‘டாஸ்மாக்’ முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை உறுதி – வானதி சீனிவாசன் தகவல்

கோவை: தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ மதுபான முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை உறுதி என, வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோவை மக்கள் சேவை மையம், பிஎஸ்ஜி மருத்துவமனை, வேர்ல்ட் மலையாளி கவுன்சில் இணைந்து நடத்தும் ‘நலம் இலவச மருத்துவ முகாம்’ கோவை மாநகராட்சி 82-வது வார்டு தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜூன் 1) நடந்தது. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவர், கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் அவர் … Read more

மதுரையில் 2-வது நாளாக ரோடு ஷோவில் மக்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை: மதுரையில் 2வது நாளாக ரோடு ஷோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள், கட்சியினரை சந்தித்தார். அப்போது, முதல்வருக்கு மக்கள் கைகெடுத்தும், அவருடன் செல்பி எடுத்துக் கொண்டும் மகிழ்ந்தனர். மதுரை அருகே உத்தங்குடியில் திமுகவின் மாநில பொதுக்கூட்டம் இன்று (ஜூன் 1) நடந்தது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் நேற்று மதுரை வந்தார். பொதுக்குழுவில் பங்கேற்பதற்கு முன்னதாக நேற்று மாலை மதுரை பெருங்குடி – மதுரை மதுரா கோட்ஸ் மேம்பாலம் வரையிலும் சுமார் 22 கி.மீ … Read more

மன்னாரில் கரை ஒதுங்கிய தமிழக நாட்டுப் படகு: இலங்கை கடற்படையினர் விசாரணை

ராமேசுவரம்: இலங்கையில் உள்ள மன்னாரில் கரை ஒதுங்கிய தமிழகத்தைச் சார்ந்த நாட்டுப் படகை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இந்திய-இலங்கை எல்லை கடலோரப் பகுதிகளில் இரு நாட்டு கடற்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இலங்கையிலுள்ள மன்னார் கடற்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப் படகு ஒன்று கரை ஒதுங்கியிருப்பதாக அந்நாட்டு கடற்படையினருக்கு தகவல் கிடைத்து. மன்னார் கடற்பகுதிக்குச் சென்ற … Read more

அதிமுக துரோகம் இழைத்ததா? தேமுதிக கூட்டணியில் உள்ளது – எடப்பாடி பழனிசாமி விளக்கம்

Edappadi Palanisamy : கோவை விமான நிலையத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணியில் தேமுதிக இருப்பதாக தெரிவித்துள்ளார்.   

ஒரு வாரத்துக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தென்காசி: தென்காசியில் மழை குறைந்து நீர்வரத்து சீராக இருந்ததால் ஒரு வாரத்துக்கு பின்னர் இன்று (ஜூன் 1) முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர். திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை முதல் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக மழை தீவிரம் அடைந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பலத்த மழையும், பிற பகுதிகளில் லேசான … Read more

தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதியை வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடுவதா? – அன்புமணி கண்டனம்

சென்னை: தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடுவதை அனுமதிக்க முடியாது. தமிழகத்துக்கான புதிய ரயில் பாதை திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு பேச வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில்: “தமிழ்நாட்டில் திண்டிவனம் – திருவண்ணாமலை, சென்னை – மாமல்லபுரம்- கடலூர் உள்ளிட்ட பல்வேறு புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ரூ.728 கோடியை ரயில்வே … Read more

அரசியல் வாழ்வில் இது எனக்கு ஒரு பாடம் – ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

உண்மையும், நேர்மையும் கொண்ட  ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

தேர்தலை ஒட்டி தேமுதிகவின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்: பிரேமலதா சூசகப் பேச்சு

சென்னை: “அரசியல் பயணம் தேர்தலை ஒட்டியே இருக்கும் என்பதால், தேமுதிகவின் பயணமும் தேர்தலை ஒட்டியே இருக்கும்” என்று தேசிய முற்போக்கு திராவிட கழக்கத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 2026 மாநிலங்களவைத் தேர்தலில்தான் தேமுதிகவுக்கு சீட் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னையில் இன்று (ஜூன் 1) தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தற்போதைய மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படும் என அதிமுக தரப்பில் ஏற்கெனவே உறுதி அளிக்கப்பட்டது. … Read more

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் போட்டி; தேமுதிகவுக்கு 2026-ல் சீட் என உறுதி!

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்றும், கூட்டணியில் தொடரும் தேமுதிகவுக்கு 2026-ல் ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்றும் அதிமுக அறிவித்துள்ளது. இதனை, இன்று (ஜூன்.1) செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட்டாக அறிவித்தனர். தமிழகம் சார்பில் மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள வைகோ, பி.வில்சன், எம்.சண்முகம், எம்.முகமது அப்துல்லா, அன்புமணி ராமதாஸ், என்.சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் … Read more

மாநிலங்களவை தேர்தல்: அதிமுகவின் 2 வேட்பாளர்கள் அறிவிப்பு… அப்போ தேமுதிகவுக்கு…?

Rajya Sabha Election 2025: அதிமுக சார்பில் போட்டியிட உள்ள மாநிலங்களவை அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். வழக்கறிஞர் இன்பதுரை , தனபால் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.