NATO+ நாடுகளில் இணைகிறதா இந்தியா… அமெரிக்காவின் பரிந்துரையால் கலக்கத்தில் சீனா!

நேட்டோ பிளஸ் நாடுகள்: இப்போது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் மேலாதிக்கம் முடிவுக்கு வர உள்ளது, ஏனெனில் இந்தியா நேட்டோ பிளஸில் சேரலாம். அமெரிக்க தேர்வுக் குழு இதனை பரிந்துரை செய்துள்ளது.

”2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்த வடகொரியா..” – அமெரிக்கா பகீர் தகவல்…!

வடகொரியாவில், பைபிள் வைத்திருந்ததாக பிடிபட்ட கிறிஸ்தவர்கள் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளதாகவும், அவர்களின் இரண்டுமாத கைக்குழந்தை உள்ளிட்ட பலருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியாவில் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுடன் 70,000 கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. Source link

கிரீஸ் நாட்டில் கடலில் படகு கவிழ்ந்து 3 அகதிகள் சாவு

ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார பிரச்சினை மற்றும் உள்நாட்டு போரால் நிலவும் வறுமை ஆகிய காரணங்களால் ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பலர் அகதிகளாக செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது பெரும்பாலும் அவர்கள் கடல் வழியாக சட்ட விரோத பயணத்தையே மேற்கொள்கின்றனர். இதில் பல பயணங்கள் விபத்திலேயே முடிவடைகின்றன. அந்தவகையில் கிரீஸ் நாட்டின் மைக்கோனோஸ் தீவு அருகே ஏஜியன் கடலில் அகதிகள் படகு ஒன்று கவிழ்ந்தது. இதனையடுத்து தகவல் அறிந்த கடலோர போலீசார் அங்கு … Read more

Public holiday for Diwali festival filed in US Parliament | தீபாவளி பண்டிகைக்கு பொது விடுமுறை அமெரிக்க பார்லி.,யில் மசோதா தாக்கல்

வாஷிங்டன், -தீபாவளி பண்டிகைக்கு, அமெரிக்காவில் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, அந்நாட்டு பார்லிமென்டில், பெண் எம்.பி., கிரேஸ் மெங் மசோதா கொண்டு வந்துள்ளார். கையெழுத்து ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி, அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு அமெரிக்காவில் பொது விடுமுறை அளிக்க வலியுறுத்தி, அந்நாட்டு பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபையில், எம்.பி., கிரேஸ் மெங் மசோதா கொண்டு வந்துள்ளார். இந்த மசோதா பார்லிமென்டில் நிறைவேறி, அதில் … Read more

அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீபாவளிக்கு விடுமுறை அளிக்கும் மசோதா அறிமுகம்

இந்தியாவின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றாக தீபாவளி உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்பட பல நாடுகளில் வசிக்கும் இந்தியர்களால் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் அமெரிக்காவில் பெண் எம்.பி. கிரேஸ் மெங் தீபாவளிக்கு விடுமுறை அளிக்கும் ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். இதற்கு பல்வேறு எம்.பி.க்கள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும்போது கிரேஸ் மெங் கூறுகையில், `தீபாவளி பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து அமெரிக்கர்கள் தெரிந்து கொள்ளவும், அதனை குடும்பத்துடன் … Read more

Ban on Indian ships carrying Russian oil | ரஷ்ய எண்ணெய் எடுத்து வரும் இந்திய கப்பல்களுக்கு தடை

லண்டன்,-சர்வதேச தடையை மீறி, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் எடுத்து வரும் இந்திய கப்பல் நிறுவனத்தின், 21 கப்பல்களுக்கான பயன்பாட்டு சான்றிதழை வரும் 3ம் தேதி முதல் திரும்பப் பெற பிரிட்டன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து, ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ஓராண்டுக்கு மேலாக இந்த சண்டை நீடிக்கும் நிலையில், ரஷ்யாவின் இந்த செயலுக்கு பல்வேறு … Read more

கேமரூன் நாட்டில் பஸ்-லாரி மோதலில் 16 பேர் சாவு

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனின் டூவாலா- ஈடியா நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். லிட்டோரல் பகுதி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை பஸ் இழந்தது. இதனால் எதிரே வந்த லாரி மீது பஸ் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் … Read more

சியுங் சாவ் தீவில் நடைபெற்ற வண்ணமயமான பன் திருவிழா… 60 அடி உயரத்திற்கு உருவாக்கப்பட்ட பன் கோபுரம்

ஹாங்காங்கின் சியுங் சாவ் தீவில் வண்ணமயமான பன் திருவிழா நடைபெற்றது. 60 அடி உயரத்திற்கு உருவாக்கப்பட்ட பன் கோபுரத்தில் ஏறிய 12 வீரர்கள், தங்களால் இயன்ற அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான பன்களை கோபுரத்திலிருந்து பறித்தனர். கோபுரத்தின் உச்சியில் உள்ள பன்னை வெற்றிகரமாக பறிக்கும் நபர், அவரின் குடும்பத்திற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த பன் திருவிழா, கொரோனா காரணமாக 4 வருட இடைவெளிக்கு பிறகு … Read more

2-year-old given life for possessing Bible | பைபிள் வைத்திருந்ததற்காக 2 வயது குழந்தைக்கு ஆயுள்

வாஷிங்டன்,-வட கொரியாவில், ‘பைபிள்’ வைத்திருந்ததற்காக, 2 வயது குழந்தை உட்பட பல கிறிஸ்துவர்களுக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை குற்றம் சாட்டி உள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, அணு ஆயுத விவகாரத்தில் முட்டல் மோதல் நிலவி வருகிறது. இதனால், இந்த இரு நாடுகளுக்கு இடையே எந்த உறவும் இல்லை. இந்நிலையில், 2022ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கையை, அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்: வட கொரியாவில், … Read more

தைவான் எல்லையில் சீன போர் விமானங்கள் அத்துமீறல்

சீனா எச்சரிக்கை சீனாவில் 1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போருக்கு பின்னர் தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன அரசாங்கம் கூறி வருகிறது. அதுமட்டுமின்றி தைவானுடன் வேறு எந்த நாடும் அதிகாரபூர்வ உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் தைவானை தனி நாடாக செயல்பட விடவேண்டும் என சீனாவை அமெரிக்கா வலியுறுத்தியது. அதன்படி தைவானுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் … Read more