கடலூர் பட்டாசு ஆலை விபத்து | உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்கவும்: ராமதாஸ்

சென்னை: கடலூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடும், காயமடைந்த இருவருக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் எம்.புதூர் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று பிற்பகலில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் அங்கு பணியாற்றி வந்த மூவர் உயிரிழந்தனர்; இருவர் … Read more

உதகை: புலியை துரத்தும் செந்நாய்கள்… ஊருக்குள்ளும் அடிக்கடி வருவதால் மக்கள் அச்சம்

உதகை அருகே புலியை துரத்திய செந்நாய்கள் கூட்டத்தின் வீடியோ, இணையத்தில் வைரலாகி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர், உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது யானை, கரடி, சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாகி வருகிறது. இப்படி உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தியும், பொது மக்களை அச்சுறுத்தியும் வருகிறது. இதையும் படிங்க… விக்கிபீடியாவிற்கு பணம் செலுத்தும் கூகுள் நிறுவனம்! … Read more

விக்ரம், கபாலி, எந்திரன்… பாக்ஸ் ஆபீஸில் ரூ300 கோடியை குவித்த தமிழ்ப் படங்கள் இவைதான்!

சினிமா எளிதில் மக்களை சென்றடையயும் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய ஊடகம். இன்றைய இளம் தலைமுறை ரசிகர்கள் நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் அதற்கு துணையாக சினிமாவை எடுத்துக்கொள்கின்றனர். அந்த அளவிற்கு சினிமாவின் மீதான எதிர்பார்ப்பு ஒருபக்கம் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் ரசிகர்களின் ரசனை மாறி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். பிளாக் அண்ட் வொயிட் காலத்தில் இருந்து வந்த வெள்ளிவிழா என்ற வார்த்தை 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்டுவிட்டது. … Read more

#BigBreaking || வெளியான செய்தியால் பெரும் சோகத்தில் மூழ்கிய ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை.! 

எம்.புதூர் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிப்பதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “கடலூர் மாவட்டம், எம். புதூர் பகுதியில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வந்துள்ள செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன … Read more

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 5 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளிலும், கேரளா – கர்நாடக கடலோரப் பகுதிகளிலும் … Read more

கடலூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் உயிரிழப்பு; மூவர் படுகாயம்

கடலூர்: கடலூர் அருகே கேப்பர்மலை பகுதியில் உள்ள எம்.புத்தூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் பட்டாசு வாங்க வந்த ஒருவரும் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே கோப்பர்குவாரி மலை பகுதியில் உள்ள எம்.புதூர் கிராமத்தில் வனிதா மோகன்ராஜ் என்பவருக்கு … Read more

காயங்களுடன் சாக்கில் வைத்து புதைக்கப்பட்ட பெண் சடலம் – போலீசார் தீவிர விசாரணை

சாக்கில் வைத்து புதைக்கப்பட்ட பெண் சடலம் யார்? அவர் எதற்காக கொல்லப்பட்டார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டு அருகே புதூர் ஏரியில் சுடுகாடு உள்ளது. இங்கு பள்ளம் தோண்டி மூடப்பட்டதற்கான அடையாளம் காணப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், யாரையோ கொன்று அங்கு புதைத்திருப்பதாக கருதி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் வருவாய்த் துறையினர் விரைந்து வந்து விசாரணை … Read more

பஞ்சர் செய்யப்பட்ட ஓ.பி.எஸ் கார்… வாட்டர் பாட்டில் வீச்சு… பாடாய் படுத்திய பொதுக் குழு!

AIADMK GC meeting Tamil News: அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. முன்னதாக, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் மனுவை நேற்று இரவு 12:30 மணிக்கு விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதியளித்தனர். ஆனால், வரையறை செய்த 23 தீர்மானங்கள் தவிர்த்து, வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தனர். இந்நிலையில், அதிமுக பொதுக்குழு … Read more

மின்சாரம் தாக்கி முதியவர் பரிதாப பலி.. தேனி அருகே நிகழ்ந்த சோகம்..!

மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், ஆட்டையாம்பாளையம், கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் செந்தில்குமார் புதிதாக வீடு கட்டி வருகிறார். அதற்கு முத்துசாமியின் வீட்டில் இருந்து தற்காலிக மின் இணைப்பு எடுத்து பயன்படுத்தி வந்துள்ளார். சம்பவதன்று, முத்துசாமி குளித்து கொண்டிருந்த போது தொங்கி கொண்டிருந்த போது அருகில் தொங்கிய மின்வயரை அப்புறப்படுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு … Read more

சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து.. தூக்கிவீசப்பட்ட இளைஞர்!

கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், அவசரகதியில் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தின் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. விஜய் என்ற இளைஞர் தனது பைக்கில் அகஸ்தீஸ்வரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். முருகன்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் கார் வருவதை கவனிக்காமல் அவர் சாலையை கடக்க முயன்ற நிலையில், நாகர்கோவில் நோக்கி அதிவேகமாக சென்ற கார் கண்ணிமைக்கும் நேரத்தில் விஜய்யின் பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில், விஜய் பைக்குடன் தூக்கி … Read more