துருக்கி தேர்தல்… 20 வருட கால அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளும் எர்டோகன்!
உலக நாடுகள் துருக்கி தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. காரணம் துருக்கி நேட்டோ நாடுகளின் ஒரு அங்கம் என்பதுடன், அதன் நிலப்பரப்பு அமைந்துள்ள இடம் முக்கியத்துவம் வாய்ந்தது. துருக்கி இஸ்லாமிய நாடுகளில், ஜனநாயகம் உள்ள ஒரே நாடு என்று கூறப்பட்டாலும், ஒருவிதமான சர்வாதிகாரம் கொண்ட நாடு தான்.