China warns Taiwan over rapprochement with US China warns Taiwan | அமெரிக்காவுடன் நெருக்கம் தைவானுக்கு சீனா எச்சரிக்கை தைவானுக்கு சீனா எச்சரிக்கை

பீஜிங், சுதந்திரம் என்ற பெயரில் தனியாக பிரிந்து செல்லும் தைவானின் முயற்சியை முறியடிக்க, எங்கள் ராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து தனி நாடாக பிரிந்து சென்ற தைவானை, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவானை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சீனா முயற்சித்து வருகிறது. ஆனால், தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. அந்நாட்டுக்கு தேவையான ஆயுதங்கள், போர் பயிற்சிகளை அமெரிக்கா அளிக்கிறது. இது, … Read more

100 மணி நேரத்தில், 110 பதார்த்தங்கள்.. உலக சாதனை படைத்த நைஜீரிய பெண்..!

நைஜீரியாவைச் சேர்ந்த 27 வயது இளம்பெண், தொடர்ந்து நூறு மணி நேரம் சமைத்து உலக சாதனை படைத்துள்ளார். சமூகவியல் பட்டதாரியும், சமையல் கலை நிபுணருமான ஹில்டா பாஸே, உள்ளூர் உணவுகள், வெளிநாட்டு உணவுகள் என 100 மணி நேரத்தில் 110 உணவு வகைகளை சமைத்து காட்டினார். சமையல் கூடத்தை சுற்றிலும் திரண்ட பார்வையாளர்கள் ஹில்டாவை தொடர்ந்து உற்சாகப் படுத்திய வண்ணம் இருந்தனர். 2019 ஆம் ஆண்டு, தொடர்ந்து 88 மணி நேரம் சமைத்து கின்னஸ் சாதனை படைத்திருந்த … Read more

“இம்ரான் கான் பொதுவெளியில் தூக்கிலிடப்பட வேண்டும்” – பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் பேச்சால் சர்ச்சை

இஸ்லாமாபாத்: இம்ரான் கான் பொதுவெளியில் தூக்கிலிடப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ராஜா ரியாஸ் அகமது கான் பேசும்போது, “நாடு முழுவதும் கலவர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இம்ரான் கானின் ஆதரவாளர்களின் செயலை கண்டு இந்த நாடு அவமானம் கொள்கிறது. இம்ரான் கான் பொதுவெளியில் தூக்கிலிப்பட வேண்டும். ஆனால், நீதிமன்றம் அவரை மருமகனை போல் வரவேற்கிறது. இந்த யூத ஏஜெண்டுடன், நீதிபதிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால், அவர்கள் பாகிஸ்தான் … Read more

0.4% வாக்குகளில் பெரும்பான்மையை தவறவிட்ட எர்டோகன்: துருக்கியில் மே 28-ல் இரண்டாம் கட்ட தேர்தல்

அங்காரா: துருக்கி அதிபர் எர்டோகன் தனது அரசியல் பயணத்தில் மிகக் கடினமான தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறார். துருக்கி பொதுத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 50% வாக்குகள் தற்போதைய அதிபர் எர்டோகன் உட்பட யாருக்கும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து துருக்கியில் வரும் 28-ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்படவுள்ளது. 69 வயதாகும் தய்யீப் எர்டோகன் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சி செய்து வருகிறார். 2003 முதல் 2014 வரை துருக்கியின் பிரதமராக இருந்த அவர், … Read more

பெருவில் இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடுள்ள சோம்பல் கரடி மீட்பு..!

பெரு நாட்டில் இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள தேன் கரடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தெற்கு பெருவின் அரேகிபாவில் உள்ள தேசிய பூங்காக் குழுவினரால் இந்த பெண் தேன் கரடி மீட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தேன் கரடி தற்போது குணமடைந்து வருவதாகவும், தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கும் எனவும் பெருவின் தேசிய வன மற்றும் வனவிலங்கு சேவையின் மேலாளர் லூயிஸ் பெலிப் தெரிவித்துள்ளார். 15 முதல் 30 நாட்கள் வரை சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அந்த தேன் கரடி … Read more

மெக்சிகோவில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு.!

