17 மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு

சென்னை: கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் 1-ம் தேதி தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு முன்கூட்டி, கடந்த 24-ம் தேதியே தொடங்கியது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், பிஹார், அசாம், பஞ்சாப்,ஹரியானா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் தென்மேற்குபருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரளாவில் பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட … Read more

கீழடி அகழாய்வு அறிக்கை குறித்து தொல்லியல் ஆய்வுத் துறை விளக்கம்

கீழடி அகழாய்வு அறிக்கை குறித்து இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை விளக்கம் அளித்துள்ளது. மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இந்திய தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட இரு அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை அவர் தாக்கல் செய்துள்ளார். இந்த அகழாய்வு குறித்து இந்திய தொல்லியல் துறை சில விளக்கங்களை கோரி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள், கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இதுகுறித்து இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் … Read more

சிறுவாணி குடிநீர் விநியோகம் அதிகரிப்பு

கோவை: நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் மாநகராட்சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கும், வழியோரம் உள்ள 22 கிராமங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து முன்பு தினசரி சராசரியாக 100 எம்.எல்.டி (மில்லியன் லிட்டர்) வரை குடிநீர் எடுக்கப்பட்டது. அணையில் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்ததால், குடிநீரின் அளவும் குறைக்கப்பட்டது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை காரணமாக, அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் எடுக்கப்படும் குடிநீரின் … Read more

'தாயை பாட்டிலால் அடித்தவர் அன்புமணி… வளர்த்த கடா…' எரிமலையாக வெடித்த ராமதாஸ்

Anbumani vs Ramadoss: பாமக தலைவர் அன்புமணிக்கு எதிராக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அடுக்கடுக்காக தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் தளத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

சிவகங்கை மருத்துவ கல்லூரி டீன் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவ அலுவலர்கள் சங்கம் கோரிக்கை – நடந்தது என்ன?

சென்னை: பெண் மருத்துவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பழிவாங்கும் சிவகங்கை மருத்துவ கல்லூரி டீன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் மு.அகிலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (மே 29) அவர் வெளியிட்ட அறிக்கையில், “சிவகங்கை மருத்துவ கல்லூரியில் கடந்த மார்ச் 24-ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் பணி முடிந்து திரும்பும் போது, அடையாளம் தெரியாத நபரால் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளானார். மருத்துவ மாணவியின் பாதுகாப்பில் … Read more

தேமுதிகவிற்கு ராஜ்யசபா கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை – பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவிற்கு ராஜ்யசபா கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை ஏற்கனவே. 2024 தேர்தலில் இது முடிவு செய்யப்பட்டது தான் என்று பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார்.

நீலகிரியில் பெய்யும் கனமழையால் வேகமாக நிரம்பும் அணைகள்

மஞ்சூர்: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மின் உற்பத்திக்கான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் மாயாறு மற்றும் பவானி ஆகிய இரு ஆறுகள் உற்பத்தியாகின்றன. இரு ஆறுகளும் பவானி சாகர் அணை அடைந்து, அங்கிருந்து பவானியாக பயணமாகிறது. பவானி ஆறு பவானி பாசன பகுதிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து, டெல்டா மாவட்டங்கள் வரை விரிவடைகிறது. மின் தேவைக்கும் இரு ஆறுகள் பயன்படுகின்றன. தமிழகத்தில் கோடை காலங்களில் மின்சார தங்கு தடையின்றி கிடைக்க … Read more

தமிழ்நாட்டின் இந்த 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – எங்கெல்லாம் தெரியுமா?

Tamil Nadu Rain Forecast: தமிழ்நாட்டின் இந்த 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கும், 2 மாவட்டங்களில் கனமழைக்கும் நாளை (மே 30) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“தேமுதிகவுக்கு அதிமுக ஒரு சீட் வழங்காவிட்டால்…” – பிரேமலதா விஜயகாந்த்

புதுக்கோட்டை: “தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும். இல்லையேல் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்.” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு 5 எம்.பி. சீட்டுகளும், ஒரு மாநிலங்களவை சீட்டும் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. அவ்வாறு கொடுக்கவில்லை என்றால், அடுத்தகட்ட … Read more

கமல்ஹாசனை மிரட்டும் கன்னடர்கள்: முதலமைச்சர் வாய்திறவாமல் அமைதியாக இருப்பது ஏன்? சீமான் கேள்வி!

‘தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்ற வரலாற்று பேருண்மையை கூறியதற்காக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை கன்னட அமைப்புகள் மிரட்டுவதா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.