சினிமா பாணியில் ‘கார் சேஸிங்’ எதுவும் நடக்கவில்லை.. ஹாரி-மேகன் குற்றச்சாட்டிற்கு டாக்சி ஓட்டுநர் மறுப்பு..!

புகைப்படக்கலைஞர்கள் தங்களை 2 மணி நேரம் காரில் இடைவிடாமல் துரத்திவந்ததாக இங்கிலாந்து இளவரசர் ஹாரி குற்றம்சாட்டியிருந்த நிலையில், அவர்களை டேக்சியில் அழைத்துச்சென்ற நபரோ அதனை மறுத்துள்ளார். நியூயார்க் நகரில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிய ஹாரி, மேகன் தம்பதியரை சுயேச்சை புகைப்படக்காரர்கள் ஏராளமான கார்களில் 2 மணி நேரத்திற்கு மேல் துரத்தியதாகவும், அதனால் ஏராளமான வாகனங்கள் விபத்தில் சிக்க இருந்ததாகவும் இளவரசர் ஹாரியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர்கள் பயணித்த டேக்சி ஓட்டுநர் சுக்சரன் … Read more

'ஜி-7' உச்சி மாநாட்டின்போது பிரதமர் மோடியை ஜோ பைடன் சந்தித்து பேசுவார் – வெள்ளை மாளிகை அறிவிப்பு

வாஷிங்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் ‘ஜி-7’ என்ற அமைப்பின் கீழ் இயங்குகின்றன. இந்த ‘ஜி-7’ அமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா நகரில் நாளை (19-ந் தேதி) தொடங்குகிறது. 21-ந் தேதி முடிகிறது. இந்த மாநாட்டுக்கு இந்தியா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், வியட்நாம், இந்தோனேசியா, கொமோரோஸ், குக் தீவு ஆகிய 8 நாடுகள் அழைக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். … Read more

அமேசான் காட்டில் சிக்கிக்கொண்ட 4 குழந்தைகள் 17 நாட்களுக்குப் பின்னர் மீட்பு: நடந்தது என்ன?

பகோடா: கொலம்பிய நாட்டில் அமேசான் காடுகளில் விழுந்து நொறுங்கிய விமானத்திலிருந்து உயிர் பிழைத்த 4 குழந்தைகள் வனப்பகுதிக்குள் காணாமல் போன நிலையில், அவர்கள் 17 நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்தது என்ன? – கடந்த 1-ஆம் தேதி 3 பெரியவர்கள் 4 குழந்தைகள் சென்ற விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது. விபத்தில் 3 பெரியவர்களும் உயிரிழந்துவிட, குழந்தைகள் காட்டுக்குள் திசை மாறிப் போயினர். விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு … Read more

'குவாட்' உச்சி மாநாடு ரத்து: பிரதமர் மோடி சிட்னிக்கு வருவதில் மாற்றமில்லை – ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ்

மெல்போர்ன், பசிபிக் கடல், இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அடுத்த வாரம் நடைபெறுவதாக இருந்தது. ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தலைமையில் நடைபெற இருந்த இந்த உச்சி மாநாட்டில் நமது பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா … Read more

இளவரசி டயானா கார் விபத்தை நினைவுபடுத்திய ஹாரி-மேகனின் கார் சம்பவம்!

இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் அமெரிக்காவில் புகைப்படக்காரர்களால் காரில் துரத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“இதுவரை பார்த்திராத பேரழிவு” – இத்தாலியில் கனமழைக்கு 9 பேர் பலி; 100+ வீடுகள் சேதம்

ரோம்: இத்தாலியின் வடக்குப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, எமிலியா மாகாணத்தில் பெய்த கனமழையினால் அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தினால் தீவிர நிலச்சரிவும் (120-க்கும் அதிகமான நிலச்சரிவு பதிவுச் செய்யப்பட்டுள்ளது) ஏற்பட்டுள்ளது. இதுவரை வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெள்ளத்தால் 37 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஏராளமான விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழையினால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி … Read more

சீனாவில், கிராஸ் நெட்வொர்க் 5-ஜி சேவை அறிமுகம் !