மெக்சிகோ, மெக்சிகோவின் பார்மிங்டனில் உள்ள குடியிருப்புத் தெருவில் 18 வயது நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். போலீசார் வருவதற்குள் மூன்று பேர் இதில் கொல்லப்பட்டனர். மேலும், இரண்டு அதிகாரிகள் உட்பட 9 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரைக் சுட்டுகொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார் என்பது இன்னும் தெரியவில்லை என்று கூறிய போலீசார், அவர் யார் என்றும், ஏற்கெனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டவரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் … Read more

நிலக்கரி சுரங்கத்தின் எல்லையை நிர்ணயிப்பதில் இரு பழங்குடியினரிடையே மோதல்: 15 பேர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியத்தில் நிலக்கரி சுரங்கத்தை எல்லை நிர்ணயம் செய்வதில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நிலக்கரி சுரங்க எல்லை நிர்ணயம் தொடர்பாக கோஹாட் மாவட்டத்தில் பெஷாவரில் இருந்து தென்மேற்கே 35 கிமீ தொலைவில் உள்ள தர்ரா ஆடம் கெக் பகுதியில் சன்னிகேல் மற்றும் ஜர்குன் கெல் பழங்குடியினருக்கு இடையே இந்த சம்பவம் நிகழ்ந்தது. துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரு தரப்பிலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப் … Read more

கீவ் நகரில் ரஷ்யா நடத்திய வழக்கத்துக்கு மாறான வான்வழித் தாக்குதலை முறியடித்த உக்ரைன்

கீவ்: உக்ரைனின் தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்யா நடத்திய வழக்கத்துக்கு மாறான வான்வழித் தாக்குதலை முறியடித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் ராணுவ அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “கீவ் பகுதியில் ரஷ்யா வழக்கத்துக்கு மாறான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. மிகக் குறுகிய நேரத்தில் வெவ்வேறு திசைகளிலிருந்து அடுத்தடுத்து ரஷ்யா தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்யா நடத்திய இந்தத் தாக்குதலில் சுமார் 18 ரஷ்ய ஏவுகணைகளை உக்ரைன் முறியடித்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர். கிவ் நகரின் மேயர் விட்டலி கிளிட்ச்கோ, ரஷ்யாவின் … Read more

வாட்ஸ்ஆப் பயனர்களின் பிரைவஸிக்கு முக்கியத்துவம் அளிக்கும் “சாட்லாக்” என்ற புதிய அம்சம் அறிமுகம்!

வாட்ஸ் ஆப்பில் பயனர்களின் தனி உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சாட் லாக் என்ற புதிய அம்சத்தை மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஷூகர்பெர்க் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன்மூலம், பயனர்களின் அனுமதி இல்லாமல் வெளி நபர்கள் யாரேனும் வாட்ஸ் அப்பை திறந்து பார்த்தாலும் லாக் செய்து வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சாட்டை அவர்களால் காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. லாக் செய்யப்பட்ட சாட்டின் மூலமாக பகிர்ந்து கொள்ளப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை செல்போனில் உள்ள கேலரியில் தானாகவே சேமிக்கப்படாது எனவும் … Read more

Imran scolded the army for starting the party without speaking | பேசாமல் கட்சி துவங்கிடலாமே ராணுவத்தை சீண்டிய இம்ரான்

லாகூர்: ”அரசியல் நடவடிக்கை களில் ஈடுபட்டதற்காக பாகிஸ்தான் ராணுவம் வெட்கப்பட வேண்டும்,” என, அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விமர்சித்துள்ளார். நம் அண்டை நாடான பாக்., ராணுவத்தின் மக்கள் தொடர்பு அமைப்பின் இயக்குனர் மேஜர் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி, முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, ‘நயவஞ்சகர்’ என, சமீபத்தில் விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இம்ரான் கான் நேற்று கூறியதாவது: சர்வதேச அளவில், பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தி, நற்பெயரை நான் சம்பாதித்த போது, … Read more