இந்தியாவுக்கு வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் மாதம் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தெரிவித்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உயரதிகாரி டொனால்ட் லூ, இந்தியா – அமெரிக்கா நல்லுறவிற்கு இந்தாண்டு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக இருக்கும் என்றார். மேலும், செப்டம்பரில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதை பைடன் எதிர்நோக்கியுள்ளதாகவும், ஜி-20 உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளதாகவும் அவர் கூறினார். இதனிடையே, நடப்பாண்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு … Read more

பூஞ்ச் ​​பயங்கரவாத தாக்குதலில் சீன தோட்டக்கள்! பாகிஸ்தானுக்கு உதவுகிறதா சீனா!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​பகுதியில், வியாழக்கிழமை, இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தீவிரவாத தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

அரபு நாடுகளில் விவாதத்தை ஏற்படுத்திய ரெஸா பஹ்லவியின் இஸ்ரேல் பயணம்: காரணம் என்ன?

டெல் அவிவ்: ஈரானில் கடைசியாக ஆட்சி செய்த மன்னர் (ஷா), முகமது ரெஸா பஹ்லவியின் மகன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது அரபு நாடுகளில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. ஈரானில் இஸ்லாமிய புரட்சிக்கு முன்னர் அங்கு மன்னர் ஆட்சிமுறைதான் வழக்கத்தில் இருந்தது. முகமது ரெஸா பஹ்லவி ஈரானின் கடைசி மன்னராக இருந்தார். 1979 ஆம் ஆண்டில் ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு மன்னர் குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு இடம்பெயர்ந்தனர். இந்த நிலையில் மன்னரின் மகன் ரெஸா பஹ்லவி … Read more

டொமினிக் ராப் ராஜினாமா… இங்கிலாந்தின் புதிய துணைப்பிரதமராக ஆலிவர் டவுடன் நியமனம்

லண்டன், இங்கிலாந்தின் துணை பிரதமரும், நீதித்துறை மந்திரியுமான டொமினிக் ராப் தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த மூத்த வழக்கறிஞர் ஆடம் டாலி என்பவரை கடந்த நவம்பரில் பிரதமர் ரிஷி சுனக் நியமித்தார். இந்த விசாரணையின் அறிக்கையை பிரதமரிடம் கடந்த வியாழக்கிழமை ஆடம் டாலி சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், துணை பிரதமர் டொமினிக் ராப் தனது … Read more

உக்ரைனுக்கு 6 Leopard 2A4 டாங்கிகளை அனுப்பிவைத்த ஸ்பெயின்..!

உக்ரைனுக்கு 10 Leopard டாங்கிகள் அனுப்பப்படும் என இம்மாத தொடக்கத்தில் ஸ்பெயின் அறிவித்திருந்த நிலையில், முதற்கட்டமாக 6 Leopard டாங்கிகளை அனுப்பியுள்ளது. Leopard 2A4 டாங்கிகள் மற்றும் 20 M114 APC கவச போர் வாகனங்கள் சாண்டாண்டர் துறைமுகத்தில் (Santander port) இருந்து சரக்கு கப்பலில் உக்ரைனுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவை போலந்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் உக்ரைனுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன. ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட இந்த Leopard டாங்கிகள் 1990 களில் இருந்து பயன்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஜெர்மனி, போலந்து, போர்ச்சுகல் … Read more

செவ்வாய் கிரகத்தை ஆய்வுசெய்துவரும் ரோவரின் சக்கரத்தில் 1 வருடமாக சிக்கியிருந்த கல் விடுபட்டது.!

வாஷிங்டன், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த 2020 ஆம் ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது. மேலும், மண் துகள்கள் உள்ளிட்ட மாதிரிகளையும் பெர்சவரன்ஸ் ரேவர் சேகரித்து வருகிறது. இந்த ரோவர் செவ்வாயின் மேற்பரப்பில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ரோவரின் சக்கரத்தின் ஒரு பகுதியில் சிறிய கல் ஒன்று … Read more

கருக்கலைப்பு மாத்திரைக்கு இப்போதைக்குத் தடையில்லை – அமெரிக்க உச்சநீதிமன்றம்

கருக்கலைப்பு மாத்திரைக்குத் தடை விதிக்கக் கோரும் வழக்கில் சட்டரீதியான வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் இறுதித் தீர்ப்பு வரும் வரை கருக்கலைப்பு மாத்திரையைப் பயன்படுத்தத் தடையில்லை என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு அளித்துள்ளது. மருந்துத் தயாரிப்பு நிறுவனமான டான்கோ லாபரேட்டரீஸ்-ன் மனுவை விசாரித்த நீதிபதிகள் அவசரகால தேவைக்கு மாத்திரையைப் பயன்படுத்தும் கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர். டெக்ஸாஸ் மாவட்ட நீதிபதி விதித்த தடையையும் உச்சநீதிமன்றம் நீக்கியது.ஆயினும் மகளிர் உடல் நலன் மீது குறி வைக்கும் அரசியல் உள்நோக்கத்தை சட்டரீதியாக … Read more

ஐரோப்பாவில் வெப்ப அலையால் கடந்தாண்டில் 15,700 பேர் பலி| Heatwave in Europe kills 15,700 last year

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன் : ஐரோப்பாவில், 2022ல், வெப்ப அலை காரணமாக, 15 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்துள்ளதாக, உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நேற்று, உலக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு ஆகிய மூன்று வாயுக்களின் அளவுகள், 2022ல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தன. வறட்சி, வெள்ளம், வெப்ப அலைகள் ஆகியவை, இந்தியா உட்பட பல நாடுகளை … Read more

சூடான் ராணுவ மோதல்: பலி எண்ணிக்கை 413 ஆக அதிகரிப்பு

கார்டூம், சூடான் நாட்டில் கடந்த 2021 அக்டோபர் மாதம் 25-ம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார். இதனிடையே, ராணுவத்திற்கும் துணை ராணுவத்தின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் … Read more