உலகிலேயே முதன்முறையாக சீனாவில் கிராஸ் நெட்வொர்க் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீனர்கள் 62 கோடி பேர் 5-ஜி சேவைகளை பயன்படுத்திவருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், ஒரு நெட்வொர்கின் 5-ஜி சேவை கிடைக்காத இடத்தில், அங்கு எந்த நெட்வொர்க்கிற்கு நல்ல கவரேஜ் உள்ளதோ அதன் 5-ஜி சேவையை பயன்படுத்திக்கொள்ள தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. சீனாவின் 4 முன்னனி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைந்து ஜின்ஜியாங் மாகாணத்தில் சோதனை முயற்சியாக இதனை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தங்குதடையின்றி 5-ஜி சேவை … Read more

ஆப்பிரிக்கா: கானாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – 7 பேர் உயிரிழப்பு

அக்ரா, மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உள்ளன. இவை உரிய அனுமதி பெற்று இயங்கி வரும் அதேவேளையில் உள்ளூர் மக்கள் சிலர் சட்டவிரோதமாக சுரங்கங்களை அமைத்து தங்கத்தை வெட்டி எடுக்கிறார்கள். இதுபோன்ற சட்டவிரோத தங்க சுரங்கங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்வது தொடர்கதையாக உள்ளது. இந்தநிலையில் கானாவின் கிழக்கே அமைந்துள்ள சின்குவா பகுதியில் உள்ள தங்கசுரங்கத்தில் தொழிலாளர்கள் சிலர் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த … Read more

சூடான் உள்நாட்டுப் போரில் கர்ப்பிணி பெண்கள் சிக்கித் தவிப்பு: ஐ.நா. தகவல்

கார்ட்டூம்: சூடானில் நிலவும் உள் நாட்டுப் போர் காரணமாக அங்கு இளம் பெண்களும் , கர்ப்பிணி பெண்களும் தீவிர நெருக்கடியில் சிக்கி உள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் 20 ஆண்டுகால வன்முறைச் சுமைகளை பெண்கள் சுமந்து வருகின்றனர். ஏப்ரல் 25, 2003 அன்று சூடானில் டார்ஃபர் மோதல் ஏற்பட்டதில் சூடான் விடுதலை இயக்கம் சூடான் ராணுவப் படைகளைத் தாக்கியதில் இருந்து அந்நாட்டின் அரசியல் நிலப்பரப்பிற்குள் அதிகாரப் போராட்டம் நடந்து வருகிறது. கண்மூடித்தனமான ஆயுத தாக்குதல்களால் அங்கு பொது … Read more

லண்டன்வாழ் இந்திய தொழில் அதிபர் எஸ்.பி.இந்துஜா மறைவு – போபர்ஸ் வழக்கில் சிக்கி விடுதலை ஆனவர்

புதுடெல்லி, இந்துஜா குழும தலைவர் எஸ்.பி.இந்துஜா என்ற ஸ்ரீசந்த் பர்மானந்த் இந்துஜா நேற்று லண்டனில் காலமானார். அவருக்கு வயது 87. நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர் மறைந்தார். இத்தகவலை இந்துஜா குடும்ப செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இந்துஜாவின் மனைவி மது, கடந்த ஜனவரி மாதம் காலமானார். இவர்களுக்கு ஷானு, வினு என்ற 2 மகள்கள் உள்ளனர். சுதந்திரத்துக்கு முன்பு, ஒன்றுபட்ட இந்தியாவின் கராச்சி நகரில் எஸ்.பி.இந்துஜா பிறந்தார். இந்துஜா சகோதரர்கள் 4 பேரில் இவர்தான் மூத்தவர். அவருடைய … Read more