பேரறிவாளன் விடுதலை: வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக் கொண்டு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

சென்னை: பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக் கொண்டு காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, … Read more

மதுரை: ரூ.1.36 கோடி மதிப்பிலான கோயில் நிலம் ஆக்கிரமிப்பாளர்கிடம் இருந்து மீட்பு

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொத்தமான 1.36 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடம் மீட்கப்பட்டுள்ளது. மதுரை சிம்மக்கல் அனுமார்கோயில் படித்துறை அருகே உள்ள மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 1,366 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டிடத்தை வணிக பயன்பாட்டிற்காக குணசேகரன் என்பவர் கோயில் நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பொழுது கோயில் இடத்தை சட்டவிரோதமாக ராஜேந்திரன் என்பவர் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த இன்னும் சிலர் அந்த இடத்தை … Read more

என் நம்பிக்கை என் அம்மா – பேரறிவாளன் உருக்கம்

A G Perarivalan A G Perarivalan writes: My hope was my mother… the life-saving plank in my arduous journey through a hurricane infested ocean: காலை 10.40 மணியளவில் உச்ச நீதிமன்றம் என்னை விடுதலை செய்ய உத்தரவிட்டபோது, ​​நான் ஒரு நண்பருடன் எனது மாமா வீட்டிற்கு அருகிலுள்ள பொது மண்டபத்தில் காத்திருந்தேன். நிச்சயமாக, நான் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருந்தேன். இறுதியாக செய்தி வந்ததும், நான் வீட்டிற்கு சென்றேன். … Read more

சிதம்பரம் நடராஜர் கோவில்.. கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி.. தமிழக அரசு அரசாணை.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது எறி வழிபட அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக திருக்கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்களிடம் இருந்து பூஜை பொருட்களைப் பெறுதல், அமர்ந்து தரிசனம் செய்தல், சாமிகளை தொட்டு தரிசனம் செய்தல் மற்றும் அங்கப்பிரதட்சணம் செய்தல் ஆகியவை தவிர்க்கப்பட்டு கோயில் வளாகத்தில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் … Read more

தமிழகத்தில் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தற்போது அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் தற்காலிக பணியிடங்களில் நியமிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

கோவை மாவட்டத்திற்கு தனியாக மாஸ்டர் பிளான் தயார் செய்யப்படும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டு துலங்காத துறையும் இல்லை. கோவை மாவட்டத்திற்கு தனியாக மாஸ்டர் பிளான் தயார் செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக கோவை மற்றும் நீலகரி மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். இதன்படி இன்று காலை கோவை வஉசி மைதானத்தில் ‘பொருநை’ அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் ஓராண்டு சாதனை விளக்க ஓவியக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தனியார் விடுதியில் தொழில்துறையினருடன் … Read more

கோயம்பேடு சந்தையில் ரூ.100-ஐ தொட்டது ஒரு கிலோ தக்காளி விலை! காரணம் என்ன?

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை ஏற்றத்தால் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாயை தொட்டிருக்கிறது. மழைப்பொழிவு, தக்காளி வரத்து குறைவு போன்ற காரணங்களினால் கோயம்பேடு சந்தையில் 20வது நாளாக தக்காளியின் விலை தொடர்ச்சியாக இன்றும் அதிகரித்துள்ளது. முன்னதாக நேற்று கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ நாட்டு தக்காளி 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 10 ரூபாய் அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தக்காளியிலேயே, நாட்டு தக்காளி நேற்று … Read more

Watch Video: நாசா வெளியிட்ட புதிய கருந்துளை ‘ஒலி’

கருந்துளைகள், முடிவற்ற இருளுக்கு பெயர் பெற்றவை, ஒளியைக் கூட அவற்றின் வழியாகச் செல்ல அனுமதிக்காத வெற்றிடமானது, பிரபஞ்சத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகும். கருந்துளையில் இருந்து வரும் ஒலிகளை வெளியிடுவதால், நாசாவில் உள்ள பொறியாளர்கள் இந்த முடிவற்ற வெற்றிடத்திற்கு இப்போது  புதிய அடையாளத்தை வழங்கியுள்ளனர். கருந்துளையால் அனுப்பப்படும் அழுத்த அலைகளை பொறியாளர்கள் ஒலிக் குறிப்புகளாக மாற்றியுள்ளனர். உண்மையில் கருந்துளையால் வெளியிடப்பட்ட அலைகளை மனிதர்களால் கேட்க முடியாது. எனவே, புதிய சோனிஃபிகேஷன் முறைகளைப் பயன்படுத்தி, நாம் கேட்கக்கூடிய சிற்றலைகளிலிருந்து ஒலிகளை … Read more

உயர் கல்வியில் அதிமுக புரிந்த சாதனையை தான் புரிந்ததாக சொல்லிக் கொள்ளும் தி.மு.க.. ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்.!!

உயர் கல்வியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரிந்த சாதனையை தான் புரிந்ததாக சொல்லிக் கொள்ளும் தி.மு.க. அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிவார்ந்த சமுதாயத்தை படைக்க வேண்டுமென்றால், மனித வளத்தினை மேம்படுத்த வேண்டுமென்றால் அதற்கு முக்கிய காரணியாக விளங்குவது உயர் கல்வி தான் என்பதை நன்கு அறிந்து, கலை, அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம் என அனைத்துப் படிப்புகளிலும் புதிய பாடப் … Read more

பாலாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரில் பாலாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ஆம்பூரில் இருந்து குடியாத்தத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த தரைப்பாலம் கடந்த ஆண்டு வெள்ளத்தால் இரண்டாக உடைந்தது. இதையடுத்து தற்காலிகமாக மண்ணைக் கொட்டி நிரப்பி தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், தொடர் கனமழையால் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அரிப்பு ஏற்பட்டு தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. Source link