மேலும் மினி கொரோனா அலைகளின் சாத்தியத்தை தவிர்க்க முடியாது.. WHO தலைமை விஞ்ஞானி!

பிரபல வைராலஜிஸ்ட் மற்றும் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியரின் கூற்றுப்படி, “இது உண்மையில் ஒரு அலையை பாதிப்புகளாகக் கருதுகிறதா அல்லது மருத்துவமனையில் சேர்க்கும் நோயாகக் கருதுகிறதா என்பதுதான்”. இரண்டிலும், நாம் இப்போது பார்ப்பது ஓமிக்ரானின் துணை வகைகளாக இருக்கலாம் என்பது தெளிவாகிறது. அவை ஏற்கெனவே பாதித்தவர்களை தொற்றக்கூடியவை, ஆனால் நோயை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை (சமீபத்தில் தொற்று அல்லது தடுப்பூசி போட்டவர்களில்). இருப்பினும் தடுப்பூசி போடாதவர்கள், நீண்ட காலத்திற்கு முன்பு தடுப்பூசி போட்ட வயதானவர்கள் … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.. சென்னையை தொடர்ந்து வேலூர் மாவட்டத்திலும் இன்று முதல் அமல்.!!

வேலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் மீது இன்று முதல் கடும் நடவடிக்கை என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 23 ஆம் தேதியில் இருந்து சென்னை பெருநகர காவல்துறை இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் இருப்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என தெரிவித்துள்ளது. ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை … Read more

அரசுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிடும் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும்: பிரேமலதா

கடலூர்: தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கைகளை வெளியிடும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, அதை நிரூபிக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் இரண்டாயிரம் ஏக்கர் விவசாயிகளிடம் இருந்து நிலம் எடுக்கப்பட்டு உரிய தொகை வழங்கப்படவில்லை. உரிய தொகை வழங்க வேண்டும், வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். ஸ்ரீமுஷ்ணம் சகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் … Read more

கூடங்குளம் அணுக் கழிவு மையத்துக்கு எதிர்ப்பு – போராட்ட அறிவிப்பை வெளியிட்ட சுப.உதயகுமார்

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போாரட்டம் நடத்தப்படும் என சுப. உதயகுமார் அறிவித்துள்ளார். அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமார் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இதே பகுதியில் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகள் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளன. இதுபோன்ற சூழலில், அணுக்கழிவு மையத்தையும் கூடங்குளம் வளாகத்தில் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி … Read more

கொரோனா பாதித்த ஷாருக்கான், எப்படி நயன் திருமணத்தில்..? வெடித்த சர்ச்சை

நடிகை நயன்தாராவின் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டார். சமீபத்தில்தான் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற செய்திகள் வெளியானது. இந்நிலையில் அவர் எப்படி மிக விரைவில் கொரோனாவிலிருந்து மீண்டு வந்தார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்த நடிகை நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணத்தில் திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். தனது மேலாளரான பூஜா தத்லானி மற்றும் இயக்குநர் அட்லியுடன் அவர் … Read more

#தூத்துக்குடி || மதுபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் உறங்கிய இளைஞர்கள்.! 2 பேர் உயிரிழப்பு.!

தூத்துக்குடியில் மதுபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் உறங்கிய இளைஞர்கள், ரயிலில் அடிபட்டு 2 பேர் உயிரிழந்து உள்ளனர். நண்பர்களான மாரிமுத்து, ஜெபசிங் மற்றும் மாரிமுத்து ஆகிய 3 பேரும் டிஎம்பி காலனியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிறகு தூத்துக்குடியில் உள்ள மூணாவது மையில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய நிலையில் போதை அதிகமானதால் மூவரும் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து உறங்கி உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3 … Read more

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விசிக அறிவிப்பு

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர் ‘ விருது வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு “அம்பேத்கர் சுடர், … Read more

கடனை திருப்பி கேட்ட பெட்ரோல் பங்க் ஓனரை வாள் வைத்து மிரட்டிய நபர்.. வைரலாகும் வீடியோ

புதுக்கோட்டை அருகே கிராவல் மண் எடுக்கும் லாரிகளுக்கு டீசல் நிரப்பிவிட்டு பணம் கொடுக்காத உரிமையாளர் ஒருவரிடம் பணம் கேட்டு சென்றுள்ளார் பெட்ரோல் பங்க் உரிமையாளர். ஆனால் அந்த இடத்தில் கிராவல் மண் எடுக்கும் அந்நபர், அவரது காரின் டிக்கியில் வைத்திருந்த வாளை வைத்து வெட்ட முயன்ற காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் … Read more

Tamil news today live : 4 மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தல் தொடங்கியது

Go to Live Updates பெட்ரோல் -டீசல் விலை சென்னையில் 19வது நாளாக பெட்ரோல் டீசக் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்படுகிறது.  விதி மீறலில் ஈடுபடுபவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாநிலங்களவை தேர்தலில் இன்று வாக்குப்பதிவு கர்நாடகா, ஹரியானா, … Read more

களைகட்டிய தேர்தல் களம்.. மாநிலங்களவை தேர்தலுக்கு இன்று வாக்குப்பதிவு.!!

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உட்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை எம்பி பதவி காலம் ஜூன் 29-ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் காலியாகும் 57 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட டிகேஎஸ் இளங்கோவன், ஆர் எஸ் பாரதி, ராஜேஷ்குமார், நவநீத கிருஷ்ணன், விஜயகுமார், எஸ். ஆர் சுப்பிரமணியன் ஆகிய 6 பேரின் பதவி காலம் ஜூன் 29-ஆம் தேதி முடிவடைய உள்ளது. தமிழகத்தில் திமுக … Read more