தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!

சென்னையில் உள்ள தமிழக முதல்வர்  ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடு மற்றும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீடு போன்ற இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது வெடிகுண்டு எதுவும் இல்லை என்று … Read more

வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் எந்தெந்த உணவகங்களில் நிறுத்தலாம் என்ற பட்டியல் வெளியீடு <!– வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் எந்தெந்த உண… –>

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தால் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை எந்தெந்த உணவகங்களில் நிறுத்தலாம் என்ற பட்டியலை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. தரமற்ற உணவுகளை தயாரிக்கும் உணவகங்களில் பேருந்துகளை நிறுத்துவதாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,சென்னையில் இருந்து கோவை, திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லும் பேருந்துகள் பிரசன்ன பவனில் நிற்கவும், சேலம், திண்டுக்கல், காரைக்குடி செல்லும் பேருந்துகள் வசந்த பவனில் நிற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பல்வேறு இடங்களில் இருந்து சென்னை வரும் … Read more

புதுச்சேரியில் 344 பேருக்கு கரோனா தொற்று உறுதி; ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக இன்று 344 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்தார். நேற்று 431 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. 3 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் இன்று (பிப். 5) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”புதுச்சேரி மாநிலத்தில் 2,254 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி –224, காரைக்கால்- 74, ஏனாம்- 39, மாஹே- 7 என மொத்தம் 344 (15.26 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று … Read more

மின்துறை சீர்திருத்தம்; நேரடி பலன் பரிமாற்றத்திற்கு தமிழகம் எதிர்ப்பு

Tamilnadu opposed direct benefit transfer subsidy: நேரடி பலன் பரிமாற்றம் (DBT) மூலம் நுகர்வோருக்கு மானியம் வழங்கப்படுவதற்கும், மின் விநியோகத்தை தனியார்மயமாக்குவதற்கும் தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. DBT மற்றும் தனியார்மயமாக்கல் ஆகியவை மின் துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக அதன் தொகுப்பின் ஒரு பகுதியாக மத்திய அரசு வகுத்துள்ள நிபந்தனைகளின் ஒரு பகுதியாகும். தொகுப்பைச் செயல்படுத்தும் மாநிலங்களுக்கு 2021-22 முதல் 2024-25 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) அரை சதவீதம் வரை … Read more

கோவையில் கடை ஊழியரை ஏமாற்றி செல்போன் திருடிய இளைஞர்.. வைரலாகும் வீடியோ.!

கோவையில் கடை ஊழியரை ஏமாற்றி செல்போன் திருடிய வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது. கோவை மாவட்டம் காளன்பாளையம் பகுதியில் இணையதள சேவை மையம் மற்றும் எழுதுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது . இந்த நிலையில் கடந்த 27ம் தேதி கடையில் பணியாற்றும் ஊழியர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.  அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் கடையில் பொருட்களை வாங்குவது போல யதார்த்தமாக கடைக்கு சென்றுள்ளார். இதனை யாரும் பார்க்கவில்லை என்பதை உணர்ந்த … Read more

அரசின் நீட் விலக்கு முடிவுக்கு அதிமுக ஆதரவு – ஓ.பி.எஸ் <!– அரசின் நீட் விலக்கு முடிவுக்கு அதிமுக ஆதரவு – ஓ.பி.எஸ் –>

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய அரசு எடுக்கும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கைக்கும் அதிமுக துணை நிற்கும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து, அதிமுகவின் நிலைப்பாடை ஏற்கனவே பேரவையில் கூறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த சட்டமன்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காத நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். Source link

புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வீட்டில் ஊழல் தடுப்புக் காவல் பிரிவினர் சோதனை: ரூ.5.50 லட்சம் பறிமுதல்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வீட்டில் ஊழல் தடுப்புக் காவல் பிரிவினர் நடத்திய சோதனையில் ரொக்கம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணியாற்றி வருபவர் ஜெய்சங்கர். இவரது வீடு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள கிருஷ்ணா நகரில் உள்ளது. இவர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது. இதன் பேரில், தஞ்சாவூரில் உள்ள ஜெய்சங்கர் வீட்டில் ஊழல் தடுப்புக் காவல் பிரிவுத் துணைக் கண்காணிப்பாளர் … Read more

அழகோ அழகு… அரிசி தண்ணீருடன் வெள்ளரி சேர்த்து இப்படி செய்து பாருங்க!

பளபளப்பான மற்றும் மென்மையான சருமத்தை அடைய, அரிசி நீர்’ பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. சருமத்திற்கு அரிசி நீரைப் பயன்படுத்துவது முகப்பருவுக்கு சிகிச்சையளிப்பதற்கும், தடுப்பதற்கும், முகப்பரு தழும்புகளை அகற்றுவதற்கும், ஹைப்பர் பிக்மென்டேஷனில் இருந்து விடுபடுவதற்கும் ஒரு இயற்கை வீட்டு தீர்வாகும். அரிசி நீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் பி, ஈ மற்றும் தாதுக்கள் உள்ளன, அவை செல் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன, இரத்த ஓட்டத்தைத் தூண்டுகின்றன. மேலும்’ குளிர் காலநிலையில் சருமத்தை மென்மையாகவும், இளமையாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்கின்றன. அழகு நோக்கங்களுக்காக … Read more

நீட் தேர்வை எதிர்க்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு.. திமுக, காங்கிரசை வெளுத்து வாங்கிய சீமான்.. வைரலாகும் வீடியோ.!

நீட் தேர்வு மற்றும் ஜிஎஸ்டியை எதிர்க்க திமுக மற்றும் காங்கிரஸ்க்கு என்ன தகுதி இருக்கு என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க்கோரி தமிழக அனைத்து கட்சி உறுப்பினர்களின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களுக்கு அனுப்பப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பிறகு ஆளுநர் இந்த தீர்மானத்தை … Read more

சரியான வாதங்கள், தெளிவான கருத்துகள்… சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் நீட் விலக்கு மசோதா: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

சென்னை: நீட் தேர்வு தொடர்பாக ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து தெளிவாக விவாதித்து, சரியான வாதங்களை எடுத்துரைத்து, நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்புவதற்காக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பான சட்டமுன்வடிவை தமிழக … Read more