நைஜீரியாவில் இரு கிராமங்களுக்கிடையே கோஷ்டி மோதல் – 30 பேர் உயிரிழப்பு

அபுஜா, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் மத்திய பீடபூமி மாகாணம் மங்கு மாவட்டத்தில் பங்சாய் மற்றும் குபாட் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் அங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் இவர்களது கால்நடைகள் மேய்ந்தன. இதுகுறித்து அந்த நிலத்தின் உரிமையாளர்கள் கால்நடை மேய்ப்பவர்களிடம் தட்டி கேட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் முற்றியதில் அது வன்முறையாக மாறியது. இதனையடுத்து இரு … Read more

ஜப்பானில் ஜி-7 உச்சி மாநாடு: ரஷ்யா மீது கூடுதல் தடை விதிக்க வாய்ப்பு

டோக்கியோ: ஜப்பானில் நடக்கும் ஜி 7 உச்சி மாநாட்டில் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமாவில் மே 19 – 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் ஜப்பான் சென்றுள்ளனர். முதல் நிகழ்வாக, ஹிரோஷிமாவில் உள்ள நினைவரங்க பூங்காவில் உலக நாடுகளின் … Read more

ரஷ்யாவைக் குறிவைத்து மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதிக்க ஜி7 நாடுகள் திட்டம்

உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவை குறிவைத்து புதிய தடைகளை G7 நாடுகள் வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி 7 நாடுகளின் மாநாடு இன்று தொடங்க உள்ளது. இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிகாரி ஒருவர், ரஷ்ய போர்க்களத்திற்குத் தேவையான பொருட்களை முடக்குவதே ஜி 7 நாடுகளின் சமீபத்திய முயற்சியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். ரஷ்ய எரிசக்தி மீதான சர்வதேச நம்பிக்கையை மேலும் குறைப்பது போன்ற திட்டங்களும் கைவசம் இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் … Read more

விண்வெளியில் திருமணம் செய்ய ரூ.1 கோடி கட்டணம்

பூமிக்கு மேலே விண்வெளியில் திருமணம் செய்யும் சேவையை அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்ற நிறுவனம் வழங்குகிறது. இதற்கு ரூ.1 கோடி கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்றைய சோஷியல் மீடியா காலகட்டத்தில் திருமணம் என்பது ஒரு சம்பிரதாயம் என்பதைத் தாண்டி ஒரு ஆடல், பாடல், வெட்டிங் போட்டோகிராஃபி, கப்புள் ரீல்ஸ் என ஒரு பேக்கேஜாக மாறியுள்ளது. இளைய தலைமுறையிடம் தங்கள் திருமணத்தில் ஏதாவது ஒரு புதுமையை புகுத்த வேண்டும் என்ற ஆர்வம் ஆண்டுதோறும் அதிகரித்து … Read more

நீருக்கடியில் உடைந்த கல்லறை போல் காணப்படும் ‘டைட்டானிக்’ கப்பல்

912 ஆம் ஆண்டு பனிப்பாறை மீது மோதி அட்லாண்டிக் கடல் பகுதியில் 3,800 மீட்டர் ஆழத்தில் முழ்கிய டைட்டானிக் கப்பலின், புதிய டிஜிட்டல் ஸ்கேன்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடலில் தண்ணீருக்கடியில் 12 ஆயிரத்து 500 அடியில் இருக்கும் கப்பலின் முதல் முழு அளவிலான டிஜிட்டல் ஸ்கேன், ஆழ்கடல் வரைபடத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோணத்தில் இருந்தும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட படங்களை குழு எடுத்ததன் மூலம் கப்பலின் துல்லியமான 3டி வடிவத்தை உருவாக்க முடிந்தது. ‘Deep-sea … Read more

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு: அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல்

மும்பை: மும்பை தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணாவை, இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு லஷ்கர் -இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 6 அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். இதில் தொடர்புடைய பாகிஸ்தான் அமெரிக்கர் டேவிட் ஹெட்லி மும்பை வந்து செல்ல அமெரிக்காவில் குடியுரிமை சேவை அளித்து வரும் தஹாவூர் ராணா (62) உதவியுள்ளார். இவர் முன்பு பாகிஸ்தான் ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றியவர். கனடா குடியுரிமை பெற்ற இவர் … Read more

போதைப் பொருள் வழக்கில் சிங்கப்பூரில் 3 வாரங்களில் 2 நபருக்கு தூக்கு

கோலாலம்பூர்: கஞ்சா கடத்தல் வழக்கில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட தங்கராஜு சுப்பையா (46) என்பவருக்கு கடந்த ஏப்ரல் 26-ம் தேதி சிங்கப்பூர் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றியது. தங்கராஜிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றாலும் கடத்தலை செல்போன் மூலம் ஒருங்கிணைத்ததாகக் கூறி அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் கடுமையான தண்டனை வழங்கும் அளவுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என எதிர்ப்பு கிளம்பியது. என்றாலும் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் போதைப் … Read more

அமெரிக்காவில் டிரக்கை ஏற்றி 8 பேரைக் கொலை செய்த ஐஎஸ் தீவிரவாதிக்கு 260 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அமெரிக்காவில் டிரக்கை ஏற்றி 8 பேரைக் கொலை செய்த ஐஎஸ் தீவிரவாதிக்கு 260 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு நியூயார்க் மான்ஹாட்டன் நகரில் நுழைந்த தீவிரவாதி ஒருவர் வாடகைக்கு எடுக்கப்பட்ட ட்ரக்கைப் பயன்படுத்தி பாதசாரிகள் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தினான். இதில் 8 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்த சைபுல்லா சைபவ் என்பதும், ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் சைபவ்க்கு தொடர்ச்சியாக … Read more

Consent to extradite terrorist | பயங்கரவாதியை ஒப்படைக்க ஒப்புதல்

நியூயார்க், மஹாராஷ்டிராவின் மும்பை நகருக்குள், கடந்த 2008, நவ., 26ல் நுழைந்த லஷ்கர் பயங்கரவாதிகள் 10 பேர், பல்வேறு இடங்களிலும் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 166 பேர் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதியை தவிர, மற்றவர்களை போலீசார் சுட்டுக் கொன்றனர். அஜ்மல் கசாப் கடந்த 2012ல் துாக்கிலிடப்பட்டார். இந்நிலையில், வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த பாக்., வம்சாவளி தொழிலதிபர் தஹாவுர் ராணாவுக்கு, இந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டியது. … Read more