ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கோயில் கும்பாபிஷேகம்: உசிலம்பட்டி அருகே பக்தர்கள் பரவசம்

மதுரை: உசிலம்பட்டி அருகே ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கோயில் கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடந்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் கிராமத்தில் உள்ள அங்காளஈஸ்வரி கோயில் சிறப்பு வாய்ந்தது. இந்தக் கோயிலை புனரமைப்பு செய்து, 101 அடி கோபுரம் கட்டப்பட்டு கோயிலின் குடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த மூன்று நாட்களாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் ஹோமங்கள் செய்து 101 அடி கோபுரத்தில் உள்ள கலசத்தில் புனித … Read more

4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் – தனுஷ்கோடியில் கடலுக்குள் காற்றாலைகள் அமைக்க முடிவு!

தமிழ்நாட்டில் 4 ஆயிரம் மெகாவாட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் தனுஷ்கோடியில் கடலுக்குள் காற்றாலைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாட்டில் 4 ஜிகா வாட்ஸ், அதாவது 4 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யும் வகையில் கடலுக்குள் காற்றாலைகளை அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் 4 மாதங்களில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியில் காற்று மின்சாரத்துக்கான … Read more

பிரபல அரசியல் தலைவரின் உறவினரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார் – Dr அன்புமணி இராமதாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று, இன்று பாமக சார்பில் சென்னையில் அறப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு தலைமை ஏற்று நடத்திய அக்கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் பேசியதாவது, “தமிழக அரசு உடனடியாக  ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று, முதல்கட்ட ஆர்பாட்டம் என் தலைமையில் இன்று நடந்து கொண்டிருக்கிறது.  மருத்துவர் அய்யா அவர்கள் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி இடம் தொலைபேசியில் பேசி வலியுறுத்தினர். பின்னர் எடப்பாடி பழனிசாமி … Read more

தமிழகத்தில் 200ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் 200ஐ தாண்டியது கொரோனா தமிழகத்தில் புதிதாக 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி சில மாதங்களுக்குப் பின் கொரோனா பாதிப்பு 200ஐ தாண்டி இருக்கிறது 1159 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தகவல் சென்னையில் புதிதாக 129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது 137 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் Source link

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 45 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கோவை: தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 45 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார். கோவையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த அரசு விழாவில் பங்கேற்ற தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியது: ”கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் உள்ள மக்கள் பணி சார்ந்த குறைகளை தீர்ப்பதற்காக, தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி, 24 மணி நேரமும் 7 நாட்களும் என்ற திட்டத்தின் கீழ், 94898 72345 … Read more

மதுரை: இரும்பு குடோனில் பயங்கர தீவிபத்து -ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள இரும்பு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள என்.எஸ்.கோனார் வீதியில் மகாலிங்கம் என்பவருக்கு சொந்தமான இரும்பு குடோன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. அந்த குடோனில் பழைய கார்கள் மற்றும் கார்களுக்கான பழைய உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இங்கு இன்றிரவு 7 மணி அளவில் மின்கசிவால் பற்றிய தீ மளமளவென்று குடோன் முழுவதும் … Read more

இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதி விபத்து.. ஒருவர் உயிரிழப்பு.. 2 பேர் படுகாயம்.!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கண்டியாபுரம் அகதிகள் முகாமில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிமல்(19) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் நிமல் அவரது நண்பர்களான நாகூர்கனி, சுதர்சன் ஆகியோருடன் தனது இருசக்கர வாகனத்தில் வெம்பக்கோட்டை அருகே இருக்கும் பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார்.  அப்போது இவர்கள் வெம்பக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே … Read more

புதுச்சேரி கடல் பகுதிக்குள் வர அனுமதி மறுப்பு.. சென்னைக்கு திரும்பிய எம்ப்ரெஸ் சொகுசு கப்பல்.!

தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட எம்ப்ரஸ் சொகுசு கப்பல் புதுச்சேரி கடல் பகுதிக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டதால், மீண்டும் சென்னையை நோக்கி திரும்பியது. எம்ப்ரஸ் சொகுசு கப்பலில் சூதாட்டம் சார்ந்த பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளதால் அந்த கப்பல் புதுச்சேரி வர ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். துறைமுக அதிகாரிகள் மற்றும் புதுச்சேரி சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெறாததால் அந்த கப்பல் புதுச்சேரி கடல் எல்லைக்குள் நுழைய கடற்படை அதிகாரிகள் தடை விதித்தனர். சில … Read more

வீடு தேடி வருகிறது புதிய சொத்து வரி விபரம்: சென்னையில் சொத்து வரி உயர்வு தொடர்பான முழுமையான தகவல்

சென்னை: புதிய சொத்துவரி தொடர்பான நோட்டீசை திங்கள்கிழமை முதல் வீடு வீடாக சென்று அளிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் சொத்துவரியை உயர்த்தி தமிழக அரசு கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இந்த சொத்துவரி உயர்வை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தன. சொத்துவரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணி நடைபெற்றது. இதன்படி சென்னை மாநகராட்சி சொத்துவரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. பொதுமக்கள் இந்த … Read more

புதுக்கோட்டை: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – இருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த மாயாண்டி (54), சண்முகம் (48) ஆகிய இருவரும் புதுக்கோட்டையில் நிகழ்ந்த ஒரு துக்க நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு ஒரே இருசக்கர வாகனத்தில் கீரனூர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கீரனூருக்கு முன்பாக கருப்பர்கோயில் அருகே வந்தபோது எதிரில் வந்த கருப்பையா என்பவரின் இருசக்கர வாகனம் இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு … Read more