பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைப் படிப்புகளுக்கு அங்கீகாரமில்லை: மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு எச்சரிக்கை
சென்னை: பல்கலைக்கழக மானியக்குழுவின்(யுஜிசி) செயலர் ரஜினீஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பு: சேலம் பெரியார் பல்கலை. தொலைநிலைப் படிப்புகளுக்கு அங்கீகாரம் பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்திவருவது தெரியவந்துள்ளது. இது விதிகளை மீறும் செயலாகும். பெரியார் பல்கலை.யில் உள்ள தொலைநிலைப் படிப்புகளுக்கு 2020 ஜூன் மாதம்வரையே அனுமதி தரப்பட்டுள்ளது. அதன்பின் எவ்வித படிப்புக்கும் பல்கலை. அங்கீகாரம் பெறவில்லை. இதனால் பெரியார் பல்கலை. மீது உரிய நடவடிக்கை எடுக்க யுஜிசி முடிவெடுத்துள்ளது. அதன்படி அடுத்த 2 கல்வியாண்டுகள் பெரியார் பல்கலை.யின் தொலைநிலைக்கல்வி … Read more