சென்னையில் 2வது விமான நிலையம்: 4 இடங்கள் தேர்வு… எங்கு தெரியுமா?

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பாரந்தூர், பண்ணூர், திருப்போரூர், படலம் ஆகிய நான்கு புதிய சாத்தியமான தளங்களை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் கேள்விக்கு பதிலளித்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா எம். சிந்தியா, பசுமை விமான நிலையங்களை நிர்மாணிப்பதற்கான கிரீன்ஃபீல்ட் கொள்கையை இந்திய அரசு வகுத்துள்ளது. இதற்காக மாநில அரசு அல்லது விமான நிலைய ஆபரேட்டர் தளங்களைக் கண்டறிந்து, விமான நிலையம் கட்டுவதற்கான … Read more

செல்போன் பேசியதை கண்டித்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!

செல்போனில் பேசியதை கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, கோயம்பேடு பகுதியில் வசித்து வருபவர் காசிநாதன் . இவரின் மகள் குணவதி அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். சம்பவதன்று, அவர் நீண்ட நேரம் செல்போனில் பேசியுள்ளார். இதனை கண்ட அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில், கோபித்து கொண்டு அறைக்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தகமடைந்த அவரது பெற்றோர் அறைக்கதவை தட்டியும் திறக்காததால் உடைத்து உள்ளே சென்றனர். … Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! <!– தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! –>

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் இன்று மழை பெய்யக்கூடும் தமிழ்நாட்டில் திடீர் மழைப்பொழிவு ஏன்.? மாலத்தீவிலிருந்து வடகடலோர கர்நாடகா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் மழைப்பதிவு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மழைப்பதிவு – சென்னை … Read more

தமிழக மீனவர்கள் 12 பேர் கைது: இலங்கையின் அட்டூழியங்களை எவ்வளவுகாலம் வேடிக்கை பார்க்கப்போகிறோம்?: தினகரன் கேள்வி

சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் எவ்வளவு காலத்திற்கு இலங்கை அட்டூழியங்களை எவ்வளவு வேடிக்கை பார்க்கப்போகிறோம்? என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியுள்ளதாவது: ”தமிழக மீனவர்கள் அண்மைக்காலமாக அடுத்தடுத்து சிறை பிடிக்கப்படுவதும், அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில், படகுகளைக் கைப்பற்றி ஏலம் விடுவதுமான இலங்கை அரசின் அட்டூழியங்களை இன்னும் எத்தனை காலத்திற்கு … Read more

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி வழக்கு – ராஜேந்திர பாலாஜியிடம் 10 மணி நேரம் விசாரணை

பண மோசடி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் காவல்துறையினர் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்த விருதுநகர் மாவட்டம் குற்றப்பிரிவு காவல்துறையினர், கடந்த 5ஆம் தேதி அவரை கைது செய்தனர். உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜி, நேற்று … Read more

Tamil News Today LIVE: நதிநீர் இணைப்பு திட்டம் மூலம் தமிழகத்தில் விவசாயம் பெருகும் – எல்.முருகன்

Go to Live Updates Petrol Price update: 101-ஆவது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Tamilnadu News Update:  தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி பெண்களுக்கு விரைவில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எம்.பி. கனிமொழி உறுதியளித்தார். India News Update: உத்தரப் பிரதேசத்தில் நாளை 2-ம் கட்ட … Read more

மனைவியை வைத்து கொள்ளையடித்த கணவன்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்.!

பலபேரை விஷ ஊசி போட்டு கொலை செய்து பணம், நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த தம்பதியினரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த 45 வயதான ஸ்டீபன் மற்றும் அவரது மனைவி அமலோற்பவம் ஆகிய இருவரும் ஒரு சீரியல் கில்லர். இவர்கள் இருவரும் பணத்துக்காக எதையும் செய்யக்கூடியவர்கள். இவர்கள் இதுவரை சென்னையில் மட்டும் விஷ ஊசி செலுத்தி 8 பேரை கொலை செய்துள்ளனர். இவரது மனைவி அமலோற்பவம் பல டாக்டர்களிடம் உதவியாளராக பணிபுரிந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பான பிரச்சாரம் <!– நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பான பிரச்சாரம் –>

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மக்களைக் கவர்வதற்காக பல்வேறு வகையிலும் வேட்பாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் 12 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மங்கள கவுரி எண்ணெய் விற்றும், 16வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முத்துகாமாட்சி சிக்கன் விற்றும் நூதன முறையில் வாக்குகள் சேகரித்தனர். கடலூர் மாவட்டம் கடலூர் மாநகராட்சி 27வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சங்கீதா வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கி வாக்கு சேகரித்தார். … Read more

கோவை  மாவட்ட ஊர்க்காவல் படையில் 3 திருநங்கைகள் பணி நியமனம்: பொதுமக்கள், பல்வேறு தரப்பினர் வரவேற்பு

கோவை: கோவை மாவட்ட ஊர்்க்காவல் படையில் 3 திருநங்கைகள் பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கோவை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியில், மாவட்ட ஊர்க்காவல் படையினர் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் 380-க்கும் மேற்பட்டோர் தற்போது பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தைச் சேர்்ந்த திருநங்கைகளான சிறுமுகையைச் சேர்ந்த வருணாஸ்ரீ(21), தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த மஞ்சு(29), … Read more