American Lawmaker Introduces Bill To Declare Diwali As Federal Holiday In US | தீபாவளிக்கு பொதுவிடுமுறை அளிக்க அமெரிக்கா பார்லி.,யில் மசோதா கொண்டு வந்த எம்.பி.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: தீபாவளி பண்டிகைக்கு, அமெரிக்காவில் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, அந்நாட்டு பார்லிமென்டில் எம்.பி., ஒருவர் மசோதா ஒன்றை கொண்டு வந்துள்ளார். ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலகத்தின் பல நாடுகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், பண்டிகையை மகிழ்ச்சியுடன் நண்பர்களுடன் இணைந்து, இனிப்புகள் பரிமாறியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் கிரேஸ்ட் மெங் என்ற … Read more

இங்கிலாந்தில் தகவல் தொடர்பு பாதிப்பால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானப் போக்குவரத்து 2ம் நாளாக பாதிப்பு

இங்கிலாந்தில் தகவல் தொடர்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானப் போக்குவரத்தில் 2ம் நாளாக பாதிப்பு ஏற்பட்டது. வியாழன் அன்று ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 16 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பெரும்பாலானவை உள்நாட்டு விமானங்கள் என்று தெரிவித்துள்ள, விமான நிறுவனம் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.  இதனிடையே, பெரும்பாலான விமானங்கள் இயக்கப்படுவதாகக் கூறப்பட்ட நிலையில்  42 விமானங்கள் தகவல் தொடர்பு காரணமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி … Read more

ஆய்வகங்களில் குழந்தைகள் பிறக்க வைப்பதை சாத்தியப்படுத்தும் ஜப்பான் டெக்னாலஜி!

Japanese Able To Produce Lab Babies: அசாத்தியத்தை சாத்தியமாக்கும் ஜப்பான் டெக்னாலஜி! ஜப்பானியர்கள் 2028க்குள் ஆய்வகங்களில் குழந்தைகளை உருவாக்கிவிடுவார்கள் என்ற செய்தி அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது

ஸ்பெயின் நாட்டில் கனமழையால் வீதிகளில் ஓடிய வெள்ளத்தைக் கடக்க முயன்ற கார் ஓட்டுநருடன் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு

ஸ்பெயினின் முர்சியா பகுதியில் வீதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தைக் கடக்க முயன்ற கார் ஓட்டுநருடன் அடித்துச் செல்லப்பட்டது. அந்நாட்டில் வறட்சி நீடித்து வந்த நிலையில்,  மத்திய தரைக்கடலை ஒட்டிய நகரப் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், முர்சியா நகரத்தில் வெள்ளத்தைக் கடக்க முயன்ற கார், ஓட்டுநருடன் அடித்துச் செல்லப்பட்டது. Source link

வானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் அவசர கதவை பயணி திறந்ததால் பரபரப்பு

சியோல்: தென் கொரியாவை சேர்ந்த ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று தென்கொரியாவில் உள்ள ஜெஜூ தீவிலிருந்து டேகு நகருக்கு 194 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. விமானம் பறந்து கொண்டிருந்த போது, அவசர கால கதவை பயணி ஒருவர் திடீரென்று திறந்தார். கதவு திறந்த நிலையில் காற்று வேகமாக விமானத்துக்குள் வீச ஆரம்பித்தது. இதனால், பயணிகள் நிலைதடுமாறி அச்சத்தில் உறைந்தனர். சிலர் மயக்கமடைந்து விழுந்தனர்.சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக விமானம் டேகு சர்வதேச விமான நிலையத்தில் … Read more

நடுவானில் விமானத்தின் அவசர கால கதவை திறந்து காத்து வாங்கிய பயணி….!

194 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஆசியானா ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசரகாலக் கதவை பயணி ஒருவர் திடீரெனத் திறந்ததால், பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். தென் கொரியாவில் ஜேஜூ என்ற தீவில் இருந்து அந்த விமானம் டாயேஜூ என்ற நகருக்கு பறந்துக் கொண்டிருந்தது. ஒருமணி நேரப்பயணத்திற்குப் பின் தரையிறங்குவதற்காக 700 அடி உயரத்தில் விமானம் பறந்துக் கொண்டிருந்தபோது பயணி கதவைத் திறந்துவிட்டார். இதையடுத்து அவரை விமான நிலையத்தில் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்தனர்.விமானத்தில் பயணிகள் எடுத்த … Read more

Foreign diplomats inspecting the construction work of a Hindu temple | ஹிந்து கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த வெளிநாட்டு தூதர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் நிறுவப்பட உள்ள முதல் ஹிந்து கோவிலின் கட்டுமானப் பணிகளை, 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டு துாதர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். கலைநயம் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில், சுவாமி நாராயணன் கோவிலுக்கான கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஏறத்தாழ 55 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் இக்கோவிலில், கலைநயத்துடன் கூடிய சிற்ப வேலைபாடுகள் … Read more

சீனாவில் புதிய கரோனா அலை தீவிரம் – வாரத்துக்கு 6.5 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை

பெய்ஜிங்: கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அங்கிருந்து 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது கரோனா வைரஸ் பரவல் குறைந்திருப்பதால் சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு நீக்கியிருக்கிறது. எனினும் கரோனா பெருந்தொற்று முழுமையாக ஓயவில்லை. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி சவுமியா … Read more

ஜப்பானின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிபா மாகாணத்தில் இருந்து 50 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆகப் பதிவானது. இதன் தாக்கம் தலைநகர் டோக்கியோவில் கடுமையாக உணரப்பட்டதன் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. இதையடுத்து ரயில் சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. மேலும், டோக்கியோவுக்கான சர்வதேச நுழைவாயிலான நரிட்டா விமான நிலையத்தில் ஓடுபாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி … Read more

விமானம் தரையிறங்கும் போது அவசரகால கதவை திறந்த பயணி.. கைது செய்த போலீசார்..!

தென்கொரியாவில் ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் நேரத்தில், விமானத்தின் அவசர கால கதவை திறந்துவிட்ட பயணியை போலீசார் கைது செய்தனர். ஜேஜு தீவில் இருந்து 194 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், டேகு சர்வதேச விமான நிலையத்தை தரையிறங்கிய போது, அதிலிருந்த ஒரு நபர் திடீரென கதவை திறந்துவிட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர். எனினும், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அனைவரும் உயிர்தப்பினர். விமானம் தரையிறங்கியவுடன் விமானத்தின் கதவை திறந்த 30 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், விமானம் … Read more