கல்லூரி மாணவருக்கு டிசம்பரில் மடிக்கணினி: உதயநிதி ஆலோசனை
சென்னை: அரசு கல்லூரிமாணவ-மாணவிகளுக்கு டிசம்பர் மாதம் மடிக்கணினி விநியோகிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கோவி.செழியன், தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது, நடப்பு கல்வி ஆண்டில் ரூ.2,000 கோடியில் 10 லட்சம் மடிக்கணினி வழங்குது குறித்தும் எந்த ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு முதலில் வழங்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. Source link