கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா.. 200 பழங்குடியின குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினார் வி.ஜி ராஜேந்திரன்.!

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு 200 பழங்குடியின குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி ராஜேந்திரன் வழங்கினார். கைவாண்டூர் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில் மற்றும் வருவாய்த்துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். Source link

சென்னை உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக 9 பேர் இன்று பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேர் இன்று நிரந்தர நீதிபதிகளாகப் பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். குடியரசுத் தலைவர் உத்தரவு கடந்த 2020-ம் ஆண்டு டிச.3-ம் தேதி, மாவட்ட நீதிபதிகளாகப் பணியாற்றிய ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சத்திக்குமார் சுகுமார குரூப், கே.முரளிசங்கர், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி. தமிழ்ச்செல்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் 9 … Read more

கர்நாடகாவில் கோர பேருந்து விபத்து.! உடல்கருகி உயிரிழந்த 7 பயணிகள்.! அதிர்ச்சி புகைப்படங்கள்.!

கர்நாடக மாநிலம், கலபுர்கி மாவட்டத்தில் ஹைதராபாத் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில், பேருந்து தீப்பிடித்து எரிந்ததால்  7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.  இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சுமார் 12 பயணிகள் காயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், காயமடைந்த பயணிகள் கலபுர்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து, கலபுர்கி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இஷா பந்த் தெரிவிக்கையில்,  பிதார்-ஸ்ரீரங்கப்பட்டணா நெடுஞ்சாலையில் கலபுர்கி மாவட்டத்தில் உள்ள கமலாபூர் தாலுகாவின் புறநகரில் … Read more

99-வது பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் விழா – கருணாநிதி படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள், அரசு விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கும் மெரினாவில் உள்ள நினைவிடத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கருணாநிதியின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி திமுகவினர் கொண்டாடினர். தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று கடந்த … Read more

தமிழகத்தில் இரு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு.! மத்தியில் இருந்து வந்த எச்சரிக்கை கடிதம்.!

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்திய நிலையில், இது குறித்து, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  தமிழகத்தில் கடந்த ஒன்றாம் தேதி  கொரோனா ஒருநாள் பாதிப்பு 94 ஆக அதிகரித்தது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 55 ஆயிரத்து 474 ஆக அதிகரித்தது.  இதில் … Read more

நீலகிரி, கோவை, வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் (பொறுப்பு) பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக் கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் 4-ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், … Read more

கள்ளகாதலுக்கு இடைஞ்சலாக இருந்த அண்ணன்..கொலை செய்ய முயன்ற தங்கை..!

கள்ளகாதலுக்கும் இடைஞ்சலாக இருந்த சகோதரனை கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுகல் மாவட்டம், குடைபாறைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூர்யா. இவர் கடந்த  25 ம் தேதி மர்மநபர்களால் சரமாரியாக வெட்டிள்ளனர். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆஅய்வு செய்த போது சர்தார் என்பவர் சூர்யாவை தாக்கியது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சூர்யாவின் அக்கா மணிஷாவுடன் … Read more

திமுக -3, அதிமுக -2, காங்கிரஸ் -1 – மாநிலங்களவை தேர்தலில் 6 பேர் போட்டியின்றி தேர்வு

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட திமுக, அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29-ம் தேதி முடிகிறது. இதையடுத்து, இந்த இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 10-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதில் திமுக -3, அதிமுக-2, காங்கிரஸ்-1 மற்றும் சுயேச்சைகள் 7 என மொத்தம் 13 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். … Read more

கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை.. கர்ப்பிணிக்கு கட்டாய கருகலைப்பு செய்த கொடூரம்..!

கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்த ஐவரை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிறுபாக்கத்தை சேர்ந்தவர் ஆர்த்.தி இவருக்கு நாமக்கல் மாவட்டம் எருமை பட்டியை சேர்ந்த பிரேம்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான மறுநாளிலிருந்து பிரேம்குமாரின் குடும்பத்தினருக்கு வரதட்சணையாக கொடுக்கப்பட்ட நகைகளை போட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து தினமும் கூடுதல் வரதட்சணை கேட்டு மாமனார் குடும்பத்தினர் ஆர்த்தியை தொல்லை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் … Read more

திருவள்ளூரில் பத்தாயிரம் ரூபாய் கடன் பெற்று திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்த ட்ராக்டர் ஓட்டுனர் அடித்து கொலை.!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, பத்தாயிரம் ரூபாய் கடன் பெற்று திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்த ட்ராக்டர் ஓட்டுனர் அடித்து கொலை செய்யப்பட்டார். ஆவடி கெளரி பேட்டையைச் சேர்ந்த ஓட்டுனர் மோகன்குமார் என்பவர், பிரபு என்பவரிடம் கடன்பெற்றதாக கூறப்படுகிறது. கடனை திருப்பி தராமல் ஓட்டுனர் இழுத்தடித்து வந்த நிலையில், பிரபு அவரது நண்பர்களுடன் சென்று கடனை திருப்பி கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், மோகன்குமாரை 3 பேரும் அடித்துக்கொலை செய்தனர். Source link