more

#மதுரை || மனைவியிடம் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை.!

மதுரை மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி, தோப்பூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் பிரபு. இவரது மனைவி கோகிலா. இவர்கள் இருவருக்கும் நேற்று காலை குடும்ப பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோகிலா மீன் வியாபாரம் செய்வதற்காக வெளியில் சென்றுள்ளார். பிறகு மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது படுக்கையறையில் கணவர் பிரபு தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். … Read more

பள்ளி சமையல்கூட அறையை துதிக்கையால் உடைத்து பொருட்களை எடுக்கும் காட்டு யானை

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் பள்ளியின் சமையல்கூட பகுதியை துதிக்கையால் இடித்து அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை காட்டு யானை எடுக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.  அதன் பின் அங்கு வைக்கப்பட்டிருந்த அரிசி, சர்க்கரை உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை உணவிற்காக எடுத்து சென்றது. Source link

வேலுமணி மீதான ஊழல் புகார் விவகாரம்: திமுக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி

சென்னை: முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகாரில் அதிகாரிகள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பது மக்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ”முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகாரில் தொடர்புடைய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுமதி வழங்காமல் திமுக அரசு 8 … Read more

சென்னையில் இந்த ஏரியாக்களில் இன்று மின்தடை: முழுப் பட்டியல்

சென்னையில் அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், ஆவடி, தரமணி, செம்பியம், போரூர். புழல், செங்குன்றம், அம்பத்தூர், வியாசர்பாடி, ஆலந்தூர், கிண்டி, பெரம்பூர், அடையார், கே.கே நகர் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் பின்வருமாறு தாம்பரம் பகுதி ; சிட்லபாக்கம் சிட்லபாக்கம் பம்பன்சாமிகள் … Read more

விருதுநகரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது.!

விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி காவல்துறையினர் ராஜபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வெங்கடேஷ்குமார் என்பவரை விசாரணை செய்ததில், 2 கிலோ கஞ்சா கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் வெங்கடேஷ்குமாரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வெங்கடேஷ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டதில், ராஜபாளையத்தை சேர்ந்த சந்தனம் மற்றும் … Read more

அதிமுகவை வழிநடத்த இபிஎஸ்சுக்கு வேண்டுகோள்.!

அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியை வழிநடத்தும்படி எடப்பாடி பழனிசாமியைப் பொறுப்பாளர்கள் கேட்டுக்கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். துரோகத்தின் ஒட்டுமொத்த அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் என்றும் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.  சென்னையில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கு முன் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஆலோசனைக்ஹ்க்ஜ் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஒருமணி நேர ஆலோசனைக்குப் பின் சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்துக்கு எடப்படி பழனிசாமி புறப்பட்டார்.  … Read more

'ஆட்சியை கவிழ்ப்பது, கட்சிகளை உடைக்கும் வேலைகளை செய்கிறது பாஜக' – முத்தரசன் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை: மக்களை மறந்து ஆட்சிகளைக் கவிழ்ப்பது, கட்சிகளை உடைக்கும் வேலைகளை பாஜகவினர் செய்து வருகின்றனர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் மாவட்ட மாநாடு நேற்று தொடங்கியது. அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே கட்சியின் மாவட்ட செயலாளர் மு.மாதவன் தலைமையில் நேற்று (ஜூன் 27) இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், “மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்ற … Read more

ஜாதி, மதம் மட்டுமல்ல பாலினமும் காதலுக்கு தடையாக இருக்கிறது: சென்னையில் நடந்த பேரணி

Photo Credit : Janani Nagarajan இந்த சமூகத்தில் அன்பு பரிமாறுவதில் பல தடைகளும் வன்முறைகளும் வழக்கமான முறையில் நடந்து வருகிறது. அப்படி காதலுக்கு இனம், சாதி, மதம், மொழி ஆகிய தடைகளுடன் பாலினமும் சேர்க்கப்பட்டுள்ளது. இப்படி கலாச்சாரம் என்ற பெயரால் அன்பு செலுத்துவதற்கு தடை விதிப்பதால் உலகம் முழுவதும் குரல்களும் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. Photo Credit : Janani Nagarajan இத்தகைய தடைகளை உடைக்கும் விதமாக, சமூகத்தில் எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் அன்பை … Read more

#நாமக்கல் || மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டுத் தற்கொலை.!

நாமக்கல் மாவட்டத்தில் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனம் உடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே மாவுருட்டி பகுதியை சேர்ந்தவர் பால் வியாபாரி சீனிவாசன்(36). இவருக்கு மனைவியுடன் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இதனால் சீனிவாசன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் விரக்தி அடைந்த சீனிவாசன் நேற்று இரவு வீட்டு அருகில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து … Read more